Swami Vivekananda Jayanti 2023: துன்பம் இல்லா வாழ்க்கைக்கு விவேகானந்தர் சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்!

First Published Jan 13, 2023, 10:23 AM IST

Swami Vivekananda Jayanti 2023: வாழ்க்கையில் மன ஒருமைப்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்வதோடு இல்லாமல் வாழ்ந்தும் காட்டியவர் சுவாமி விவேகானந்தர். 

1863இல் விஸ்வநாத தத்தர், புவனேஸ்வரி தேவி என்போருக்கு ஜனவரி 12ஆம் தேதி மகனாக பிறந்தவர், நரேந்திரநாத் தத்தா. கொல்கத்தாவில் பிறந்த இவர் உலகமெங்கும் உள்ள இளைஞர்களுக்கு ஆதர்சன நாயகனாக 'சுவாமி விவேகானந்தராக' மாறுவார் என அப்போது யாருக்கும் தெரியாது. 

நரேந்திரநாத்தின் ஆன்மிக வாழ்க்கையிம் குருவாக இராமகிருஷ்ண பரமஹம்சர் இருந்தார். பள்ளி, கல்லூரியில் படிப்பை நிறைவு செய்த சுவாமி விவேகானந்தருக்கு இளைஞர்கள் மீது நம்பிக்கை அதிகம். துறவிகளை குறித்து பேசினால், அதில் இளைஞர்களை கவரும் துறவியாக விவேகானந்தர் தான் இருப்பார். அதனால் தான் தேசிய இளைஞர் தினமாக அவரது பிறந்தநாளை நடுவண் அரசு அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க: Vastu Shastra for home: வீட்டில் கெட்ட சக்திகள் ஆதிக்கமா? உடனே விரட்டியடிக்க வாஸ்துபடி இதை பண்ணுங்க!

நம் நாட்டின் சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் சுவாமி விவேகானந்தர் வாழ்ந்தாலும், நேரடியாக அரசியல் பணியில் தன்னை ஈடுபடுத்தவில்லை. ஆனால் அதில் ஈடுபட்டவர்களிடையே விவேகானந்தர் தாக்கம் இருந்தது. அகிம்சை வழியில் சுதந்திரம் வேண்டுமென போராடிய மகாத்மா காந்திக்கு, விவேகானந்தர் புத்தகங்கள் தேசபக்தியை அதிகமாக்கியது. தனிப்பட்ட மனிதனுடைய ஆளுமையை வளர்தெடுப்பதில் விவேகானந்தர் அருளிய இலக்கியத்தை விட வேறெதுவும் சிறந்ததில்லை என்கிறார் நேதாஜி.  

தன் குருவின் பெயரில் சுவாமி விவேகானந்தர் தொடங்கிய துறவிகளின் அமைப்பு தான் ராமகிருஷ்ண மடம். புகழுக்கு ஆசைப்படாத அவர், தன்னை முன்னிறுத்தாமல் குருவின் பெயரில் தான் அனைத்து மடங்களையும் தொடங்கினார்.  

"அடிப்படையில் மனிதனின் மன ஒருமைப்பாடுதான் அவன் அடையும் அனைத்து வெற்றிகளுக்கும் ஆதாரம்!" என உளவியல்ரீதியாக வாழ கற்று கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர். 

இதையும் படிங்க: Facts about Jallikattu: சிந்து சமவெளி நாகரிகத்தை முந்திய ஜல்லிக்கட்டு! வியக்க வைக்கும் சுவாரசிய தகவல்கள்

நமக்கு வரும் துன்பங்கள் எல்லாமே நாம் அதற்காக நம்மை தயார்ப்படுத்திக் கொண்டதால்தான் வந்தவை என அறிய வேண்டும். அதில் ஒரு பாதியை நாம் செய்திருப்போம். புற உலகம் மறுபாதியை செய்திருக்கும். அதுவே துயரத்திற்கு காரணம். நம்மை நாமே அடக்கினால் துயரம் ஒருபோதும் வராது என்கிறார் சுவாமி விவேகானந்தர். 

"மரணத்தைப் பற்றிக் கவலைப்படாதே! நீ இருக்கும்போது அது வரப் போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப் போவதில்லை. பிறகு எதற்குக் கவலை?- சுவாமி விவேகானந்தர்" 

1902 ஜூலை 4ஆம் தேதி விவேகானந்தர் மண்ணுலகை பிரிந்தார். வெறும் 39 ஆண்டுகள்தான் வாழ்ந்தாலும், வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை இளைஞர்களுக்கு கற்று கொடுத்தவர். அவருடைய கருத்துகளை புரிந்து கொண்டு செயல்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேற முடியும்.  

இதையும் படிங்க: Pongal wishes 2023: பொங்கல் போலவே இன்பம் பொங்கட்டும்... உங்களுக்கான பொங்கல், போகி பண்டிகை வாழ்த்துகள் இதோ...

click me!