காலைல வடித்த சாதம் சீக்கிரமே தண்ணி விட்டுதா? நாள் முழுக்க ப்ரெஷா இருக்க சிம்பிள் டிப்ஸ்
கோடை காலத்தில் காலையில் வடித்த சாதம் கெட்டுப்போகாமல் நாள் முழுவதும் பிரஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.
கோடை காலத்தில் காலையில் வடித்த சாதம் கெட்டுப்போகாமல் நாள் முழுவதும் பிரஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.
How Keep Boiled Rice Fresh For A Whole Day During Summer : வெயில் காலம் வந்து விட்டது. எனவே இந்த சீசனில் காலையில் வடித்த சாதம் மதியம் 2 மணிக்குள் தண்ணீர் விட்டு, கொச கொசப்பாக மாறிவிடும். அதுவும் குறிப்பாக பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் மதியம் சாப்பிடுவதற்குள் அந்த சாதம் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், காலையில் வடித்த சாதம் நாள் முழுவதும் பிரஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
கோடை காலத்தில் வடித்த சாதம் கெட்டுப்போகாமல் இருக்க டிப்ஸ்;
சாதத்தை எப்போதும் போல ஊறவைத்து தண்ணீரில் கழுவி பிறகு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்கவும். சாதம் நன்கு வெந்த பிறகு வடிப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சாதத்தில் ஊற்றி நன்கு கலந்து ஒரு கொதி வந்ததும் உடனே சாதத்தை வடித்து விடுங்கள்.
ஒரு கிளாஸ் அரிசிக்கு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே நீங்கள் வைக்கும் சாதத்தில் அளவிற்கு ஏற்ப தேங்காய் எண்ணெயை ஊற்றுங்கள். தேங்காய் எண்ணெய் சாதத்தில் அடிக்குமோ என்று கவலைப்பட வேண்டாம். தேங்காய் எண்ணெயின் வாசம் சாதத்தில் அடிக்காது. எப்போதும் போல்தான் சாதம் இருக்கும்.
குக்கர் சாதத்திற்கு இந்த டிப்ஸ் பொருந்துமா?
ஆம், குக்கரில் வைக்கக்கூடிய சாதத்திற்கு இந்த குறிப்பு பொருந்தும். குக்கரில் சாதம் வைக்கும் போது அரிசி போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பிறகு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, குக்கரை மூடி விசில் விட்டு இறக்க வேண்டும்.
இதையும் படிங்க: பாகற்காய் கசப்பே இல்லாம சூப்பரா சமைக்கலாம்! இதோ ஸ்பெஷல் ட்ரிக்ஸ்!!
டிபன் பாக்ஸில் சாதத்தை எப்படி அடைப்பது?
ஒரு ஹாட் பாக்சில் சுத்தமான காய்ந்த வெள்ளை துணியை வைத்து வடித்த சாதத்தை அதில் கொட்டி மூடி வைத்து விடுங்கள். சுமார் அராமணி நேரம் கழித்து அந்த சாதத்தை லஞ்ச் பாக்ஸில் அடைத்தால் சாதம் கெட்டுப் போகாது. நாள் முழுவதும் பிரெஷ் ஆகவே இருக்கும் மதியம் சாப்பிடும் போது கூட சாதம் சூடாக இருக்கும்.
இதையும் படிங்க: தோசைக் கல்லில் இந்த '1' பொருளை தேய்ங்க.. கிழியாம பேப்பர் மாதிரி தோசை வரும்!
குறிப்பு : உங்களுக்கு தேங்காய் எண்ணெய் பிடிக்கவில்லை என்றால் நல்லெண்ணெய் பயன்படுத்தலாம் இந்த முறையில் நீங்கள் சோறு பொங்கினால் கோடை வெயிலால் சாதம் சீக்கிரமாகவே கெட்டுப் போகாது. இந்த குறிப்பு ரொம்பவே எளிமையானது. எனவே இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்.