பழங்கள் மற்றும் உலர்பழங்களில் அதிக அளவிலான நன்மைகள் உள்ளது. அவற்றை அரைத்து பழரசமாக அருந்துவதை விட, அப்படியே உணர்வது தான் மிக மிக சிறந்த நன்மைகளை தருகின்றது. அந்த வகையில் பேரீச்சம் பழத்தை சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பேரீச்சம் உலர்ந்து இருப்பதால், அவற்றின் கலோரி உள்ளடக்கம் பெரும்பாலான பழங்களை விட அதிகமாக உள்ளது. பேரீச்சம்பழத்தின் கலோரி திராட்சை மற்றும் அத்திப்பழங்கள் போன்ற பிற உலர்ந்த பழங்களைப் போலவே உள்ளது.
பேரீச்சம்பழத்தில் உள்ள கலோரிகளில் பெரும்பாலானவை கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து வருகிறது. மீதமுள்ளவை மிகக் குறைந்த அளவு புரதத்திலிருந்து வருகின்றது. கொஞ்சம் கலோரிகள் இருந்தபோதிலும், பேரீச்சம்பழத்தில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து கூடுதலாக உள்ளது மேலும் சில முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் உள்ளன.
வெயிட் லாஸ் பண்ண போறீங்களா? இந்த கட்டுக்கதைகளை இனியும் நம்பாதீங்க!