
நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆயுர்வேதம் மற்றும் யோகாவில் பல ஆரோக்கிய குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. அவற்றைப் பின்பற்றினால் நாம் எந்த நோயும் நொடியுமின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம். அந்த வகையில், எண்ணெய் தேய்த்து குளியல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அதாவது, இந்த குளியலானது உடல் முழுவதும் எண்ணெய் தடவி மசாஜ் செய்து, பிறகு வெயிலில் சிறிது நேரம் உட்கார வேண்டும். அதன் பிறகு குளிக்க வேண்டும். இது நீண்ட காலமாகவே நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். இப்படி செய்வதன் மூலம், எந்த நோயுமின்றி நலமுடன் வாழ்ந்தார்கள்.
ஆனால், இன்றைய பிசியான வாழ்க்கை முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதால் இப்படி குளிப்பது சற்று கடினமான விஷயம் என்றே சொல்லலாம். இன்னும் சொல்லபோனால், தீபாவளி போன்ற விஷேச நாட்களில் மட்டுமே தான் இப்படி குளிப்போம்.
இத்தகைய சூழ்நிலையில் எண்ணெய் குளியல் தவிர, வேறு வழிகளிலும் நோய்கள் வருவதை தடுக்க முடியும் தெரியுமா? அதாவது, உங்களால் இப்படி எண்ணெய் குளியல் செய்ய முடியாவிட்டால், உங்களது உடலில் மூன்று பாகங்களில் மட்டும் எண்ணெய் தடவுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம் என்று யோகா ஆசிரியர் (நவபாரத் ட்டைம்ஸ் செய்தி) ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், அந்த இடங்களில் எண்ணெய் தடவினால் உங்களுக்கு எந்த நோயும் வராது. எனவே, உடலில் எந்த மூன்று இடங்களில் எண்ணெய் தடவ வேண்டும், அதுவும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதால் கிடைக்கும் ஆரோக்கியம் நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
உடலில் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டிய மூன்று இடங்கள் :
பொதுவாகவே, நம்முடைய முன்னோர்கள் இரவு தூங்குவதற்கு தொப்புளில் எண்ணெய் தடவி தூங்குவது வழக்கம். குழந்தைகளுக்கும் இப்படி தான் செய்து வந்தார்கள். இப்படி செய்வதன் மூலம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றது. இது உண்மை என்று நவீன மருத்துவமும் நிரூபித்துள்ளது.
தொப்புள் தவிர, மூக்கு மற்றும் கை கால் விரல்களிலும் எண்ணெய்ய் தடவுவது நல்லது என்று யோகா ஆசிரியர் கூறுகிறார். அதாவது நீங்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன் 2-3 சொட்டு தேங்காய் எண்ணெயை உங்கள் தொப்புளில் வைப்பது போல, தினமும் இரவு தூங்கும் முன் 1-2 சொட்டு எண்ணெயை உங்கள் மூக்கிலும், விரல்களிலும் வைக்க வேண்டும். முக்கியமாக, நீங்கள் விரல்களில் எண்ணெய் வைத்த பிறகு கண்டிப்பாக சுமார் 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும் என்கிறார்.
தேங்காய் எண்ணெய் நன்மைகள் :
நிபுணர்களின் கூற்றுப்படி, ஆயில் மசாஜ் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், தேங்காய் எண்ணெய் மிகவும் தூய்மையானது மற்றும் இந்த எண்ணெயில் அனைத்து பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
இதையும் படிங்க: 1 மாதத்தில் எடை குறைய தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள்!
தேங்காய் எண்ணெயின் அறிவியல் நன்மைகள் :
தேங்காய் எண்ணெய் உணவு சமைப்பது முதல் மசாஜ் வரை பயன்படுத்தப்படுகிறது அறிவியலும் இந்த சாத்தியமான பலன்களை ஏற்றுக் கொள்கிறது. தேங்காய் எண்ணெய் பலவிதமான நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. அதாவது உடலில் கொழுப்பு எரிவதை துரிதப்படுத்துகிறது, சிறந்த ஆற்றல் ஆதாரமாகும், நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவுகள் நிறைந்தவை, பசியை அடக்கும், சரும ஆரோக்கியத்திற்கு நல்லது, முடியை மிருதுவாக்கும் மற்றும் பளபளப்பாக மாற்றும், வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், அல்சமையர் நோயின் அறிகுறிகளை குறைக்கிறது, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.
தொப்புளில் தேங்காய் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் :
கண் ஆரோக்கியத்திற்கு நல்லது : நம்முடைய உடலில் ஒட்டுமொத்த நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில் தான் இருக்கிறது என்பதால், ஒரு சொட்டு எண்ணெயை தூங்கும் முன் தோப்புகளில் தடவி வந்தால் கண் பார்வை கூர்மையாகும். குறிப்பாக கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் வேலை செய்பவர்களில் கண் சீக்கிரமே வறட்சி அடைந்து விடும். எனவே, கண் பார்வை குறைபாடு நீங்க தொப்புளில் எண்ணெய் தடவுவது நல்லது.
உடல் சூடு தணியும் : நம்மில் பலருக்கு உடல் சூடு பிரச்சனை உண்டு. இதனால் சரும நோய்கள் அடிக்கடி அவர்களை தொந்தரவு செய்யும் இத்தகைய சூழ்நிலையில் தினமும் தொப்புளில் ஒரு துளி எண்ணெய் தடவினால், உடல் சூடு தணிந்து சருமம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் சீரான ரத்த ஓட்டம் நடைபெறும். இதனால் உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
மூட்டு வலியைக் குறைக்கும் : உங்களுக்கு மூட்டு வலி பிரச்சனை இருந்தால், இரவு தூங்கு முன் தொப்புளில் எண்ணெய் தடவி வந்தால் விரைவில் குணமாகும். இதனால் கால் நரம்புகளின் வலியும் குறையும், கணைய பாதிப்புகள் சீராகும், கர்ப்பப்பை வலுப்பெறும். முக்கியமாக நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
நகங்களில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் :
இரவு தூங்கும் முன் நகங்களில் தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்து, வந்தால் ஆரோக்கியமான நகம் வளர்ச்சிக்கு உதவும். இது தவிர, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும், மனக்கவலையை போக்கும், ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் கால் வலியை போக்கும்.
பிற எண்ணெய்களும் அதன் பலன்களும் :
தேங்காய் எண்ணெய் முடி உதிர்வதை தடுக்கும் மற்றும் மாதவிட வழியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
பளபளப்பான சருமத்திற்கும், தெளிவான நிறத்திற்கும் பாதாம் எண்ணெய் உதவுகிறது.
விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் கருவுறுதலை அதிகரிக்க ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது.
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் கரைகளை நீக்க எலுமிச்சை எண்ணெய் உதவுகிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கம் மற்றும் மலச்சிக்கலுக்கு சிகிச்சை அளிக்கவும் கடுகு எண்ணெய் உதவுகிறது.
குறிப்பு : இந்த பதிவு பொதுவானது என்பதால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எதையும் முயற்சி செய்யாதீர்கள்.
இதையும் படிங்க: Beauty Tips : ஓரே இரவில் முக பரு மறைய தேங்காய் எண்ணெயுடன் 'இத' கலந்து முகத்தில் தடவினால் போதும்!