பழைய 5 ரூபாய் நோட்டு இருக்கா? ஆன்லைன் மூலமே விற்கலாம் தெரியுமா?

First Published | Sep 16, 2024, 6:39 PM IST

Old and Rare 5 Rupees Notes : பழைய மற்றும் அரிதான காசுகள் மற்றும் ரூபாய் நோட்டுகள், இன்றைய தேதியில் லட்சங்களில் ஏலத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

Five Rupees Note

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு பழைய ஐந்து ரூபாய் நோட்டு கூட உங்களை கோடீஸ்வரராக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா. என்னது 5 ரூபாய் நோட்டு போன்ற சிறிய ஒன்று, இத்தகைய பெரிய அதிர்ஷ்டத்திற்கு வழிவகுக்குமா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம், ஆனால் அது தான் உண்மை. சரி வாருங்கள், இந்த பதிவில் பழைய 5 ரூபாய் நோட்டை கூட ஒரு மதிப்புமிக்க "சொத்தாக" மாற்றுவதற்கான சுவாரஸ்யமான சாத்தியக்கூறுகளை குறித்து பார்க்கலாம். 

பழைய மதிப்புமிக்க ரூபாய் நோட்டுகள் 

பழைய கரன்சி நோட்டுகள், குறிப்பாக சில சிறப்பு வரிசை எண்கள் அல்லது சிறப்பு அம்சங்கள் கொண்ட ரூபாய் நோட்டுகள், அறிய பொருட்களை சேகரிப்பாளர்களின் பொருட்களாக மாறிவிடுகின்றன. உலகெங்கிலும் உள்ள இது போன்ற சேகரிப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்த அரிய வகை நோட்டுகளுக்கு கணிசமான தொகையை கூட செலுத்த தயாராக உள்ளனர் என்பது தான் ஆச்சர்யம் தரும் விஷயம். ஆனால் உலக அளவில் இந்த செயல் பரவலாக இருந்து வரும் ஒரு செயல்முறை தான் என்பது நாம் அறிந்ததே.

அட, அம்பானி குடும்பத்தின் வெற்றிக்கு இதுதான் காரணமா? அந்த 5 சீக்ரெட்ஸ் இதோ!

Old and Rare Currency

5 ரூபாய் பழைய நோட்டுகள் 

குறிப்பாக பழைய 5 ரூபாய் நோட்டுகளுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. இந்த நோட்டுகள் அதன் தனித்துவமான வரிசை எண், அதில் உள்ள சில சிறப்பு அடையாளங்கள் அல்லது வரலாற்று முக்கியத்துவம் காரணமாக தான் சந்தையில் அதிக விலையை பெறுகின்றன என்கிறார்கள் இந்த வகை ரூபாய் நோட்டுகளை வாங்கும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  

வரிசை எண்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள்

முன்பு கூறியதை போலவே பழைய 5 ரூபாய் நோட்டின் மதிப்பு என்பது அதன் வரிசை எண் மற்றும் வடிவமைப்பு அம்சங்களைப் பொறுத்தது மட்டுமே. சரி இந்த விஷயம் குறித்து இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்கங்களோடு காணலாம். 

வரிசை எண் 786 : அதாவது 786 என்ற எண் இஸ்லாமிய மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் இந்த எண்ணைக் கொண்ட குறிப்புகள் சேகரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. உங்கள் பழைய ரூ. 5 நோட்டில் இந்த வரிசை எண் இருந்தால், அதன் மதிப்பு இன்றைய தேதியில் ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும்.

Tap to resize

Rare Serial Number Currency

தொடர் வரிசை எண்கள் : 123456 போன்ற தொடர் வரிசை எண்களைக் கொண்ட குறிப்புகள் மிகவும் அரிதானவை மற்றும் சேகரிப்பாளர்களிடையே மதிப்புமிக்க உடைமையாகக் கருதப்படுகிறது. அத்தகைய எண்களின் தனித்தன்மை தான் அவற்றின் மதிப்பை அதிகரிக்கிறது.

வடிவமைப்பு மற்றும் படத்தொகுப்பு : சில 5 ரூபாய் நோட்டுகளில், ஒரு டிராக்டரில் ஒரு விவசாயியின் உருவம் இடம்பெற்றிருக்கும், இது சேகரிப்பாளர்களை ஈர்க்கிறது. அதுமட்டுமல்ல ஒரு ரூபாய் நோட்டின் நிலை தான் அதற்கான மதிப்பை தீர்மானிக்கிறது. அதாவது கிழியாமல், அதிகம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ரூபாய் நோட்டுகள் தான் நல்ல விலைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 

வீட்டை சுத்தம்செய்யும் நேரம், தீடீரென கண்ணில் தென்படும் பழைய புத்தகம் அல்லது உண்டியலில் இதுபோன்ற பழைய 5 ரூபாய் நோட்டுகள் நமக்கு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அல்லது சிலர் விற்பனை செய்யவேண்டும் என்பதற்காகவே இவ்வகை சிறப்பான பழைய நோட்டுகளை சேகரித்து வைத்திருப்பார்கள். ஆனால் அப்படி சேர்த்து வைப்பவர்களுக்கு அதை எப்படி விற்பனை செய்வது என்பது தெரியாது. சரி இனி அந்த பழைய நோட்டுகளை எப்படி விற்பனை செய்வது என்பதை பார்க்கலாம்.

How to sell old currency

விற்பனை செய்வது எப்படி?

ஆன்லைன் ஏலம் : உங்கள் பழைய கரன்சி நோட்டுகளை விற்க, பல தேசிய மற்றும் சர்வதேச ஏல இணையதளங்கள் உள்ளன. eBay, CoinBazzar மற்றும் பிற ஆன்லைன் சேவைகள் மூலம் மட்டுமே உங்களால் இவற்றை விற்பனை செய்ய முடியும்.

மேலும் உங்களிடம் உள்ள நோட்டுகளை விற்பனை செய்யும் முன், அதற்கு என்ன விலை கிடைக்கும் என்பது குறித்து கொஞ்சம் இணையத்தில் சோதனை செய்து பாருங்கள். மேலே கூறியுள்ள eBay மற்றும் CoinBazzar போன்ற தளங்களில் கூட அது குறித்து நீங்கள் சோதனை செய்து பார்க்கலாம். நீங்கள் வைத்திருக்கும் ரூபாய் நோட்டு எந்த அளவிற்கு அரிதானது, அதன் நிலை நிலை எப்படி உள்ளது, உண்மையில் சந்தையில் அதற்கு தேவை உள்ளதா என்பதையும் பார்க்கவேண்டும். 

நீங்கள் விற்பனையும் செய்யும் ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களின் குறிப்புகள் மற்றும் அதன் High Quality புகைப்படங்களை நீங்கள் எடுத்து, eBay, CoinBazzar மற்றும் பிற ஆன்லைன் விற்பனை மூலம் உங்களிடம் உள்ள அரியவகை நோட்டுகள் மற்றும் காசுகளை விற்கலாம்.

இந்தியாவின் மிக நீளமான பெயரை கொண்ட ரயில் நிலையம் தமிழ்நாட்டில் தான் உள்ளது! எது தெரியுமா?

Latest Videos

click me!