Curd
நம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் தயிரில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
Cinnamon powder
பிரபலமான இந்திய மசாலாப் பொருட்களில் ஒன்றான இலவங்கப்பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பயோடெக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே தயிர் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக பெண்களின் ஆரோக்கியத்திற்கு இது ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
Cinnamon powder
இலவங்கப்பட்டை பொடியை தயிரில் கலந்து சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். இது இன்சுலின் உணர்திறனையும் மேம்படுத்துகிறது.
Cinnamon powder
இலவங்கப்பட்டையை பொடி செய்து தயிரில் கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். பிசிஓஎஸ் அல்லது பிசிஓடி போன்ற நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, இலவங்கப்பட்டை மற்றும் தயிர் ஆகியவை சிறந்த தீர்வாகும்.
Cinnamon powder
இலவங்கப்பட்டை பொடியுடன் கலந்துள்ள தயிரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஹார்மோன் சமநிலையின்மையை சமாளித்து மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.
Cinnamon powder
தொடர்ந்து தயிர்-இலவங்கப்பட்டை சாப்பிடுவது மன அழுத்தத்தை நீக்கி மனதை அமைதிப்படுத்தும். இலவங்கப்பட்டை மற்றும் தயிர் பயன்பாடு பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்கு உதவுகிறது. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இலவங்கப்பட்டை இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.