How Often To Shave Your Beard Per Week : தற்போது புது புது விதமான ஸ்டைலில் தாடி வைப்பது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. பலர் பெரிய தாடி வைக்க விரும்புகிறார்கள். சிலர் சிறிய அளவில் தாடி வைக்க விரும்புகிறார்கள். அதே சமயம் சிலரோ தினமும் ஷேவ் செய்வார்கள். மேலும் பலர் தங்களது விருப்பத்திற்கு ஏற்றபடி தாடி அமைப்பை மாற்றிக் கொள்கிறார்கள்.
25
How Often To Shave Your Beard Per Week
மேலும் பலர் வாரக் கணக்கில், மாதக் கணக்கில் என ஷேவ் செய்யாமல் அடி வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். சேவ் செய்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அது நம்முடைய ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்பை கொண்டுள்ளது தெரியுமா? தினமும் ஷேவ் செய்யலாமா அல்லது வாரத்திற்கு ஒரு முறை மட்டும் தாடியை ஷேவ் செய்தால் போதுமா?இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
35
How Often To Shave Your Beard Per Week
நிபுணர்கள் சொல்வது என்ன?
ஷேவ் செய்வதை பற்றி குறித்து நிபுணர்கள் கூறுகையில், நாள் முழுவதும் வெளியில் இருந்தால் முகம் மற்றும் தாடியில் தூசிகள், அழுக்குகள், கிருமிகள், எண்ணெய் மற்றும் இறந்த செல்கள் குவியும். இவற்றை போக்க வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த உடனேயே ஃபேஸ் வாஷ் அல்லது கிளென்சர் கொண்டு கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சருமம் மற்றும் தாடி சுத்தமாக இருக்கும்.
ஒருவேளை தாடியை சுத்தம் செய்யாமல் அப்படியே வைத்து விட்டால் முகத்தில் உள்ள துளைகளை அடைத்துக் கொள்ளும். இதன் விளைவாக எரிச்சல், தொற்றுக்கள் போன்ற பிற பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்..
45
How Often To Shave Your Beard Per Week
எனவே உங்களது முகம் மட்டும் தாடியை தினமும் ஈரப்பதமாக வைத்துக் கொள்ளுங்கள். தாடியை நீளமாக வைத்தாலும் சரி, அல்லது தாடி இல்லாமல் இருந்தாலும் சரி வழக்கமான முக சுத்திகரிப்பு பின்பற்றுவது மிகவும் முக்கியம். இது குறித்து அலட்சியமாக இருந்தால் தோல் பிரச்சனைகள் ஏற்படுத்தும்.
55
How Often To Shave Your Beard Per Week
தாடி வாரத்திற்கு எத்தனை முறை ஷேவ் செய்யலாம்?
தாடியை எத்தனை முறை ஷேவ் செய்ய வேண்டும் என்பது எந்த விதமான விதியும் இல்லை. அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. இருப்பினும்
தாடியை சுத்தமாக வைப்பது ரொம்பவே முக்கியம். மேலும் நிபுணர்களின் கூற்றுப்படி, வாரத்திற்கு ஒரு முறை தாடியை ஷேவ் செய்வது ரொம்பவே நல்லது. ஏனெனில் இது சருமத்திற்கு குறைவான சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்