இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் நல்லதா? கெட்டதா?
இறந்துபோனவர்கள் கனவில் வருவது நல்லதா கெட்டதா? இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம்.
கனவு என்பது பெரும்பாலும் அனைவருக்கும் வரக்கூடிய ஒன்றுதான். ஆனால் ஏன் இந்த கனவு வருகின்றது என்பதில் எல்லோருக்கும் சந்தேகம் இருக்கும். குறிப்பாக இறந்தவர்கள் கனவில் வருவது நல்லதா, கெட்டதா என்பதை பற்றி அறிந்துகொள்வோம்.
இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்கையாகும். தான் இறந்துவிட்டது போல் கனவு வந்தால், நன்மைகளே ஏற்படும். வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட போகிறது என்று அர்த்தம். ஒருவர் நோயால் இறந்துவிட்டு உங்கள் கனவில் ஆரோக்கியமாகத் தோன்றினால், அவர் நல்ல பிறவி அல்லது இடத்தை பெற்று இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அர்த்தம். உங்கள் கனவில் இறந்த உறவினர் உங்களுடன் பேசினால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இப்போது உங்கள் நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும் என்றும் அர்த்தம்.
இறந்த ஒருவர் உங்கள் கனவில் அறிவுரை கூறினால், கண்டிப்பாக அவருடைய ஆலோசனையைப் பின்பற்றுங்கள். அதன் மூலம் நீங்கள் நிச்சயம் பலன் அடைவது உறுதி உங்களுக்கு தெரிந்தவ நபர் இறந்த பின் உங்கள் கனவில் வந்து கோபமாகவோ அல்லது அழுதால் அவருடைய சில ஆசைகள் நிறைவேறவில்லை என்று அர்த்தம். இறந்தவர் கனவில் தோன்றி, உங்களிடம் ஏதாவது சொல்ல முயன்றாலும், உங்களுக்கு எதுவும் புரியவில்லை என்றால், ஏதோ நெருக்கடி வருகிறது என்று அர்த்தம்
இறந்த உறவினர் உங்கள் கனவில் தோன்றி அமைதியாக இருந்தால், நீங்கள் ஏதோ தவறு செய்கிறீர்கள் அல்லது எதிர்காலத்தில் ஏதாவது தவறு செய்வீர்கள் என்று அர்த்தம். முன்னோர் கனவில் உங்களை ஆசீர்வதித்தால், எதிர்காலத்தில் நீங்கள் சில வேலைகளில் வெற்றி பெறுவீர்கள் என்று அர்த்தம். மறைந்த முன்னோர் அல்லது உறவினர்கள் கனவில் சோகமாக இருந்தால், அவர்கள் உங்களால் மகிழ்ச்சியாக இல்லை என்று அர்த்தம். அவர்கள் கோபமாக அல்லது அழுவதைப் பார்த்தால், ஏதோ நெருக்கடி வரப்போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
உங்களின் இறந்த உறவினர்கள் எங்கோ தொலைவில் வானத்தில் இருப்பதை உங்கள் கனவில் கண்டால் அவர்கள் முக்தி அடைந்து விட்டார் என்று அர்த்தம். உங்களுக்கு அறிமுகமானவர்கள் இறந்த பின்னர் வீட்டில் அல்லது அருகில் ஏதேனும் ஒரு இடத்தில் இருப்பது போல கனவில் தோன்றினால், அவர்கள் உங்களால் ஏமாற்றமடையக்கூடும். அவரது ஆத்மா சாந்தியடைய ஏதாவது செய்ய வேண்டும்.
கனவில் இறந்த உறவினர்கள் மீண்டும் மீண்டும் வருவது அவர்களின் ஆன்மா அலைந்து திரிகிறது என்று அர்த்தம். அவர்களால் மறுஜென்மம் பெற முடியவில்லை அல்லது அவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை என அர்த்தம். அவரது ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் போன்றவற்றைச் செய்ய வேண்டும்.