நெய்யில் இத கலந்து சாப்பிடுங்க.. சர்க்கரை நோய், இதய நோய்க்கு குட் பை சொல்லுங்க!

First Published | Oct 2, 2024, 12:17 PM IST

Ghee Benefits : நெய்யுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் அதன் பலன்கள் இரண்டு மடங்கு கிடைக்கும் தெரியுமா? அது என்னென்ன பொருட்கள் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
 

Ghee Benefits In Tamil

நெய்யில் நல்ல கொழுப்பும் புரதமும் உள்ளது. இது எடையை கூட்டும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட என நெய் பற்றிய இப்படி பல கருத்துக்களை நாம் காலம் காலமாகவே கேள்விப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக நெய் இருக்கும். நெய்யை தினமும் காலை சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. 

நெய்யை சாம்பார், பருப்பு சாதம், சூடான சாதம், சப்பாத்தி, தோசை, கிச்சடி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். நெய் சமையலுக்கு மட்டுமல்ல பல உடல் உள்ள பிரச்சனைகளையும் சரி செய்யவும் பெரிதும் உதவுகின்றது. 

அந்த வகையில், நெய்யுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் அதன் பலன்கள் இரண்டு மடங்கு கிடைக்கும் தெரியுமா? அது என்னென்ன பொருட்கள் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

Ghee Benefits In Tamil

நெய்யில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்

ஒரு ஸ்பூன் நெய்யில் கலோரிகள் 112, மொத்த கொழுப்பின் அளவு 14 கிராம், புரதம் 0.04 கிராம், வைட்டமின் ஏ 438 IU, வைட்டமின் டி 15 மி.கிராம், வைட்டமின் கே 1.2 மி.கிராம், கோலின் சத்து 2.7 மி. கிராம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் 45 மி.கிராம், ஒமேகா 6 கொழுப்பு அமிலம் 2.7 மி.கிராம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டிய பொருட்கள்

மஞ்சள்

மஞ்சள் ஒவ்வொரு வீட்டை சமையலறையில் இருக்கும் ஒரு முக்கியமான மசாலா பொருளாகும். மஞ்சளில் இருக்கும் குர்குமின் ஒரு இயற்கையான பைட்டோ கெமிக்கல் ஆகும். இது மூட்டு வலிக்கு ரொம்பவே நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதுதவிர, இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளது. இப்படி பல நன்மைகள் நிறைந்துள்ள மஞ்சளை நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் சக்தி இரண்டு மடங்காகும். இதனால் இதய ஆரோக்கிய மேம்படும் உடல் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.

Tap to resize

Ghee Benefits In Tamil

பட்டை

மஞ்சளைப் போலவே பட்டையும் சமையலறையில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். இது உடலில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை போக்க முக்கிய பங்கு வகிக்கிறது. பட்டையில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.

பட்டை சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லதாம். எப்படியெனில், இது உடலில் இன்சுலின் எதிர்ப்பை குறைப்பதாகவும் மற்றும் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். எனவே, இதை அடுப்பில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும் போது அதில் நெய் மற்றும் பட்டை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பிறகு அதை ஆற வைத்து வடிகட்டி குடித்தால் இவற்றின் பலன்கள் இரண்டு மடங்கு கிடைக்கும்.

இதையும் படிங்க:  நெய் உண்மையிலேயே கெட்டதா? நெய் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்குமா?

Ghee Benefits In Tamil

பூண்டு

சமையலறையில் பயன்படுத்தப்படும் மற்றொரு பொருள் பூண்டு. எல்லாவிதமான உணவுகளுக்கும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. பூண்டில் மருத்துவ குணங்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. நம்மில் பலர் பூண்டை பச்சையாகவோ அல்லது வறுத்தோ சாப்பிடுவார்கள். ஆனால், பூண்டை நெய்யில் வறுத்து சாப்பிட்டால் சாப்பிடுவதற்கு சுவையாகவும் அதன் பலன்கள் இரண்டு மடங்கு பெறமுடியும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இதய ஆரோக்கியம் மேம்படும், சருமத்திற்கு ரொம்பவே நல்லது மற்றும் இரத்த அழுத்தம் குறையும் இது போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

கற்பூரம்

கற்பூரம் இந்து மதத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது மேலும் இது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லதாக கருதப்படுகிறது. அதாவது இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வலி நிவாரணத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி நன்மைகள் நிறைந்த கற்பூரத்தில் இரண்டை எடுத்து அதை நெய்யுடன் சேர்த்து சூடாக்கி பிறகு அதை நன்கு ஆற வைத்து ஒரு கண்ணாடி டப்பாவில் காற்று புகாதவாறு அடித்து வைத்துக் கொள்ளுங்கள். வலி இருக்கும் இடத்தில் இதை தடவி வந்தால் விரைவில் வலி நீங்கும்.

Ghee Benefits In Tamil

துளசி

துளசி இந்து மதத்தில் மிகவும் புனிதமாக பார்க்கப்படுகிறது. இது தவிர, இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால், பலர் இந்த இலையை பச்சையாகவே சாப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்களை நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள்.  துளசியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது.

துளசியல் இருக்கும் சத்துக்கள் உடலில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக செயல்படுகின்றது. துளசியானது ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை இயல்பாக பெரிதும் உதவுகிறது. இது தவிர இது மன அழுத்தத்தையும் குறைக்கும். ஆகையால் துளசியை தண்ணீரில் போட்டு அதில் சிறிதளவு நெய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பிறகு அந்த நீரை வடிகட்டி குடித்தால் அது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.

இதையும் படிங்க:  நெய் சுத்தமானதா என்பதை வீட்டிலேயே ஈஸியா செக் பண்ணலாம்! சிம்பிள் டிப்ஸ் இதோ!

Latest Videos

click me!