அடிக்கடி காலிஃபிளவர் சாப்பிட்டால் ஆபத்தா? நிபுணர்கள் சொல்லும் உண்மை என்ன?

First Published | Oct 26, 2024, 8:34 AM IST

Cauliflower Health Risks : உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி காலிஃபிளவர் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அந்த லிஸ்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று இங்கு பார்க்கலாம்.

Cauliflower Health Risks In Tamil

காலிஃப்ளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றாகும். காலிஃப்ளவரில் பக்கோடா,
குருமா, பிரியாணி என பல வகையான ரெசிபிகள் செய்து மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருப்பதுமட்டுமின்றி, உடல் நலத்திற்கும் ஆரோக்கியமானதும் கூட. 

காலிஃப்ளவரில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

Cauliflower Health Risks In Tamil

காலிஃப்ளவர் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வாரி வழங்கினாலும் ஒரு சிலருக்கு இது ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா? ஆம், உடலில் ஒரு சில பிரச்சனை உள்ளவர்கள் காலிஃப்ளவர் சாப்பிட்டால் அந்த பிரச்சனையை மேலும் அதிகரிக்க செய்யும். எனவே யார் யாரெல்லாம் காலிஃப்ளவர் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  இது தெரிந்தால் இனிமேல் நீங்கள் காலிஃபிளவர் இலைகளை தூக்கி வீச மாட்டீங்க!

Tap to resize

Cauliflower Health Risks In Tamil

காலிஃபிளவரை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது :

வாயு & அமிலத்தன்மை உள்ளவர்கள்

காலிஃப்ளவரில் கார்போஹைட்ரேட் உள்ளதால், அது எளிதில் உடையாது. இதனால் வயிற்றில் வாயு மற்றும் வீக்கம் உருவாகும். எனவே வாயு மற்றும் அமலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் காலிஃப்ளவரை தவிர்ப்பது நல்லது. மீறி சாப்பிட்டால் செரிமான பிரச்சனையை சந்திப்பீர்கள். 

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள்

தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் காலிபிளவரை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். மீறி சாப்பிட்டால் அது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மோசமாக பாதிக்கும். மேலும் உங்களது ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தும். இதனால் பல மோசமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Cauliflower Health Risks In Tamil

சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள்

சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் காலிபிளவர் சாப்பிடக்கூடாது. ஏனெனில் காலிபிளவரில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் பிரச்சனையை அதிகரிக்கச் செய்யும். அதுபோல காலிஃப்ளவரில் இருக்கும் அதிகப்படியான நுகர்வு உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கச் செய்யும். எனவே யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்களும் காலிபிளவர் சாப்பிட வேண்டாம்.

மாரடைப்பு

மாரடைப்பு உள்ளவர்கள் ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள். எனவே அவர்கள் காலிபிளவர் அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் காலிஃப்ளவரில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. இது ரத்தம் படிப்படியாக கெட்டியாகச் செய்யும். 

இதையும் படிங்க: காலிஃப்ளவர் வாங்குனா இப்படி ஒருமுறை கறி செஞ்சி பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..!

Cauliflower Health Risks In Tamil

கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்கள்

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் காலிஃப்ளவரை அதிகமாக சாப்பிட வேண்டாம். அதுவும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் காலிஃப்ளவரை சாப்பிட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.  இதனால் கர்ப்பிணி பெண் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும்.

அதுபோல பாலூட்டும் தாய்மார்கள் காலிஃப்ளவர் சாப்பிட வேண்டாம். இது குழந்தைக்கு வயிற்று வலியை ஏற்படுத்தும்.

குறிப்பு : மேலே சொன்ன பிரச்சனை உள்ளவர்கள் காலிபிளவர் சாப்பிட விரும்பினால் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்.

Latest Videos

click me!