
தற்போது நாம் பிசியான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருப்பதால் உடல் ஆரோக்கியத்தை சரியாக பராமரிப்பதில்லை. மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இதனால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். ஆனால், இதையும் தவிர நம் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் வைத்து கொலஸ்ட்ராலை சுலபமாக கரைத்துவிட முடியும் தெரியுமா? அது என்ன பொருள் என்பதையும், அதை பயன்படுத்தும் முறையும் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
பூண்டு ஆரோக்கியம் நிறைந்த ஒரு மூலிகை மசாலா பொருள் ஆகும். பூண்டிலிருந்து வரும் கடுமையான வாசனை உணவில் தனி சுவையை கொடுக்கிறது. குறிப்பாக, அசைவ உணவில் இது கூடுதல் சுவை கொடுக்கும். இது சமையலில் சுவைக்காக மட்டுமின்றி, இதில் ஏராளமான நன்மைகளும் உள்ளது.
பூண்டில் மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் பி போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. பூண்டில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறித்து இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு நாம் பூண்டை சாப்பிடும் வழி மிகவும் முக்கியமானது. எனவே, கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பூண்டை எப்படி சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்கலாம்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டு சாப்பிடும் முறைகள் :
பூண்டை கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலும் குறையும், உங்கள் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
1. வெறும் வயிற்றில் பூண்டு :
தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இரண்டு பல் பச்சை பூண்டை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். பச்சை பூண்டில் இருக்கும் அல்லிசின் கள் ரத்த உரைகளை தடுக்கவும், ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை வேகமாக குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
2. பூண்டு டீ :
உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டை நீங்கள் டீ யாக போட்டும் குடிக்கலாம். இதற்கு ஒரு கப் தண்ணீரில் 4 பூண்டு பற்களை நன்கு நசுக்கி அதில் போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். இதில் இரண்டு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடியும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவை நன்கு கொதித்ததும் வடிகட்டி சூட்டில் இருக்கும் போதே குடிக்கவும். நீங்கள் விரும்பினால் இதில் எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கொள்ளலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதோடு மட்டுமின்றி, கெட்ட கொலஸ்ட்ராலையும் கரைக்கும்.
3. வறுத்துப் பூண்டு :
உங்களுக்கு பூண்டை பச்சையாக சாப்பிட பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இந்த முறையை பின்பற்றலாம். இதற்கு அடுப்பில் ஒரு ஃபேனை வைத்து அதில் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றவும். பிறகு அதில் ஒரு கைப்பிடி அளவு தோல் உரித்த பூண்டை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் பிறகு அதை சாப்பிடுங்கள். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
4. தினமும் உணவு பூண்டு சேர்க்கவும் :
நீங்கள் உங்கள் வீட்டில் என்ன குழம்பு, பொரியல், கூட்டு எது செய்தாலும் கண்டிப்பாக அவற்றில் பூண்டு சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டு உணவின் சுவையை கூட்டுவது மட்டுமின்றி, ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்க உதவுகிறது.
இதையும் படிங்க: பூண்டு அதிகமாக சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா?
5. பூண்டு மற்றும் தேன் :
ஒரு கண்ணாடி பாட்டிலில் தோலுரித்த பூண்டை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அதில் பூண்டு மூழ்கும் அளவிற்கு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டு தேனுடன் நன்றாக ஊறியதும் அதை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் வேகமாக குறைய ஆரம்பிக்கும்.
இதையும் படிங்க: ஆண்களே தினமும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.. அப்புறம் நடக்கறதை மட்டும் பாருங்க!