
பொதுவாக ஒவ்வொரு இந்துக்கள் வீடுகளிலும் கண்டிப்பாக பூஜை அறை இருக்கும். செவ்வாய், வெள்ளி மட்டுமன்றி சில விசேஷ நாட்களிலும் அவர்கள் பூஜை அறையில் பூஜை செய்வது வழக்கம். இந்த வழிபாட்டு முறைகளை அவர்கள் காலம் காலமாகவே பின்பற்றி வருகின்றனர். வீட்டில் இப்படி செய்வதினால் தெய்வங்களின் அருள் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்.
இப்படி செய்வதினால் வீட்டில் சுபிக்ஷம் கிடைக்கும் என்றாலும், பலரும் தயங்கும் ஒரு விஷயம் எதுவென்றால் அடிக்கடி பூஜை பாத்திரங்களை துலக்குவது தான். முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்று வரை பெரும்பாலும் பூஜை பாத்திரங்கள் பித்தளை அல்லது செம்பில் தான் இருக்கும். பூஜை பாத்திரங்கள் எப்போதும் பார்ப்பதற்கு பளிச்சென்று இருந்தால் வாழ்க்கையிலும் பிரகாசிக்கும் என்று பல சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதால் அதில் எண்ணெய் பிசுக்கு படிந்துவிடும். இதனால் விளக்குகள் நிறம் மாறி கழுவுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும்.
இதனால் பல பெண்கள் பூஜை பாத்திரங்களை கழுவுவதற்கு பயப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி பித்தளை செம்பு பாத்திரங்களை வாரம் ஒரு முறை கண்டிப்பாக சுத்தம் செய்தால் மட்டுமே, அவை பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும். அது மட்டுமின்றி உங்களது நேரமும் மிச்சமாகும். ஒருவேளை நீங்கள் அவற்றை கழுவாமல் நீண்ட நாள் சுத்தம் செய்யாமல் வைத்தால் கழுவுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். நேரமும் வீணாகும்.
இத்தகைய சூழ்நிலையில், பல வருடங்களாகியும் கழுவாமல் எண்ணெய் பிசுகுடன் இருக்கும் பூஜை பாத்திரங்களை வைரம் போல ஜொலிக்க வைக்க, ஒரு அருமையான, அதே சமயம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஒரு குறிப்பு பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பூஜை பாத்திரங்களை எளிதாக சுத்தம் செய்ய டிப்ஸ் :
பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய முதலில் பூஜை பாத்திரங்களில் மீது இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பை ஒரு டிஷ்யூ பேப்பர் கொண்டு நன்கு துடைக்கவும். பிறகு நன்றாக குளித்த தயிரை பூஜை பாத்திரங்கள் மீது தடவி சுமார் ஐந்து நிமிடம் அப்படியே ஊற வைக்கவும்.
இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு 2 ஸ்பூன், பாத்திரம் கழுவும் லிக்விட் இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். பிற்கு இதனுடன் ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட் ஒன்றையும் நன்கு கலந்து கொள்ளுங்கள். அடுத்ததாக இந்த கலவையை பூஜை பாத்திரங்கள் மீது நன்கு தடவி மீண்டும் சுமார் ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து பாத்திரம் கழுவும் ஸ்கிரப்பர் கொண்டு பூஜை பாத்திரங்களை லேசாக தேய்க்க வேண்டும். பிறகு தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். பின் ஒரு காட்டன் துணி கொண்டு அவற்றை நன்கு துடைத்து, பிறகு வெயிலில் காய வைத்து எடுக்கவும். இப்போது நீங்கள் பூஜை பாத்திரங்களைப் பார்த்தால் அது கடையில் வாங்கியது போல பார்ப்பதற்கு புதிதாக இருக்கும்.
இதையும் படிங்க: வீட்டை சுத்தமா வச்சிக்க இல்லத்தரசிகளுக்கான சூப்பர் டிப்ஸ்!!
எவ்வளவு மோசமாக இருக்கும் பூஜை பாத்திரங்களையும் இந்த முறையை பின்பற்றி சுத்தம் செய்தால் அவை கடையில் வாங்கியது போல் பளிச்சென்று இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் கூட இதை பார்த்து ஆச்சரியப்படுவார்கள். அதுமட்டுமின்றி, நாம் தயாரித்த இந்த கலவையானது வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு தயாரிப்பதால் பணத்தை செலவழிக்க அவசியம் இருக்காது.
முக்கியமாக கை வலிக்க வலிக்க ஜெயிக்க வேண்டியது இல்லை. மிகவும் சுலபமாகவே சுத்தம் செய்து விடலாம். எனவே, உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரங்களை மிகவும் எளிதான முறையில் சுத்தம் செய்வதற்கு இந்த டிப்ஸை நீங்கள் கண்டிப்பாக ஒரு முறை ட்ரை பண்ணி பார்த்து, எப்படி இருந்தது என்று உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
இதையும் படிங்க: வீட்டில் ஒட்டடை வராமல் இருக்கணுமா? தண்ணீருடன் இதை கலந்து ஒரு முறை பயன்படுத்தினால் போதும்!!