Queen elizabeth: பிறப்பு முதல் இறப்பு வரை... எலிசபெத் ராணியின் காலத்தால் அழியாத வாழ்க்கை படங்கள்..

First Published Sep 9, 2022, 10:52 AM IST

Queen Elizabeth: இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் தனது 96 வயதில் காலமானார். சிறுமி முதல் ராணி வரை அவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எலிசபெத் ராணி ஏப்ரல் 21, 1926 இல்21 ஏப்ரல் 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்தவர். தமது தந்தை, அப்போதைய யார்க் கோமகன் ஆல்பர்ட், மற்றும் தாய் முன்னாள் லேடி எலிசபெத் போவ்ஸ்-லியான் ஆகியோர் கைகளில் ராணி எலிசபெத்.
  


இளவரசி எலிசபெத் தனது லண்டன் வீட்டில் 1928 இல் எடுத்த புகைப்படம் இதுவாகும்.  ராணி  முதல் முதலில் 1952 இல் அரியணை ஏறியபோது அவளுக்கு 25 வயது.

எலிசபெத், 1930இல் பிறந்த அவரது சகோதரி மார்கரெட் ரோஸ் இருவரும் வீட்டிலேயே கல்வி கற்றனர். அப்போது புன்னகையுடன் இருக்கும் ராணி எலிசபெத்.

17 வயதில், 1947 ல் எலிசபெத்,  தனது இளம் வயதில் ஒளிபரப்பில், இங்கிலாந்தின் குழந்தைகள் மகிழ்ச்சியும் தைரியமும் நிறைந்தவர்கள் என்று பேசினார்.

மே 29, 1942 இல் கிங் ஜார்ஜ் VI இளவரசி எலிசபெத்தை ராயல் ஆர்மி ரெஜிமென்ட்டில் கெளரவ கர்னலாக மாற்றினார்.

1936இல் அரசர் எட்டாம் எட்வர்ட் மரணத்தை அடுத்து, எலிசபெத்தின் தந்தை அரசர் ஆறாம் ஜார்ஜ் ஆனார். எலிசபெத் அரியணைக்கான வாரிசானார்.

மேலும் படிக்க...வரலாற்று சாதனை படைத்து மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்.. எப்படி தெரியுமா?


நவம்பர் 20, 1947 இல், எலிசபெத் கிரீஸ் மற்றும் டென்மார்க்கின் அரச குடும்பங்களில் பிறந்த,தமது தூரத்து உறவினரான ஃபிலிப் மவுன்ட்பேட்டனை மணந்தார். 

ஒரு பிரிட்டிஷ் குடிமகனாக ஆன அவர் தனது கிரேக்க பட்டத்தை துறந்த பிறகு, பிலிப் அவரது ராயல் ஹைனஸ் இளவரசர் பிலிப், எடின்பர்க் டியூக் ஆனார்.

அவரது தந்தை, பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது, நாட்டின் ராணியாக தனது  25 வயதில் பதவியேற்றவர்.

பின்னர், ஜூன் 1953இல், வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் எலிசபெத் ராணி ஆக முடிசூட்டப்பட்டார்.இப்போது 96 வயதாகும் ராணி எலிசபெத், 3 நாட்களுக்கு முன்பு பிரிட்டனின் புதிய பிரமதராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.


இவர்களுக்கு இரண்டு குழந்தை பிறந்தது, முதல் குழந்தை சார்ல்ஸ் 1948ஆம் ஆண்டு பிறந்தார். அவரைத் தொடர்ந்து சார்ல்ஸின் சகோதரி ஆன் 1950ஆம் ஆண்டு பிறந்தார்

மேலும் படிக்க...வரலாற்று சாதனை படைத்து மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்.. எப்படி தெரியுமா?

Image Credit: Getty Images

எலிசபெத் தனது வாழ்நாள் முழுவதும் தனது தாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். எலிசபெத் தாயுடன் சிறுவயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ 

கடந்த 2021-ம் ஆண்டு ராணி எலிசபெத்தின் கணவரும், எடின்பரோ கோமகனுமான பிலிப் காலமானார். கணவர் மறைவையடுத்து அவரது உடல் நலம் குன்றியது.

இதையடுத்து, பிரிட்டன் ராணி எலிசபெத் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து  தனது 96 வயதில் காலமானார். அப்போது, ராணியின் மூத்த மகனான இளவரசர் சார்லஸின் மகன் வில்லியமும் அவருடனேயே இருந்தார். 

முன்னதாக, ஏப்ரல் 2016 இல் ராணி தனது கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் இரண்டு இளைய பேரக்குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் இதோ..

மேலும் படிக்க...வரலாற்று சாதனை படைத்து மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்.. எப்படி தெரியுமா?

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தி.  முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் தாயார் ஆவார். இவர் இளவரசி எலிசபெத் ராணியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம்.

உலகையே அன்பினால் அரவணைத்து அன்பு, நேசம், பாசம், கருணை இவை அனைத்திற்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் திகழ்ந்தவர். இவர் இளவரசி எலிசபெத் ராணியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம்.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் கியானி ஜைல் சிங். இவர் 1982ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை குடியரசு தலைவராக இருந்துள்ளார். அப்போது இவர் இளவரசி எலிசபெத் ராணியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம்.

மேலும் படிக்க...வரலாற்று சாதனை படைத்து மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்.. எப்படி தெரியுமா?

click me!