Skin & Hair Care: விலையுயர்ந்த க்ரீம்கள் வேண்டாம்.! இந்த பூக்கள் சருமத்தையும் முடியையும் ஜொலிக்க வைக்கும் தெரியுமா?

Published : Jun 13, 2026, 01:52 PM IST

ரோஸ் வாட்டர், செம்பருத்தி எல்லாம் நீங்க பயன்படுத்தியிருப்பீங்க. ஆனா, அதுமட்டுமில்ல, இன்னும் பல பூக்கள் நம்ம சருமத்தையும் முடியையும் அழகாக்கும். அப்படிப்பட்ட 7 பூக்களைப் பத்தி இங்கே பார்க்கலாம்.

PREV
19
பூக்களைப் பயன்படுத்தி சருமத்தை அழகாக்குவது எப்படி?
சருமத்தையும் முடியையும் அழகாக்க சில ஈஸி டிப்ஸ்

அழகான சருமத்தையும், அடர்த்தியான முடியையும் யார் தான் விரும்ப மாட்டாங்க? அதுக்காக நிறைய காசு செலவு பண்ணி பல தயாரிப்புகளை வாங்குறோம். ஆனா, எல்லாருக்கும் நல்ல ரிசல்ட் கிடைக்குறது இல்ல. அதனால, குறைஞ்ச செலவுல சருமத்தையும் முடியையும் அழகாக்க சில ஈஸி டிப்ஸ் இங்க இருக்கு.

29
சருமத்தை அழகாக்கும் பூக்கள்

சில பூக்களோட இயற்கையான குணங்கள் நம்ம முடியையும் சருமத்தையும் அழகாக்குது. அந்தப் பூக்கள் பத்தி இங்க தெரிஞ்சுக்கலாம் வாங்க. இனிமே நீங்களும் வீட்லயே இதையெல்லாம் பயன்படுத்தி நல்ல சருமத்தையும் முடியையும் பெறலாம்.

39
சூரியகாந்தி பூ (Sunflower)
கொஞ்சம் சூரியகாந்தி பூக்களை எடுத்து காயவைங்க. காய்ந்ததும், அதுல ரோஸ் வாட்டர் இல்லனா பால் சேர்த்து மிக்ஸியில அரைச்சுக்கோங்க. இந்த பேக் உங்க சருமத்தை பளபளப்பாக்கும், டானை நீக்கும், சருமத்தை இளமையா காட்டும்.
49
ரோஜா (Rose)
ரோஜா பூ குளிர்ச்சியானது, சருமத்துக்கு ஈரப்பதத்தையும் கொடுக்கும். உங்களுக்கு முகப்பரு பிரச்சினை இருந்தா, ரோஸ் வாட்டர் அதை சரிசெய்யும். இது தழும்புகள், பருக்கள், சரும எரிச்சல் போன்றவற்றையும் நீக்கும்.
59
அல்லிப் பூ (Water Lily)
அல்லிப் பூ பித்தம் தொடர்பான சருமப் பிரச்சினைகளை சரிசெய்யும். அதாவது, சருமம் சிவந்து போறது, தடிப்புகள், பருக்கள் இருந்தா, இந்த பூவுல ஃபேஸ் மாஸ்க் செஞ்சு முகத்துல போடுங்க. கொஞ்ச நேரம் கழிச்சு முகத்தைக் கழுவிடுங்க.
69
தாமரை (Lotus)
ரோஜா மாதிரியே, தாமரை பூவும் சருமத்துக்கு குளிர்ச்சி தரும். இதுல ஆன்ட்டிமைக்ரோபியல் குணங்களும் இருக்கு. தாமரை பூவுல செய்யுற ஃபேஸ் பேக், சரும நிறத்தை அதிகரித்து, பொலிவைக் கொடுக்கும். இது வயசாவதைத் தடுக்கும் குணங்களையும் கொண்டது.
79
செம்பருத்தி (Hibiscus)
செம்பருத்தியில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. இதோட பூவும் இலையும் உங்க முடி ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது. இதுல வைட்டமின்-சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைஞ்சிருக்கு. இது முடியை வலுவாக்கும்.
89
சாமந்தி பூ
சாமந்திப் பூவை தண்ணியில கொதிக்க வச்சு அந்தத் தண்ணியைப் பயன்படுத்தலாம், அல்லது அதுல இருந்து எண்ணெய் தயாரிக்கலாம். இது முகப்பரு, சரும எரிச்சல், வீக்கம் போன்ற பிரச்சினைகளை நீக்கும். சருமத்துக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும்.
99
மல்லிகைப் பூ (Jasmine)
முகப்பரு பிரச்சினை இருந்தா, மல்லிகைப் பூக்களை கொதிக்க வச்சு அந்தத் தண்ணியைப் பயன்படுத்தலாம். இந்தத் தண்ணியில முகத்தைக் கழுவுனா, சென்சிடிவ் சருமத்துக்கு இதமா இருக்கும். முகப்பரு பிரச்சினையும் சரியாகும். இங்க சொல்லியிருக்கிற பூக்களை நீங்க முயற்சி செஞ்சு பாருங்க, ரிசல்ட் எப்படி இருக்குன்னு சொல்லுங்க!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories