கடலை மாவில் 'இதை' கலந்து ஃபேஸ் பேக்கா போடுங்க.. ஒரே நாளில் முகம் பளபளனு மாறிடும்!!

First Published | Sep 12, 2024, 11:34 AM IST

Gram Flour Face Pack : முகத்திற்கு கடலை மாவை பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய முகம் பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருக்க வேண்டும் என்று எப்போதும் விரும்புவார்கள். இதற்காக சில பெண்கள் பணம் செலவழித்து பியூட்டி பார்லருக்கு சென்று தங்கள் முகத்தை அழகு படுத்துகிறார்கள். இன்னும் சில பெண்களோ வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே தங்களது முகத்தை பொழிவடைய செய்கிறார்கள். 

அப்படி வீட்டில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் கடலை மாவு. ஆம் கடலை மாவு சமையலுக்கு மட்டுமின்றி அழகு பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தான் நம்முடைய முன்னோர்கள் சோப்புக்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தினார்கள்.

இதையும் படிங்க:  தேனை வச்சி இந்த 6 ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க.. உங்க முகம் தங்கம் போல ஜொலிக்கும்!!

முகத்திற்கு கடலை மாவை பயன்படுத்தினால் பல நன்மைகள் கிடைக்கும். உதாரணமாக, பருக்கள் குறையும், கரும்புள்ளிகள் நீங்கும், தழும்புகள் மறையும், முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் நீக்கும், முகத்தில் வழியும் எண்ணெயை குறைக்கும் மற்றும் முதுமை எதிர்த்து போராடும் போன்றவையாகும்.

உங்களுக்கு தெரியுமா.. கடலை மாவு எல்லா வகையான சருமத்திற்கும் பயன்படுத்தலாம். மேலும் இதில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள், சருமத்தில் இருக்கும் அழுக்கை நீக்கி, முகத்தை பொலிவடைய செய்யும். இப்படி பல நன்மைகள் நிறைந்துள்ள இந்த மாவில் சில பொருட்களை கலந்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தினால் முகத்தின் அழகை இன்னும் அழகாக காட்டும். எனவே, இன்றைய கட்டுரையில் கடலைமாவை கொண்டு சில பேஸ் பேக்குகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  ஃபேஸ் பேக் யூஸ் பண்ணும் போது 'இந்த' தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க..!!

Tap to resize

முகம் பொலிவாக இருக்க : 

தேவையான பொருட்கள் : 

கடலை மாவு - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பால் - 1 ஸ்பூன்
கிளசரின் - 2 துளிகள்
ரோஸ் வாட்டர் - சிறிதளவு

பயன்படுத்தும் முறை : மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு, அதை நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு அந்த பேஸ்ட்டை உங்கள் முகத் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்கு தடவி, சுமார் 15 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரை முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால், உங்கள் முகம் பொலிவாகும்.

பருக்களை போக்க : 

தேவையான பொருட்கள் :

கடலை மாவு - 2 ஸ்பூன்
வெள்ளரிக்காய் சாறு - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - சிறிதளவு

பயன்படுத்தும் முறை : முகத்தில் அசிங்கமாக இருக்கும் பருக்களை போக்க, மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் ஒரு பெளலில் எடுத்துக் கொள்ளுங்கள். பின் அவற்றை நன்கு கலந்து, அதை உங்கள் முகத்தில் தடவி, 20 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவுங்கள். இந்த இந்த ஃபேஸ் பேக்கை, நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கிவிடும்.

கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தை போக்க : முகத்திற்கு அழகை கூட்டி தருவது கண்கள் தான். அந்த வகையில், உங்கள் கண்களை சுற்றி அசிங்கமாக கருவளையம் இருக்கிறதா? அப்படியானால் அவற்றை போக்க இண்டு ஸ்பூன் கடலை மாவு, சிறிதளவு டீ டிகாஷனை ஒரு பெளலில் எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதை நன்கு கலந்து பிறகு அந்த பேஸ்ட்டை உங்களது முகத்தில் தடவி, சுமார் 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். இப்படி செய்து வந்தால் முகத் கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கும்.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க : 

தேவையான பொருட்கள் :

கடலை மாவு - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தயிர் - சிறிதளவு

பயன்படுத்தும் முறை : முகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை போக்க, ஒரு பெளலில் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் எடுத்து நன்றாக கலந்து, அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி, சுமார் 20 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பின் முகத்தை குளித்த நீரில் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கும்.

முகத்தில் இருக்கும் சுருக்கத்தை நீக்க : 

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க முதலில், ஒரு பெளலில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு மற்றும் தேவையான அளவு தக்காளி சாறு கலந்து, பிறகு அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சுமார் 10 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, குளிர்ந்த நீரில் முகத்தில் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும்.

முகத்தில் வழியும் எண்ணெயை போக்க : 

உங்கள் முகத்தில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் வழிக்கிறது என்றால், ஒரு பௌலில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து, அந்த பேஸ்ட்டை உங்களது முகத்தில் தடவி சுமார் 20 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவுங்கள். இந்த ஃபஸ் பேக்கை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால், உங்கள் முகத்தில் இருக்கும் எண்ணெயை பசை நீங்கும்.

Latest Videos

click me!