Egg Cutlet : குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்தி ஸ்நாக்ஸ் ''முட்டை கட்லட்''!

First Published | Sep 9, 2022, 7:26 AM IST

பஜ்ஜி போண்டா வடை என சாப்பிட்டு போர் அடிப்பவர்களுக்கு புதுமையான ஸ்நாக்ஸ் வகையாக இந்த கட்லட்-ஐ டிரை செய்து பாருங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் வகையிலும், ஆரோக்கியம் நிறைந்ததும் கூட. புரோட்டீன் நிறைந்த முட்டை கட்லட் எப்படி செய்வது என இந்தப்பதிவில் காணலாம்..
 

தேவையான பொருட்கள்

நான்கு முட்டை

2 ஸ்பூன் கறிமசாலா தூள்

தேவையான அளவு உப்பு

கொத்தமல்லி தலை - கொஞ்சம்

ஒரு பெரிய வெங்காயம்

4 துண்டு பிரட்

அரை ஸ்பூன் சோள மாவு

2 ஸ்பூன் கடலை மாவு
 

செய்முறை

முதலில் முட்டைகளை வேகவைத்து பிறகு அதனை தோல் உரித்து ஒரு கிண்ணத்தில் போட்டு கையால் பிசைந்து கொள்ள வேண்டும். அதோடு கறிமசாலா, உப்பு, கொத்தமல்லி மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து மொத்தமாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இதனை சப்பாத்திக்கு செய்வது போன்று நீளவாட்டில் உருண்டையாக்கி சின்ன சின்ன துண்டுகளாக பிடித்து வைத்து கொள்ள வேண்டும்.

Tap to resize

பின்னர், பிரட் ரொட்டி துண்டுகளை மிக்சியில் போடு தூளாக அரைத்து அதனுடன் சோள மாவையும் சேர்த்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். மற்றொரு தட்டில் கடலை மாவினை சிறிதளவு நீர் சேர்த்து கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
 

ஏற்கனவே பிடித்து வைத்துள்ள முட்டை மசாலா துண்டுகளை கடலை மாவு தட்டில் உருட்டி எடுத்து, பின்னர் அதனை பிரட் ரொட்டி தூளில் உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து தூண்டுகளையும் இவ்வாறாக ரெடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.

பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். (கட்லெட் துண்டுகள் மூழ்காத அளவிற்கு எண்ணெய் ஊற்றினால் போதும்) எண்ணெய் காய்ந்தவுடன் தயார் செய்து வைத்துள்ள கட்லெட் துண்டுகளை போடவும். இருபுறமும் பொன்நிறமாக வேகும் வரை திருப்பி திருப்பி விட்டு 1 நிமிடம் வரை எண்ணையில் போட்டு எடுத்தால் ருசியான முட்டை கட்லெட் ரெடி

Latest Videos

click me!