Using AC Overnight? Avoid These 5 Harmful Habits Immediately! நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. வீட்டில் ஏசி வைத்திருப்பவர்களுக்கு இந்த கோடையில் அதுதான் அவர்களது நம்பிக்கை. பலர் காலை, மதியம், இரவு என நாள் முழுவதும் ஏசியை ஆன் செய்து பல கோடை வெப்பத்தின் வெக்கையை தனித்து கொள்வார்கள். ஏசி அறையில் வெப்பத்தை உறிஞ்சி குளிர்ந்த காற்றை வெளியிடும். கோடையில் அறையை விரைவாக குளிர்விக்க ஏசி தான் சிறந்த வழி.
27
Harmful Habits to Avoid While Using AC Overnight
முக்கியமாக கோடையில் கொளுத்தும் வெயிலால் இரவு நேரத்தில் ஏசியை ஆன் செய்தால் மட்டுமே நிம்மதியாக தூங்க முடியும். ஆனால் ஏசியை சரியாக பயன்படுத்தாமல் இரவு இயக்கினால் பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது வறண்ட சருமம், தொண்டை வலி முதல் அதிக மின்சார கட்டணம் வரை. மேலும் இந்த கோடையில் இரவு ஏசி பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றினால் சிறந்த தூக்கம், குறைந்த மின் கட்டணம் மற்றும் மேம்பட்ட நல்வாழ்வு கிடைப்பது உறுதி.
இரவு நேரத்தில் ஏசி பயன்படுத்தும் போது செய்யக்கூடாத 5 தவறுகள்:
1. ஏசியை குறைந்த செல்சியஸில் பயன்படுத்து: பெரும்பாலான மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று தங்கள் ரூமில் இருக்கும் ஏசியை 16 முதல் 18 டிகிரி செல்சியஸில் வைப்பார்கள். முதலில் இது நன்றாக உணர்ந்தாலும் நீங்கள் தூங்கும் போது அது நிச்சயமாக உங்களது உடலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நிபுணர்களின் கூற்றுப்படி, ஏசியை நீங்கள் சுமார் 24 முதல் 26 டிகிரி செல்சியஸில் வைத்து தூங்குவது தான் நல்லது. இது உங்களை வசதியாக வைத்திருக்கும் மற்றும் ஆற்றல் நுகர்வையும் குறைக்கும்.
2. டைமர் பயன்படுத்தாமல் இருப்பது: தற்போது நவீன ஏசிகள் ஸ்லீப் மோடு அல்லது டைமர் அமைப்புகளுடன் இருக்கிறது. ஆனால் மக்கள் அதை பயன்படுத்துவதில்லை. நீங்கள் அதிக விலை கொடுத்து ஏசி வாங்குகிறீர்கள் என்றால், மின்சாரத்தை மிச்சப்படுத்தவும், உங்கள் வீட்டிற்கு சாத்தியமான குளிர்ச்சியை அமைக்கவும் உதவும் அம்சங்களையாவது பயன்படுத்த மறக்காதீர்கள். இந்த அம்சங்கள் தானாகவே இரவு நேரத்தில் வெப்பநிலையை சரி செய்யும், மேலும் அதிக குளிர்ச்சியும் தவிர்க்கும் மற்றும் மின்சாரத்தை சேமிக்கும். 8 மணி நேரத்திற்கும் பயன்படுத்தினால் உங்களது மின்சாரம் அதிகரிப்பது மட்டுமில்லாமல், ஏசியில் இருந்து வரும் காற்று வறண்டு போகும்.
57
Harmful Habits to Avoid While Using AC Overnight
3. படுக்கைக்கு அருகில் வைப்பது: படுகைக்கு மிக அருகில் ஏசியை வைப்பது தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், ஏசியில் இருந்து வரும் காற்று உங்களது உடலை தாக்கும். இதன் விளைவாக காலையில் கழுத்து விறைப்பு, தலைவலி, தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே உங்கள் படுக்கைக்கும் ஏசிக்கும் இடையே குறைந்தது 3-4 அடி தூரம் இருக்க வேண்டும்.
67
Harmful Habits to Avoid While Using AC Overnight
4. ஏசி வடிகட்டியை சுத்தம் செய்யாமல் இருப்பது: பலர் ஏசியை பயன்படுத்தினாலும் அதன் வடிகட்டியை சுத்தம் செய்யாமல் அப்படியே வைத்து விடுகிறார்கள். இதனால் அழுக்கான வடிகட்டிகள் பாக்டீரியா மற்றும் ஒவ்வாமைகளை பரப்பும். இதன் விளைவாக ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மிக ஆபத்தை ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு மாதத்திற்கும் 2-3 வாரங்கள் ஏசி வடிகட்டியை சுத்தம் செய்யுங்கள். இதனால் உங்களது ஏசியும் நன்றாக இயங்கும்.
77
Harmful Habits to Avoid While Using AC Overnight
5. ஏசி அறையில் இந்த தப்பை பண்ணாதே! ஏசி இருக்கும் அறையான தவறாக இருந்தால் மின்சாரம் தான் வீணாகும். எனவே ஏசி இருக்கும் அறையின் கதவு, ஜன்னல் மூடி இருக்க வேண்டும். மேலும் சூரிய ஒளியை தடுக்க திரை சிலைகளை பயன்படுத்தலாம். இப்படி செய்வதன் மூலம் அறையின் உள்ளே குளிர்ந்த காற்று தங்கும். மேலும் ஏசியின் மீதான அழுத்தம் குறையும்.
குறிப்பு : ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கு பதிலாக சீலிங் ஃபேன்களை பயன்படுத்துங்கள். எப்போதுமே தூங்கும் அறையில் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஏசியால் இரவில் உங்கள் தொண்டை வறண்டு போகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.