எலுமிச்சை தோலை தூக்கி போடாதீங்க! 'இப்படி' யூஸ் பண்ணா லெமனை மிஞ்சும் பலன்கள்!!

First Published Oct 2, 2024, 1:48 PM IST

Lemon Peel Benefits :  எலுமிச்சை சாறு போலவே அதன் தோலும் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வாரி வழங்குகிறது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

Lemon Peel Benefits In Tamil

பொதுவாக நம் எல்லாருடைய வீட்டின் பிரிட்ஜிலும் எலுமிச்சை பழம் கண்டிப்பாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் எலுமிச்சை ஜூஸ் குடிக்க விரும்புவார்கள். எலுமிச்சை ஜூஸ் ஆக மட்டுமின்றி பல்வேறு உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 

எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி உள்ளது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். மேலும் உப்பு தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து வாய் கொப்பளித்தால் வாயிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.

பொதுவாக எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி பிறகு அதன் தோலை குப்பை போட்டுவிடுவோம். ஆனால் அவற்றின் தோலும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது தெரியுமா? ஆம் எலுமிச்சை பழ தோலில் எண்ணில் அடங்கா மருத்துவ நன்மைகள் இருக்கிறது. அவற்றைப் பற்றி நீங்கள் அறிந்தால் இனி அதை குப்பையில் தூக்கி போட மாட்டீர்கள்.

Lemon Peel Benefits In Tamil

எலுமிச்சை பழத்தோல் சத்துக்கள்

எலுமிச்சை பழத்தை விட அதன் தோளில் அதிக சத்துக்கள் உள்ளதாம். அதாவது எலுமிச்சைத்தை விட அதன் தோலில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை அதிகமாகவே உள்ளது.

எலுமிச்சை தோல் ஆரோக்கிய நன்மைகள்

கண்ணுக்கு நல்லது

எலுமிச்சை தோலில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டு
கண் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. மற்றும் இதில் இருக்கும் வைட்டமின் சி வயதானவர்களுக்கு ஏற்படும் கண் குறைபாடுகளுக்கு அருமருந்தாகும்.

காயங்களை குணமாக்கும்

எலுமிச்சை தோலானது பாக்ரியா பரவும் தன்மையை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது எனவே இது காயங்களை விரைவில் ஆற்ற உதவுகிறது. அதுமட்டுமின்றி இதில் சிட்ரிக் அமலம் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை விரைவில் குணமாகும். இதற்கு புண் உள்ள இடத்தில் எலுமிச்சை தோலை தடவ வேண்டும்.

Latest Videos


Lemon Peel Benefits In Tamil

அக்குள் துர்நாற்றத்தை போக்கும்

எலுமிச்சை தோலில் இருக்கும் சிட்ரிக் அமிலம் பாக்டீரியாவுக்கு எதிராக போராடும். எனவே எலுமிச்சை பழ தோலின் உள்பகுதியை அக்குளில் தேய்த்தால் துர்நாற்றம் அடிக்காது. அதுபோல கொதிக்கும் தண்ணீரில் எலுமிச்சை பழ தோலை போட்டு பிறகு அந்த நீரை ஒரு காட்டன் துணி அல்லது பஞ்சில் நனைத்து அகுளில் தடவினால் துர்நாற்றம் விலகும்.

முகப்பருவை குறைக்கும்

எலுமிச்சை தோலானது கிருமிகளை கொல்லும் பண்புகளைக் கொண்டுள்ளதால் அந்த தோலை கொதிக்கும் நீரில் போட்டு அதனுடன் புதினாவையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு அந்த நீரை உங்கள் முகத்தில் தடவி வந்தால் பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

மலச்சிக்கலுக்கு நல்லது

எலுமிச்சை தோலில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு அருமருந்தாகும். இது தவிர இது அல்சரை குணமாக்கும் மற்றும் உடல் எடையை சீராக வைக்க உதவும்.

Lemon Peel Benefits In Tamil

கெட்ட கொழுப்பை கரைக்கும்

எலுமிச்சை தோலில் இருக்கும் கால்சியம் மெக்னீசியம் பொட்டாசியம் ஆகியவை ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி இதிலிருக்கும் ஃப்ளேவனாய்டுகள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கவும், இதயத்தை ஆரோக்கியமாக வைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

எலும்புகளை வலுவாக்கும்

எலுமிச்சை தோளில் அதிக அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் சி இருப்பதால் அவை எலும்புகளை பாதுகாக்கும் மற்றும் வலுவாக வைக்கும்.

இதையும் படிங்க: இந்த அற்புத சக்தி பற்றி தெரிந்தால் போதும்..இனி எலுமிச்சம் பழத்தோலை தூக்கி குப்பையில் போட மாட்டீர்கள்..

Lemon Peel Benefits In Tamil

புற்றுநோய் வராமல் தடுக்கும்

எலுமிச்சை தோல் சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயல்படுவதால் இது புற்றுநோய் மற்றும் உடல் உறுப்பு செல்களை பாதிக்கும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பாக வைக்கும்.

இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை எலுமிச்சை தோலானது நமக்கு வழங்குவதால், இனி அதை தூக்கி போடாமல் எந்த தயக்கமுமின்றி மேலே சொன்னபடி பயன்படுத்தி பாருங்கள். நன்மைகளை பெற்றுக் கொள்ளுங்கள்!!

இதையும் படிங்க:  இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி எலுமிச்சை தோலை தூக்கி போட மாட்டீங்க!!

click me!