
குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட பல அடிப்படை தேவைகளுக்காக் நாம் குளியலறையை பயன்படுத்துகிறோம். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் குளியலறையை தங்களின் சொர்க்கமாக பார்க்கும் பலர் உள்ளனர். இவர்கள் அதிக நேரம் பாத்ரூமிலேயே செலவிடுகின்றனர். குறிப்பாக தங்கள் வாழ்க்கையின் கடினமான காலமாக இருந்தாலும் சரி அல்லது தங்களுக்கான நேரம் ஒதுக்குவதானாலும் சரி பாத்ரூமையையே பயன்படுத்துகின்றனர். இதனால் பாத்ரூமில் அதிகமாக நேரம் செலவழிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தினசரி ஸ்கின் கேர் வழக்கத்தை பின்பற்றுவது மட்டுமின்றி, தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தனியாக சென்று வழுவது, பாட்டு பாடுவது என பல வேலைகளை பாத்ரூமில் சிலர் செய்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் பாத்ரூமில் நீங்கள் நீங்களாகவே இருக்க முடியும். யாருக்காகவும் அல்லது எதற்காகவும் நடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஆனால் பெரும்பாலான மக்கள் ஏன் குளியலறையை நீண்ட நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிக நேரம் குளியலறையில் இருக்கும் நபர்கள் அதற்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்கி உள்ளனர்.
வில்லெராய் & போச் என்ற நிறுவனம் இதற்கான காரணம் குறித்து கண்டறிய ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பதிலளித்தவர்களில் 43% பேர் அமைதி மற்றும் நிம்மதிக்காக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அதிக நேரத்தில் பாத்ரூமில் அதிக நேரம் செலவிடுவதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் ஒரு வாரத்தில் சராசரியாக 1 மணி நேரம் 54 நிமிடங்கள் அல்லது மாதத்தில் ஒரு வேலை நாளை பாத்ரூமில் செலவிடுகின்றனர்.
ஆனாலும் கூட பெண்களை விட ஆண்களே அதிக நேரம் பாத்ரூமில் செலவிடுகின்றனர். அதன்படி எல்லா வயது பிரிவை சேர்ந்த ஆண்களும் பெண்களை விட அதிக நேரம் கழிவறையில் செலவிடுகின்றனர். ஆண்கள் வாரத்திற்கு சராசரியாக 2 மணிநேரம் அல்லது கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கழிப்பறையில் செலவிடுகிறார்கள். பெண்களின் ஒரு நாளைக்கு 15 நிமிடங்களுக்கு மேல் ஒரு வாரத்திற்கு 1 மணி நேரம் 54 நிமிடங்கள் பாத்ரூமில் செலவிடுகின்றனர்.
மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக பாத்ரூமில் அதிக நேரம் செலவிடுவதால் அவர்களின் மன ஆரோக்கியத்தில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் அதிக நேரம் பாத்ரூமில் செலவிடும் சிலருக்கு தங்களுக்கு மன அழுத்தம் குறைகிறது என்று தெரியாமலே அதை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர்.
பிரிட்டிஷ் அசோசியேஷன் ஃபார் கவுன்சிலிங் மற்றும் சைக்கோதெரபி உறுப்பினர் ஜார்ஜினா ஸ்டர்மர் இதுகுறித்து பேசிய போது பலர் குளியலறையை எல்லாவற்றிலும் இருந்து தப்பிக்கும் இடமாக கருதுகின்றனர். வாழ்க்கை மிகவும் பரபரப்பாகவும் மிகவும் வேகமாக சென்று கொண்டிருக்கும் காலங்களில் அனைவருக்கும் சமாளிக்கும் வழிமுறைகள் தேவை. அதற்கு பாத்ரூம் ஒரு சிறந்த இடமாக கருதப்படுகிறது. குளியலறையில் தங்களுக்கான இடைவெளியை எடுப்பது என்பது எப்போதும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் பாத்ரூமில் அதிக நேரம் செலவழித்த பிறகும் ஒருவருக்கு மன , லூவைப் பயன்படுத்திய பிறகு ரிலாக்ஸாக ஓய்வெடுக்க முடியவில்லை என்றால் சில சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று அவர் ந்துரைத்தார். மேலும் "ஐந்து விரல் சுவாசப் பயிற்சியை அமைதியைப் பேணுவதற்கான ஒரு நுட்பமாக உறுதியாக நம்புகிறேன்.
உங்கள் கைகளை முன்னாள் நீட்டி, ஒரு கையின் ஆள்காட்டி விரலை மேல் நோக்கியும் மற்றொரு கையின் ஆள்காட்டியின் விரலை கீழ் நோக்கியும் வைக்க வேண்டும். விரலை மேல்நோக்கி வைக்கும் போது மூச்சை உள்ளிழுக்கவும், அதே நேரம் விரலை கீழ்நோக்கி வைக்கும் மூச்சை வெளியே விடவும். இதன் மூலம் நீங்கள் ரிலாக்ஸாக உணர முடியும்” என்று தெரிவித்தார்.