ஏனெனில், உடல் எடை அதிகரிப்பால் நாம் பல கடுமையான நோய்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால்தான் அனைவரும் உடல் எடையை குறைக்க விரும்புகிறார்கள். சொல்லப்போனால், பல வீட்டு வைத்தியங்கள் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மூலமே எளிதாக எடையை குறைக்க முடியும். எனவே, உணவில் சில பொருட்களை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அவை என்ன என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்வோம்.
ஓட்ஸ்:
தினமும் ஒரு கோப்பை ஓட்ஸை எடுத்துக்கொள்வதன் மூலம், நமது உடலுக்கு தேவையான புரதம் கிடைப்பதோடு மட்டுமல்லாது, நார்ச்சத்து, தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகம் கிடைக்கிறது. குளிர்காலத்தில் நமக்கு வழக்கமாக ஏற்படும் சளி மற்றும் இருமலை தடுப்பதுடன், நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க இந்த ஊட்டச்சத்துக்கள் பயன்படுகின்றன.
food
ஜவ்வரிசி:
ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. எனவே, ஜவ்வரிசி பொதுவாக விரத நேரத்தில் உண்ணும் லேசான உணவாகும். ஆனால் நீங்கள் தினமும் இரவு உணவில் ஜவ்வரிசியை உட்கொண்டால், உங்கள் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
பாசிப்பருப்பு
பாசிப்பருப்பில் உங்கள் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. அதனால்தான் இரவு உணவில் பாசிப்பருப்பு சாப்பிட வேண்டும்.