விவேகானந்தர் ஜெயந்தி: வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும் பொன்மொழிகள்!

First Published Jan 12, 2023, 4:25 PM IST

கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த சுவாமி விவேகானந்தர் தனது பேச்சுத்திறமையால் இளைஞர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை வளர்த்தார்.

விவேகானந்தர்

கடந்த 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி விசுவநாத் தத்தாவுக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் விவேகானந்தர். இவரது தாய்மொழி வங்காளம். சிறந்த விளையாட்டு வீரர். சிறு வயது முதலே நினைவாற்றல் திறனும் அதிகம் கொண்டவர். இளம் வயது முதலே தியானம் செய்தார். இசை, இசைக்கருவி வாத்தியங்களும் கற்று தேர்ந்தார்.

தத்துவம்

பள்ளிப்படிப்பை முடித்த கையோடு கடந்த 1879 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அதன் பிறகு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவம் பயின்றார். இறைவனை வழிபடுவது குறித்தும், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்துள்ள இந்த உலகம் பற்றியும் பெரியோர்களிடம் விவாதித்தர்.

சகோதர, சகோதரிகள்:

விவேகானந்தருக்கு மகேந்திரநாத் தத்தர் மற்றும் பூபேந்திரநாத் தத்தர் என்று இரு இளைய சகோதர்கள் இருந்தனர். மேலும், மூத்த சகோதரி ஒருவரும், இளைய சகோதரி ஒருவரும் இருந்தார். சகோதரிகளில் ஒருவரை சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுத்த நிலையில் அவர் புகுந்த வீட்டாரது கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். பூபேந்திரநாத் தத்தர் இந்திய சுதந்திரத்திற்குப் போராடினார்.

இராமகிருஷ்ணர்:

இராமகிருஷ்ணர் பற்றி அறிந்து கொண்டு அவரது சீடரானார். கடந்த 1881 ஆம் ஆண்டு முதன் முதலில் அவரை சந்தித்தார். இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை விவேகானந்தரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாளடைவில், ஞான மார்க்கம் மற்றும் பக்தி மார்க்கம் பற்றி முழுவதும் விவேகானந்தர் புரிந்து கொண்டார். கடந்த 1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்தார்.

விவேகானந்தர் - துறவி

அவரது மறைவைத் தொடர்ந்து விவேகானந்தர் மற்றும் இராமகிருஷ்ணரின் மற்ற சீடர்களும் துறவிகளாயினர். இந்திய துணைக்கண்டம் முழுவதும் 4 ஆண்டுகள் சுற்றி வந்து கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறை குறித்து நன்கு அறிந்து கொண்டார்.

கிண்கிணி நாதம்

கிண்கிணி நாதம் போன்று குரல் வளம் கொண்டவர் விவேகானந்தர் என்று சட்டம்பி சுவாமிகள் கூறியுள்ளார். கடந்த 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி விவேகானந்தர் தனது 39ஆவது வயதில் பேலூரில் காலமானார். 
 

விவேகானந்தர் பொன்மொழிகள்:

உண்மைக்காக எதை வேண்டுமானாலும் துறக்கலாம், ஆனால், உண்மையை மட்டும் எதற்காகவும் துறக்கவே கூடாது.

கடவுள் இருந்தார் என்றால் அவரை நாம் காண வேண்டும். ஆத்மா இருந்தால் நாம் அதனை உணர வேண்டும். நம்பிக்கையே இல்லை என்றால் நாத்திகனாக இருப்பது நல்லது.

விவேகானந்தர் பொன்மொழிகள்:2

சிந்தித்து செயல்படுவதே நல்லது. உனது மனதை லட்சியங்கள் மற்றும் சிந்தனைகள் கொண்டு நிரப்ப வேண்டும். தினந்தோறும் அவற்றை உன் கண் முன் நிறுத்தினால், நல்ல செயல்கள் அதன் மூலம் உருவாகும்.

சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர சாத்தானுக்கும், கடவுளுக்கும் வேறு எந்த வேறுபாடும் இல்லை.
 

விவேகானந்தர் பொன்மொழிகள்:3

இதுவரையில் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை செய்து முடிக்க வேண்டும்.

சுயநலம் என்பதை தூர எறிந்துவிட வேண்டும்.

விவேகானந்தர் பொன்மொழிகள்:4

வலிமை என்பதே மகிழ்ச்சியான, நிரந்தரமான வாழ்க்கை.

எதை நினைக்கிறாயோ, அதுவாக ஆகிறாய்
வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை உடையவனாய் ஆவாய்

விவேகானந்தர் பொன்மொழிகள்:5

முதலில் உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகம் சரியாகிவிடும்.

வாழ்வும் சாவும், பிறப்பும் இறப்பும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயை.

விவேகானந்தர் ஸ்லோகம்:

எழுந்திரு,

விழித்திரு,

இலக்கை அடையும் வரை நிறுத்தாதே..!

click me!