மோசமான உணவு பழக்கம், உட்கார்ந்த வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணங்கள் உடல் பருமன் என்பது தற்போது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. எனவே எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலரும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக கடுமையான டயட், வாக்கிங், ஜாக்கிங், உடற்பயிற்சி என பல முறைகளை பின்பற்றி வருகின்றனர். உடல் எடையை குறைப்பதில் உங்களின் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, நாள் முழுவதும் நீங்கள் செய்யும் உடல் செயல்பாடு முக்கியமானது.
ஆரோக்கியமாக இருக்கவும், உடல் பருமனைக் குறைக்கவும், தினமும் 45 நிமிடங்கள் நடப்பது நல்லது, ஆனால் 45 நிமிடங்கள் என்னால் நடக்க முடியாது என்று சொல்பவர்கள் 10 நிமிடம் ஓடுவதால் பயனடையலாம். தினமும் காலையில் 10 நிமிடம் ஓடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.