Early Morning: அதிகாலை 2 மணிமுதல் 5 வரை விழிப்பு ஏற்பட்டால் என்ன அர்த்தம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

First Published | Sep 17, 2024, 7:00 AM IST

Early Morning: நள்ளிரவில் அடிக்கடி விழிப்பு ஏற்பட்டால், அது தெய்வீக சக்தியையோ அல்லது நம்மைப் பற்றி யாரோ ஆழமாக நினைப்பதையோ குறிக்கலாம். இந்த விழிப்புணர்வு லா ஆஃப் அட்ராக்ஷன், தாந்திரீக முறைகள் அல்லது மந்திர ஜெபங்களைப் பின்பற்றுபவர்களுக்கு பொதுவானது. 

தூக்கம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இரவு நேரத்தில் தூங்கும் போது நள்ளிரவில் எழுந்திருப்பது சாதாரணமானது தான். பொதுவாகக் கழிப்பறையைப் பயன்படுத்த அல்லது தாகம் காரணமாக இதுபோல இரவு தூக்கத்தில் இருந்து விழிப்பு ஏற்படக்கூடும். அல்லது கெட்ட கனவு காரணமாகவும் விழிப்பு வரும். ஆனால், எப்போதாவது இப்படி விழிப்பு வந்தால் பிரச்சினை இல்லை. அதேநேரம் தினமும் அதிகாலை 2 மணிமுதல் காலை 5 வரை
உங்களுக்கு விழிப்பு ஏற்படுகிறதா அதற்கான அர்த்தம் என்ன என்பதை பார்ப்போம். 

தினமும் அதிகாலை நேரத்தில் விழிப்பு  ஏற்பட்டால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் தெய்வீக சக்தி தெய்வீக ஆற்றல் தெய்வத்தன்மை உடையவர்களுக்கு இந்த குறிப்பிட்ட நேரத்தில் தினமும் விழிப்பு நிலை ஏற்படும். அதேபோல எந்த ஒரு (law of attraction) என்பது தாந்திரீக முறைகள் பின்பற்றுபவர்கள் ஆட்டோமேட்டிக்கா  இந்த நேரத்தில் விழிப்பு ஏற்படும். இதற்கான காரணம் உங்களுடைய ஆழ்மனம் பிரபஞ்சத்துடன் தொடர்புக்கொள்ளும் நேரம். 

இதையும் படிங்க: இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் நல்லதா? கெட்டதா?

Tap to resize

நம்முடைய மைண்ட் ரிலாக்ஸாக இருக்கக்கூடிய அந்த தருணத்தில் தான் யூனிவர்ஸ்வுடன் அது  நல்ல கனெக்டிவிட்டியில் இருக்கும். நிறைய லா ஆஃப் அட்ராக்ஷன் பார்த்தீர்கள் என்றால் இரவு நேரத்தில் அதை பின்பற்றுவதாக இருக்கும். இதை சரியாக பின்பற்றுபவர்களுக்கு தினமும் அதிகாலை நேரத்தில் விழிப்பு ஏற்படும். அந்த விழிப்பு நமக்கு தூக்கத்தை தராது. ரொம்பமும் பொலிவுடன் இருப்பதாக தோன்றும். லா ஆஃப் அட்ராக்சனுடை கான்சப்பட் பார்த்தீர்கள் என்றால் மனம் ஒருநிலைப்படுதல். நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட நபரின் மீதோ அல்லது குறிப்பிட்ட பொருளின் மீதோ உங்களுடைய ஒருநிலைபட்ட கவனத்தை நீங்கள் செலுத்துறீங்க. எல்லா தாந்திரீக முறைகள் லா ஆஃப்  அட்ராக்சன் மற்றும் மந்திர ஜெபங்கள் பார்த்தீங்கன்னா ஒரு டைப் ஆப் மெடிடேஷன்.

அந்த நேரத்தில் நம்முடைய கவனம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நோக்கி மட்டும் தான் இருக்கும். இது ஒரு தியான நிலை. தினமுமே நாம் லா ஆஃப்  அட்ராக்சன் அல்லது  மந்திர ஜெபம் செய்யும்போது ஒரு மிடிடேடிவ் ஸ்டேட்டில் இருக்கும். தினமும் இதை செய்தால் நமக்குள்ளே இருக்கக்கூடிய தெய்வீகத் தன்மை வெளிப்படும். ஒரு மனிதனுக்கு தான் நினைத்ததை அடையக்கூடிய ஆற்றல் ஏற்படுகிறது என்றால் அவனுக்கூடிய தெய்வீகம் வெளிப்படுவதாக அர்த்தம். மனம் அமைதியை அடையும் போது நமக்குள் இருக்கக்கூடிய தெய்வீக தன்மை வெளிப்படும். இன்னும் சில பேருக்கு ஆன்மீகத்தில் அதிகமான ஈடுபாடு இருக்கும். எப்பவுமே தெய்வ சிந்தனையிலேயே இருப்பார்கள்,  மந்திர ஜெபங்கள் செய்து கொண்டே இருப்பார்கள். இறைவனுடைய பெயரை சொல்லிக்கிட்டே இருப்பாங்க.  இறை சிந்தனையிலேயே இருப்பார்கள். எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி இதுவும் ஒரு டைப் ஆப் லா ஆஃப் அட்ராக்ஷன். இறைவன் மீது நம்பிக்கையோடு பக்தி செலுத்தும் போது தெய்வீகத்தன்மை வெளிப்படும். முதல் காரணம் அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை உங்களுக்கு விழிப்பு ஏற்படுகிறது என்றால் அதற்கான முதல் காரணம் லா ஆஃப் அட்ராக்ஷன் செய்பவர்கள் தாந்தரீக முறைகள் மற்றும் மந்திர ஜெபம் செய்பவர்களுக்கு இந்த நிலை ஏற்படும். 

இரண்டாவதாக இருக்கக் கூடிய காரணம் நம்மைப் பற்றி யாராவது தொடர்ந்து நினைத்துக்கொண்டே இருந்தார்கள் என்றால்  நமக்கு அதிகாலை நேரத்தில் விழிப்பு நிலை தோன்றும். அது யார் வேண்டும் என்றாலும் இருக்கலாம். நம் மீது உண்மையான அன்பு, காதல், பாசம் விருப்பம் உடையவர்கள் யாராக இருந்தாலும் நமக்கு இந்த நிலை தோன்றும். இந்த உலகத்தில் உயிருள்ள மற்றும் உயிரற்ற எல்லா பொருட்களும் சக்தி வடிவம் (energy form). மனிதனுடைய மனதால் உயிர் உள்ள நபரையும், உயிரற்ற பொருட்களில் ஈர்க்க முடியும். ஆனால் அதற்கு அந்த மனம் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். மனம் ஒரு பொருளையோ குறிப்பிட்ட நபரையோ எப்படி இருக்கும் என்பதை பார்த்தால் அந்த மனதில் இருந்து தோன்றும் சக்தி வாய்ந்த எண்ணங்கள். மனித மனதில் தோன்றும் எண்ணங்கள் நேரமோ காலமோ இடைவெளியோ கிடையவே கிடையாது. சக்தி வாய்ந்த மனதில் தோன்றும் ஆற்றல் மிகுந்த எண்ணங்கள் இன்னொரு மனிதனுடைய ஆழ் மனதில் ஊடுருவும் சக்தி வாய்ந்தவை.

இதையும் படிங்க: Girivalam: அரசு விடுமுறை நாளில் பவுர்ணமி! கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன? கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

அதிகாலை நேரத்தில் விழிப்பு  வருவதன் இரண்டு காரணங்களை இப்போது பார்த்தோம். நமக்கு எந்த காரணத்தினால் விழிப்பு ஏற்படுகிறது எப்படி கண்டுபிடிப்பது என்று பார்த்தால் முதல் காரணம் தெய்வீகத்தன்மை அல்லது லா ஆஃப் அட்ராக்சன் மேத்தடை பின்பற்றுபவர்களுக்கு விழிப்பு ஏற்படும் என்று பார்த்தோம்.  அப்படி பட்டவர்களுக்கு விழிப்பு தோன்றும்போது ஒரு மின்னல் கேற்று பல சடனாக எழுந்திருப்பீங்க. அந்த தூக்கம் கொஞ்சம் கொஞ்சமா கலையாது. நீங்கள் சடனா பிரிஸ்கா உடனடியாக எழுந்துப்பீங்க. அதுபோல சடனா நீங்கள் எழுந்திருக்கும் போது அது தெய்வகத் தன்மையை குறிக்கிறது. அதாவது நீங்க பாலோ பண்ற லாப் ஆப் அட்ராக்சன், மந்திர ஜெபங்கள் மற்றும் தாந்தீரிக முறைகளை சரிவர பின்பற்றுவதாக அர்த்தம். இரண்டாவது காரணம் உங்களைப் பற்றி யாரோ தீவிரமாக நினைத்து கொண்டே இருக்கிறார்கள் அன்பு காதல், பாசம் விருப்பத்தோடு உங்களைப் பற்றி ஆழமாக சிந்திக்கும்போது உங்களுக்கு விழிப்பு ஏற்பட்டால் அந்த விழிப்பு எப்படி இருக்கும் பார்த்தால் தூக்கம் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு கலையும். தினமும் ஒரே மாதிரியான கனவும் உங்களுக்கு தோன்றும். ஒரே மாதிரியாக உங்களுக்கு கனவு வந்துகிட்டே இருக்கும். அது எந்த கனவாக வேண்டுமானாலும் இருக்கலாம்

ஆனால் ஒரே கனவு திரும்ப திரும்ப வந்துகிட்டே இருக்கும். சில நேரங்களில் உங்களை யார் நினைக்கிறார்களோ அவங்களுடைய உருவம் கூட கனவில் வந்துக்கொண்டே இருக்கும். இது ஒரு நாள் இரண்டு நாள் கிடையாதுங்க தொடர்ச்சியாக இந்த நிலை உங்களுக்கு வந்துகிட்டே இருக்கும். அந்த கனவு ரொம்ப தெள்ள தௌிவாக உங்களுக்கு இருக்கும். அது எப்படிப்பட்ட கனவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரே மாதிரியான கனவாக இருக்கும். சில நேரங்களில் தொடர்ச்சியாக தும்மல் அல்லது மூக்கு அடைப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டு தூக்கம் தெளியும்.  அதிகாலை நேரத்தில் இந்த விழிப்பு ஏற்பட்டதும் ஒரு விதமான குழப்ப நிலைக்கு நீங்கள் போவீர்கள். அந்த நேரத்தில் நிறைய விஷயங்கள் நிறைய விஷயங்களை யோசித்து கொண்டே இருப்பீர்கள்.  இதற்கான காரணம் நம்மை யாராவது தொடர்ந்து நினைத்து இருந்தால் அவங்களுடைய எண்ணம் நம்முடைய ஆழ்மனதில் ஊடுருவும். நம்முடைய மனதிலும் வழக்கம் போல் எண்ணங்கள் தோன்றிக்கிட்டே இருக்கும். இந்த இரண்டு எண்ணங்களும் மோதும் போதுதான் இந்த ஒரு குழப்ப நிலை உங்களுக்கு உருவாகும். 

எண்ணங்களின் மோதல்கள்

 நம்முடைய எண்ண அலைகளும் இன்னொருவரின் தீவிரவான எண்ண அலைகளும் மோதும் போது நமக்கு குழப்பங்கள் தோன்றும். தெய்வீகத் தன்மையால் விழிப்பு நிலை ஏற்படுபவர்கள் ரொம்ப அமைதியாக நினைத்து பார்ப்பார்கள் அல்லது ஒரே விஷயத்தை பற்றி நினைத்து கொண்டு இருப்பார்கள். இன்னொரு நபர் நம்மை பற்றி சிந்திப்பதால் நமக்கு விழிப்பு ஏற்பட்டால் மனம் அமைதியான நிலையில் இருக்காது. அந்த நேரத்தில் யார் மேலையாவது உண்மையான அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று தோன்றும். மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றும். இன்னும் சில பேருக்கு  யார் மேலையாவது அதிகமான கோபம் ஏற்படும். குறைபட்சம் 2 மணிநேரத்திற்கு நமக்கு தூக்கமே வராது. அதற்கு பிறகு தான் தூக்கம் வரும் நிலை ஏற்படும். தெய்வீகத் தன்மை இருப்பர்களாக இருந்தாலும் சரி விடியர் காலை நேரத்திற்கு பிறகு தூக்கம் வர ஆரம்பிக்கும். யார் நம்மை நினைக்கிறார்கள் என்பது கண்டுபிடிப்பது ரொம்பவும் கடினம். எப்பவுமே அன்பு மற்றும் காதல் இந்த இரண்டு உணர்வுகளுக்கு அதிகம் அதிகமான சக்தி இருக்கு.  அன்பும் காதலுமாய் உங்களை நினைப்பர்களால் மட்டும் தான் உங்களை எழுப்ப முடியும். 

Latest Videos

click me!