இந்த ஒரே ஒரு பொருளை வைத்து வீட்டில் உள்ள ஈக்கள், கொசுக்களை விரட்டலாம்; எப்படி தெரியுமா?

First Published | Aug 29, 2024, 12:07 PM IST

சமையலுக்கு மட்டுமல்ல, வீட்டை சுத்தமாக வைக்கவும் புளி உதவுகிறது. புளியின் அமிலத்தன்மை கிருமிகள், பாக்டீரியாக்களை அழித்து, ஈ, கொசுக்களை விரட்டுகிறது.

Tamarind

நாம் தினமும் சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்று புளி. இது உணவின் சுவையை அதிகரிக்க உதவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் இந்த புளி கொசு மற்றும் ஈக்களை விரட்ட உதவுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம் உண்மை . அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Tamarind

புளி பல உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சாம்பார், ரசம், புளிக்குழம்பு, புளி சாதம் என பல உணவுகளுக்கு புளி அவசியம். புளியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தவிர, புளி வீட்டை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் இது அமில பண்புகளையும் கொண்டுள்ளது.

Tap to resize

Tamarind

குறிப்பாக பூஜை பாத்திரங்களை தேய்க்க பலரும் புளியை பயன்படுத்துகின்றனர். மேலும் சமையல் பாத்திரங்களைத் தேய்க்கவும் சிலர் புளியை பயன்படுத்துகின்றனர். இதனால் பாத்திரங்களில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன.

Tamarind

ஈக்கள், கொசுக்கள் மற்றும் பூச்சிகள் வீட்டிற்குள் வராமல் தடுக்கவும் பயன்படுத்தலாம்.. வீடுகளை எவ்வளவு சுத்தம் செய்தாலும் கரப்பான் பூச்சி, ஈ, கொசுக்கள் வீட்டிற்குள் தொந்தரவு செய்கின்றன.  இதை தடுக்க பூச்சிகள் அதிகம் நடமாடும் இடங்களில் புளி பழ விழுதை வைத்தால். அந்த வாசனையால் பூச்சிகள் வராது.  இதனால் வீடு சுத்தமாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.

Tamarind

நீங்கள் வீட்டில் சோப்புகள் மற்றும் லோஷன்கள் தயாரிக்கிறீர்கள் என்றால், அதில் புளி சாறு சேர்க்கவும். இப்படி செய்வது சருமத்திற்கும் நல்லது. புளியில் டானின்கள் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. பருத்தி, கம்பளி மற்றும் பிற துணிகளை சுத்தம் செய்யலாம். 

Latest Videos

click me!