
Tips to Control Insects and Lizards at Home During Summer : கோடை காலத்தில் வெப்பம் மட்டுமல்ல, வீட்டிற்கு அலையாத விருந்தாளியாக வரும் பூச்சிகள் மற்றும் பல்லிகள் வருவதும் அதிகரிக்கும். இவை வீட்டில் மூலை முடுக்குகளில் தங்கி நமக்கு தொல்லை தரும். மேலும் சில சமயங்களில் இவற்றால் நோய்களும் வரும். கோடையில் கொளுத்தும் வெயிலால் வெப்பத்தை தாங்க முடியாமல் அவை வீட்டிற்குள் வந்து தஞ்சமடைகின்றனர். ஆனால் தொல்லையாக இருக்கும் இவற்றை வீட்டில் இருந்து மிக எளிதாக விரட்டுவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
வீட்டை சுத்தமாக வை!
முதலில் வீடு சுத்தமாக இருந்தால் மட்டுமே வீட்டிற்குள் பல்லி, பூச்சிகள் வராது. எனவே வீட்டு சுகாதாரத்தின் மீது அதிக கவனம் செலுத்துவது ரொம்பவே முக்கியம். இதற்கு நீங்கள் தினமும் வீட்டை தூத்து பெருக்க வேண்டும். அவ்வப்போது துடைத்தால் பூச்சிகள், பல்லிகள் வராது மற்றும் கிருமிகளும் தாங்காது. மேலும் சாப்பிட்ட உணவுகள் கீழே சிதறியிருந்தால் உடனே அப்புறப்படுத்திவிடுங்கள். அதுபோல சாப்பிட்ட பாத்திரங்களை அவ்வப்போது கழுவ வேண்டும். முக்கியமாக வீட்டில் இருக்கும் குப்பைகளை உடனுக்குடனே அகற்றிவிடுங்கள்.
கொசு வலை:
வீட்டில் ஜன்னல் மற்றும் கதவுகளின் ஓரங்களில் இருக்கும் சிறிய துளை வழியாக பூச்சிகள், பல்லிகள் வீட்டிற்குள் வரக்கூடும். எனவே ஜன்னல்களுக்கு கொசுவலையை போடுங்கள். அதுபோல மாலை வேலையில் கதவை திறந்து வைக்காமல் மூட வேண்டும். அப்போதுதான் வீட்டிற்குள் பூச்சி, பல்லிகள் ஏதும் வராது..
இதையும் படிங்க: கோதுமை மாவில் சீக்கிரமே வண்டு வராமல் தடுக்கும் '5' சூப்பர் டிப்ஸ்
மூலிகைகள் :
பூச்சிகளை இயற்கை முறையில் விரட்ட சில மூலிகைகளை பயன்படுத்தலாம். ஏனெனில் பூச்சிகளுக்கு சில குறிப்பிட்ட மூலிகைகளில் இருந்து வரும் வாசனை பிடிக்காது. உதாரணமாக வேப்பிலை, நொச்சி இலை போன்றவையாகும். இவற்றை நீங்கள் வீட்டில் வைத்தால் பூச்சிகள் வருவது தடுக்கலாம். அதுபோல கடைகளில் இயற்றையான பூச்சிகளை விரட்ட திரவியங்கள் விற்கப்படுகின்றன அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: மெத்தைல மூட்டை பூச்சிகள் தொந்தரவா? தடயமே இல்லாம விரட்ட '3' டிப்ஸ்
வெங்காயம் மற்றும் பூண்டு :
சமையலறையில் பயன்படுத்தப்படும் வெங்காயம, பூண்டு, முட்டை ஓடு போன்றவை பூச்சி, பல்லிகளை விரட்ட பயன்படுத்தலாம். ஏனெனில் இவற்றிலிருந்து வரும் கடுமையான வாசனை பூச்சி, பல்லிகளுக்கு பிடிக்காது. எனவே இவற்றை கிச்சன், பாத்ரூம் மற்றும் ஜன்னல்களில் ஓரங்களில் வைக்கலாம்.
வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு:
ஒரு ஸ்பிரே பாட்டிலில் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து அதை பூச்சி, பல்லிகள் வரும் இடத்தில் தெளிக்க வேண்டும் இதனால் அவற்றின் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள் குறிப்பாக, கிச்சன், பாத்ரூம் மற்றும் ஜன்னல்களில் ஓரங்களில் தெளிப்பது ரொம்பவே நல்லது.
கற்பூரம் :
கற்பூரத்தில் இருந்து வரும் வாசனை பூச்சி, பல்லிகளை விரட்ட உதவும். எனவே உங்கள் வீட்டின் ஸ்டோர் ரூம், பாத்ரூம், அலமாரி, கிச்சன் போன்ற இடங்களில் கற்பூரத்தை வைப்பதன் மூலம் பூச்சி பல்லிகள் வருவதை சுலபமாக தடுக்கலாம்.
குறிப்பு : மேல சொன்ன விஷயங்களின் தவிர வீட்டில் சாப்பாட்டு பாத்திரங்களை எப்போதுமே மூடி வைக்க மற்க்காதீர்கள். ஏனெனில் உணவுகளின் வாசனை பூச்சி பல்லிகளை ஈர்க்கும். உணவில் அவை விழுந்தால் உணவு கெட்டுப் போவது மட்டுமில்லாமல் நோய்களும் பரவும்