வீட்டுல சிலந்தி தொல்லையா? இதை செய்தா இனி வரவே வராது!

Published : Apr 22, 2025, 12:12 PM ISTUpdated : Apr 22, 2025, 12:22 PM IST

வீட்டில் சிலந்திகள் அதிகமாக இருந்தால் அவற்றை விரட்ட உதவும் சில எளிய குறிப்புகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
16
வீட்டுல சிலந்தி தொல்லையா? இதை செய்தா இனி வரவே வராது!

How to Get Rid of Spiders at Home Naturally : வீட்டில் சிலந்தி இருப்பது பொதுவான விஷயம் தான். சிலந்திப்பூச்சி எளிதாக இனப்பெருக்கம் செய்யக்கூடியது என்பதால் வீட்டில் எல்லா மூலைகளிலும் சிலந்திகள் இருக்கும். மேலும் சிலந்தி வலையானது வீட்டின் அழகை கெடுத்துவிடும். வீட்டில் சிலந்தி பூச்சி இருந்தால் கண்டிப்பாக விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

26
Get rid of spiders naturally

சில சிலந்திகள் கடிக்கும் தன்மையை கொண்டது என்பதால், அதன் விளைவாக சருமத்தில் தொற்று நோயை உண்டாக்கும். சில சமயங்களில் நீண்ட கால வலியை கூட ஏற்படுத்தும். எனவே வீட்டில் சிலந்தி வெறும் கூடுதானே கட்டுகிறது, அது பெரிய விஷயம் அல்ல என்று நீங்கள் அலட்சியமாக இருக்காமல், அவற்றை வீட்டில் இருந்து ஒரேடியாக விரட்டுவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:   வீட்டில் இருக்கும் பல்லி, எறும்பு கரப்பான்களை ஒழிக்க '1' பைசா செலவில்லாத '5' வழிகள்!!

36
Get rid of spiders naturally

வினிகர் : 

வினிகரில் இருந்து வரும் வாசனை சிலந்திக்கு பிடிக்காது. எனவே அவற்றின் உதவியுடன் சிலந்தியை வீட்டிலிருந்து சுலபமாக விரட்டி அடிக்கலாம். இதற்கு ஒரு ஸ்பிரே பாட்டிலில் வினிகரை ஊற்றி அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து அதை சிலந்தி இருக்கும் இடம் மற்றும் வீட்டை சுற்றித் தெளிக்க வேண்டும்.

யூகலிப்டஸ் மரம் :

உங்கள் வீட்டு தோட்டத்தில் யூகலிப்டஸ் மரத்தை நடுங்கள் அதிலிருந்து வரும் வலுவான வாசலை சிலந்தியை விரட்ட உதவுகிறது. குறைந்த பராமரிப்பு மற்றும் வலுவான நறுமணத்துடன் சிலந்திகளை விரட்டும்.

46
Get rid of spiders naturally

சிட்ரஸ் :

சிலந்திகளுக்கு சிற்றஸ் நறுமணங்கள் பிடிக்காது. எனவே சிட்ரஸ் நறுமணம் கொண்ட கிளீனர்கள் மற்றும் பர்னிச்சர் பாலிஷ் ஆகியவற்றை பயன்படுத்தவும். மேலும் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் சிட்ரஸ் செடிகளை நடலாம் இதனால் சிலந்திகள் உங்கள் வீட்டிற்குள் நுழைவது தடுக்கப்படும்.

பூண்டு மற்றும் கிராம்பு :

குழந்தைகளுக்கு பூண்டு மற்றும் கிராம்பில் இருந்து வரும் வாசனை பிடிக்காது எனவே இவை இரண்டிலிருந்தும் சாரி பிரித்தெடுத்து அதை தண்ணீரில் கலந்து அந்த நீரை உங்களது வீட்டின் சுவர்கள் கதவுகள் ஜன்னல்கள் மற்றும் மரங்களில் தெளிக்கவும்.

56
Get rid of spiders naturally

வெளிப்புற விளக்கு :

பொதுவாக வெளிச்சம் அதிகமாக இருக்கும் இடங்களில் தான் பூச்சிகள் வரும். சிலந்திகளும் அப்படித்தான். எனவே வெளிப்புற விளக்குகளில் பயன்படுத்தவில்லை என்றால் அதை அனைத்து வையுங்கள். அதுபோல உங்கள் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். வெளிப்புற விளக்குகளை அனைத்து பின் வீட்டிற்குள் எரியும் விளக்கால் பூச்சிகள் உள்ளே வரக்கூடும். எனவே வெளிப்புற விளக்குகளை அனைத்து உடனே உங்கள் வீட்டின் கதவு ஜன்னல்களை மூடி விடுங்கள்.

இதையும் படிங்க:  வீட்டுல மாப் போடும்போது இந்த 3 தவறுகள் செய்யாதீங்க..!

 

66
Get rid of spiders naturally

நினைவில் கொள் :

வீடு மற்றும் வீட்டின் சுற்றுப்புறத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் சிலந்தி மட்டுமல்ல எந்த விதமான பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

Read more Photos on
click me!

Recommended Stories