உருளைக்கிழங்கு முதல் தக்காளி வரை; இதெல்லாம் இந்தியாவை சேர்ந்தது இல்லையா? அப்ப எந்த ஊர்?

Published : Sep 12, 2024, 09:58 AM ISTUpdated : Sep 12, 2024, 10:22 AM IST

இந்தியாவில் பிரபலமான பல உணவுகள் உண்மையில் வேறு நாடுகளைச் சேர்ந்தவை. உருளைக்கிழங்கு, பனீர், பப்பாளி, தேநீர், அன்னாசி, மிளகாய், ஜிலேபி மற்றும் தக்காளி ஆகியவை இந்தியாவில் பிரபலமாக இருந்தாலும், அவை தென் அமெரிக்கா, பெர்சியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து வந்தவை.

PREV
15
உருளைக்கிழங்கு முதல் தக்காளி வரை; இதெல்லாம் இந்தியாவை சேர்ந்தது இல்லையா? அப்ப எந்த ஊர்?
Famous Food Items Not Orginate In India

இந்தியாவின் பிரபலமாக அறியப்படும் சில உணவுகளை நம் நாட்டை சேர்ந்தது அல்ல. ஆம். மற்ற நாடுகளை சேர்ந்த சில உணவுகளும் இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவாக மாறி உள்ளன. அப்படிப்பட்ட சில உணவுகள் குறித்தும் அவை எந்த நாட்டை சேர்ந்தவை என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

25
Paneer

உருளை கிழங்கு 

உருளை கிழங்கு இந்தியாவின் தவிர்க்க முடியாத உணவாகும். உருளைக்கிழங்கு வறுவல், உருளைக்கிழங்கு சிப்ஸ், ஃப்ரெஞ்சு பிரைஸ் என பல உருளைக்கிழங்கு உணவுகள் பலரின் ஃபேவரைட் உணவுகளாக உள்ளன. ஆனால் உருளை கிழங்கின் பூர்வீகம் இந்தியா இல்லை.

தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட உருளைக்கிழங்கு உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள காய்கறியாக உள்ளது. இவைபோர்த்துகீசிய மாலுமிகளால் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

பனீர்

இந்திய உணவு வகைகளில் பனீர் பிரதானமாக இருக்கிறது. பனீர் பட்டர் மசாலா, பனீர் 65, பனீர் ஃபிரைடு ரைஸ் என பல உணவுகள் பிரபலமாக உள்ளன. புரோட்டீன் நிறைந்துள்ள பனீர் சைவ உணவுகள், தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பனீர் உண்மையில் பெர்சியாவில் உருவானது. இது பாரசீக மற்றும் ஆப்கானிய ஆட்சியாளர்களால் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பனீர் உள்ளூர் உணவுகளுடன் ஒருங்கிணைந்ததாக மாறியது.

35
Tea

பப்பாளி

இந்தியாவின் பிரபலமான பழங்களில் ஒன்றாக கருதப்படும் பப்பாளி பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டுள்ளது. வெப்ப மண்டல பழமான பப்பாளி தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. பப்பாளி பழங்களை சாலட் ஆகியவற்றில் கலந்தோ அல்லது தனியாகவோ சாப்பிடலாம். மேலும் பப்பாளி அரைத்து ஜூஸாகவும் குடிக்கலாம்.

தேநீர்

இந்தியாவின் தவிர்க்க முடியாத பானங்களில் டீ முக்கியமானது, காலை எழுந்த உடனே பலரும் டீ உடன் தான் தங்கள் நாளை தொடங்குகின்றனர். காலை, மதியம், மாலை என பல வேளைகளிலும் டீ குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். சீனாவில் தோன்றிய தேயிலை, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் காரணமாக இந்தியாவிற்குள் நுழைந்தது. தற்போது உலகின் பிரபலமான உணவு பொருளாகவும் டீ மாறி உள்ளது. அதுமட்டுமின்றி ஆங்கிலேயர்கள் காலத்தில் தான் இந்தியாவில் தேயிலை தோட்டங்களும் தொடங்கப்பட்டது. இன்று இந்தியா உலகில் அதிகம் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. க்ரீன் டீ, பிளாக் டீ என பல வடிவங்களில் மக்கள் டீ யை பயன்படுத்தி வருகின்றனர்.

45
Capsicum

அன்னாசிப்பழம்

இந்தியாவின் பிரபலமான பழங்களில் அன்னாசிப் பழமும் ஒன்று. இந்த பழம தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது, குறிப்பாக பிரேசில் மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படும்.. ஐரோப்பிய வர்த்தகர்கள் இதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினர், அன்னாசி பழத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது.

கேப்சிகம்

பெல் பெப்பர்ஸ் என்றும் அழைக்கப்படும், ஃபிரைடு ரைஸ், கிரேவி வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கேப்சிகம் மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. ஸ்பெயின் 1493 இல் அவற்றை பயிரிடத் தொடங்கியது, 16 ஆம் நூற்றாண்டில், கேப்சிகம் இந்தியாவிற்குள் நுழைந்தது. 

55
Tomato

ஜிலேபி

இந்தியாவின் பிரபலமான இனிப்பு வகைகளில் ஜிலேபி தவிர்க்க முடியாததாகும். மத்திய கிழக்கில் உருவானது இந்த இனிப்பு பாரசீக மற்றும் அரேபியர்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது பலரின் ஃபேவரைட் இனிப்பு வகையாகவும் ஜிலேபி இருக்கிறது.

தக்காளி

இந்திய சமையலில் தக்காளி என்பது தவிர்க்க முடியாத பொருளாகும். பெரும்பாலான இந்திய உணவுகளில் தக்காளி பிரதான பொருளாக உள்ளது. ஆனால் தக்காளியின் பூர்வீகம் இந்தியா இல்லை. தென் அமெரிக்காவைச் சேர்ந்த தக்காளி போர்த்துகீசிய வணிகர்களால் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. உலகளவில் இன்று அதிகம் தக்காளி உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories