Sweat Absorbing Sleeping Mats for Summer : வெயில் காலத்தில் தரையில் படுப்பது உடல் சூட்டை அதிகப்படுத்தக்கூடும். கோடை காலத்திற்கு ஏற்ற, உடலை குளுமையாக்கும் ஐந்து பாய் வகைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. திருச்சி, மதுரை, வேலூர், சென்னை, திருவள்ளூர் போன்ற நகரங்களில் ஒவ்வொரு நாளும் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இந்த நிலையில் பலரும் உடலை குளுமையாக்க பல வழிகளை தேடுகின்றனர்.
புழுக்கம் அதிகரிப்பதால் இரவு உறக்கம் வராமல் பலரும் தவித்து வருகின்றனர். உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியான உறக்கத்தைப் பெற இயற்கையான பாய்கள் சிறந்த தேர்வாகும். செயற்கை இழையாலான (பிளாஸ்டிக்) பாய்களை தவிர்த்து பாரம்பரியமான இந்த பாய்களை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது. கோடைக்கு ஏற்ற ஐந்து முக்கிய பாய் வகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
27
1. கோரைப்பாய் (Korai Grass Mat)
தமிழகத்தில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் பாய் வகைகளில் கோரைப்பாயும் ஒன்று. ஆற்றங்கரைகளில் வளரும் கோரைப் புற்களைக் கொண்டு இந்த பாய்கள் செய்யப்படுகின்றன. இந்த பாய்களுக்கு உடல் வெப்பத்தை உறிஞ்சும் தன்மை உண்டு. இரத்த ஓட்டத்தை சீராக்கி, ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த வகை பாயை பயன்படுத்தலாம். குறிப்பாக பத்தமடை கோரைப் பாய்கள் உலகப் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன.
37
2. தென்னம்பாய் (Screw Pine Mat)
தென்னை இலைகளின் நாரைக் கொண்டு உருவாக்கப்படும் பாய்கள் தென்னம் பாய்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த பாய்கள் உடல் சூட்டை உறிஞ்சி, உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. முதுகு வலி உள்ளவர்களுக்கும் இந்த வகை பாய்கள் சிறந்த தீர்வாக அமைகிறது. இதன் மென்மையான தன்மை கோடைகால இரவுகளுக்கு இதமான தூக்கத்தை தரவல்லது. மிகவும் லேசானது மற்றும் எளிதில் மடிக்கக் கூடியது. இந்த வகை பாய்களை பயன்படுத்தும் பொழுது சரும நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும்.
ஈச்ச மரத்தின் இலைகளைக் கொண்டு நேர்த்தியாக ஈச்சம் பாய்கள் பின்னப்படுகின்றன. இன்றும் கிராமப்புறங்களில் இந்த வகை பயன்பாட்டில் உள்ளன. இந்த பாய்கள் இயற்கையிலேயே அதிக குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. கோடையில் தரையில் இருந்து எழும் வெப்பம், உடலைத் தாக்காமல் இது சிறந்த அரணாக செயல்படுகிறது. ஈச்ச இலைகளுக்கு இயல்பிலேயே வெப்பத்தை எதிர்க்கும் குணம் உண்டு. இது உடல் சூட்டை சம நிலையில் வைக்க உதவுகிறது. நீண்ட காலம் உழைக்கக் கூடியது. முதுகு வலி இருப்பவர்கள் ஈச்சம் பாயில் தடுப்பது நல்ல பலன்களைத் தரும்.
57
4. மூங்கில் பாய் (Bamboo Mat)
சிறு சிறு மூங்கில் குச்சிகளை மெல்லிய இலைகளாக சீவி, அவைகளை ஒன்றிணைத்து மூங்கில் பாய்கள் உருவாக்கப்படுகின்றன. மூங்கில் இயற்கையிலேயே வெப்பத்தை கடத்தாத ஒரு பொருளாகும். தரை வெப்பமாக இருந்தாலும் மூங்கில் பாய் குளிர்ச்சியாகவே இருக்கும். நவீன வீடுகளின் தரையில் விரிப்பதற்கும் இது மிகவும் வசதியானது. இதை எளிதாக சுருட்டியும் எடுத்துச் செல்லலாம். மூங்கில் பாய்களுக்கு காற்றோட்டத்தை அனுமதிக்கும் தன்மை உண்டு. இதனால் படுத்து உறங்கும் பொழுது முதுகில் வியர்வை தேங்காது. இவற்றை எளிதில் சுத்தம் செய்யலாம். நீண்ட காலம் உழைக்கும்.
67
5. தாழம் பாய் (Screw Pine Mat)
தாழம்பூ செடியின் இலைகளில் இருந்து முட்களை நீக்கி காய வைத்து பாய்கள் செய்யப்படுகின்றன. இந்த பாய்களுக்கு தனித்துவமான நறுமணம் உண்டு. இது மனதிற்கு அமைதியை தருவதுடன் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. உடல் சூட்டினால் ஏற்படும் வியர்க்குரு மற்றும் தோல் நோய்களை தடுக்கும் ஆற்றல் இந்த தாழம்பூ பாய்களுக்கு உண்டு. மருத்துவ குணம் கொண்ட இந்தப் பாய்களில் இருந்து வெளியாகும் நறுமணம் மனதிற்கு புத்துணர்ச்சியையும், ஆழ்ந்த உறக்கத்தையும், அபாரமான குளிர்ச்சியையும் தரும். கோடையில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையை உறிஞ்சி, சரும நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.
77
5. வெட்டிவேர் பாய் (Vetiver Mat)
வெட்டிவேர் என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு வேர் வகையாகும். இதை கொண்டு தயாரிக்கப்படும் பாய்கள் கோடைக்கு வரப்பிரசாதமாக அமைகின்றன. இதில் உறங்கும் பொழுது ஒருவித நறுமணம் வீசும். இந்த பாயின் மீது லேசாக தண்ணீர் தெளித்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் திரைச்சீலைகள் போல் பயன்படுத்தினால் ஏசி இல்லாமலேயே வீட்டிற்கு நீண்ட நேரம் குளிர்ச்சியைத் தரும். மேலும் இந்த பாய்களில் படுத்து உறங்குவது மன அழுத்தத்தை குறைத்து, ஆழ்ந்த உறக்கத்தையும் தரும். வெட்டிவேர் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.