Parenting Tips : பெற்றோரே! குழந்தைங்க பல் துலக்குறப்ப 'இதை' கவனிச்சீங்களா?? இனி 'பேஸ்ட்'ல அந்த அளவை மீறாதீங்க!

Published : Oct 30, 2025, 04:02 PM IST

பெற்றோர் தங்கள் குழந்தைகளின் வாய்வழி சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

PREV
15

ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதிலும் குழந்தைகளின் பற்கள் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் குழந்தைகளுக்கு எப்போது பல் துலக்க பழக்க வேண்டும் என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இந்தப் பதிவில் குழந்தைகளின் வாய்வழி சுகாதாரத்தை பேணுவது குறித்து சில குறிப்புகளை குழந்தை மருத்துவ நிபுணர் வழிகாட்டலின்படி காணலாம்.

25

குழந்தைக்கு முதல் பல் வந்த பின்னர் பல் பராமரிப்பு வழக்கத்தைப் பெற்றோர் தொடங்கலாம். பல பெற்றோர் குழந்தைகளுக்கு அனைத்து பற்களும் முளைத்த பின்னர் பல் துலக்கலாம் என நினைக்கிறார்கள். இது தவறான கருத்தாகும். குழந்தைகளுக்கு பற்கள் முளைத்த பின்னர், பால் மற்றும் உணவின் சிறிய துகள்கள் அவற்றில் ஒட்டத் தொடங்கும். இது அவர்களின் பற்சிதைவுக்கு வழிவகுக்கும். அதனால் குழந்தைக்கு காலை, இரவு என இரண்டு வேளைகளிலும் பல் துலக்க வேண்டும்.

35

அண்மையில் அமெரிக்க பல் சங்கம் (ADA) வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, குழந்தைகளுக்கும் ஃப்ளூரைடு பற்பசை கொடுக்கலாம். பற்பசையில் மிகக் குறைந்தளவு ஃப்ளூரைடு உள்ளடக்கம் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும் என நினைவில் கொள்ளுங்கள். இது பற்களை சுத்தம் செய்வதோடு கிருமிகளிலிருந்தும் பாதுகாக்கிறது. ஃப்ளூரைடு குழந்தைகளின் பற்களை வலுப்படுத்தி, துவாரங்களையும் தடுக்கிறது.

45

குழந்தையின் வயதுக்கேற்ப பற்பசையின் அளவு இருக்கவேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைக்கு சிறுதானிய அளவு பற்பசை போதுமானது. மூன்று வயதுக்கு அதிகமாகும்போது பட்டாணி அளவு பற்பசை கொடுக்கலாம். அதற்கு மேல் கொடுத்து பழக்க வேண்டாம். குழந்தைகள் பற்பசையின் சுவை காரணமாக அதிகம் கேட்கலாம். ஆனால் கொடுக்க வேண்டாம்.

55

பெரியவர்களுக்கான பற்பசையில் 1,000 பி.பி.எம் (ppm - parts per million) இருக்கும். இதை தாண்டக் கூடாது. அதைப் போல குழந்தைகளுக்கு 500 பி.பி.எம் (ppm - parts per million) அளவை தாண்டாமல் அதற்கு குறைவாக ஃப்ளுரைடு இருக்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories