உலகிலேயே மிகவும் ஆபத்தான உயிரினம் எதுவென்றால் பாம்பு தான். பாம்பை பார்த்தாலே படையே நடுங்கும் என்று சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட பாம்பு வீட்டுக்குள் வந்தால், சொல்லவே தேவையில்லை. மேலும் நகரங்களை விட கிராமங்களில் தான் பாம்புகள் அதிகமாக காணப்படுகின்றன.
26
Home Remedies to Repel Snakes Using Smell
இத்தகைய சூழ்நிலையில், பாம்புகளுக்கு சில வாசனை பிடிக்கவே பிடிக்காது. அந்த வாசனையுள்ள பொருட்களை உங்கள் வீட்டில் வாங்கி வைத்தால் பாம்புகள் வீட்டிற்குள் வரவே வராது ஓடிவிடும். அப்படிப்பட்ட பாம்புகளை விரட்டும் தன்மை கொண்ட பொருட்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
36
பூண்டு மற்றும் வெங்காயம் :
பாம்புகளுக்கு பூண்டு மற்றும் வெங்காயத்தில் இருந்து வரும் கடுமையான வாசனை பிடிக்கவே பிடிக்காது. எனவே அவற்றை நசுக்கி பாம்புகள் வீட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ள இடத்தில் வைக்கவும் அல்லது அவற்றை தண்ணீரில் கலந்து சுவர்கள், கதவுகள் மற்றும் வீட்டை சுற்றி தெளிக்கவும்.
புதினா மற்றும் துளசி இலையின் வாசனை பாம்புகள் விரும்புவதில்லை. எனவே உங்களது வீட்டில் அல்லது தோட்டத்தில் புதினா மற்றும் துளசி இலைகளை நடுங்கள். இவை பாம்புகளை விரட்டுவது மட்டுமல்லாமல், வீட்டை சபுத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
56
எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் :
வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து அதனுடன் சில துளிகள் இலவங்கப்பட்டை எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து அந்த கலவையை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அவற்றிலிருந்து வரும் வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது.
66
ஊதுபத்திகள் :
புகைக்கு பாம்புகள் மிகவும் உணர்ந்துடன் உடையது. உங்களது வீட்டை சுற்றியோ அல்லது உங்களது வீட்டிற்குள் பாம்புகள் வர வாய்ப்புகள் இருந்தாலும் ஊதுபத்தி அல்லது சில உலர்ந்த இலைகளை ஏரிதால் அவற்றிலிருந்து வரும் புகை பாம்புகளை விரட்டி அடிக்க உதவும்.