தினமும் நடைப்பயிற்சி செய்வதால் முதுகு வலி குணமாகுமா? ஆய்வு சொல்வது என்ன?

First Published | Nov 26, 2024, 8:35 AM IST

Walking For Back Pain : தினமும் நடைப்பயிற்சி செய்தால் முதுகு வலி பெருமளவு குறையும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரைவாக இங்கு பார்க்கலாம்.

Walking Benefits For Back Pain In Tamil

Back Pain Relief Rxercise : நீங்கள் தினமும் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? தற்போது பெரும்பாலானோர் அலுவலகத்தில் நாற்காலியில் மணி கணக்கில் அமர்ந்து வேலை செய்வார்கள். இதனால் முதுகு வலி வருவது சகஜம் தான். ஆனால் இதனால் பல அசெளகரியங்களையும் அவர்கள் சந்திக்க நேரிடும். பலருக்கு இந்த பிரச்சனை அவர்களது வாழ்க்கையில் ஒரு பகுதியாகிவிட்டதால் அதிலிருந்து தினமும் அவர்கள் போராட வேண்டியுள்ளது. ஆனால் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்று தெரியவில்லையா?

Walking Benefits For Back Pain In Tamil

Walking For Back Pain : உங்களுக்கு தெரியுமா.. நாம் தினமும் உடற்பயிற்சி செய்தால் முதுகு வலியை பெருமளவு குறைக்க முடியும். இதுதவிர, முதுகு விறைப்பு மற்றும் பிடிப்புகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதற்கு நீங்கள் தினமும் வெறும் 30 நிமிடங்கள் மட்டும் நடந்தால் போதும், முதுகு வலியிலிருந்து விரைவாகவே நிவாரணம் கிடைக்கும். இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. நாம் தினமும் செய்யும் நடை பயிற்சி முதுகு வலியில் இருந்து விடுதலை கொடுக்கும் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இப்போது இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் மாலை நடைபயிற்சி... இந்த '1' ட்ரிக் ஃபாலோ பண்ணா முழுபலன்!! 

Tap to resize

Walking Benefits For Back Pain In Tamil

Walking Benefits For Back Painநடைப்பயிற்சி முதுகு வலிக்கு எப்படி உதவுகிறது?

ஒரு நபர் தினமும் 30 நிமிடங்கள் நடந்தால் கீழ் முதுகு வலி பிரச்சனை நீங்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. அந்த ஆய்வில் ஆஸ்திரேலியாவில் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் 701 பேரிடம் நடத்தப்பட்டது அவர்களின் சராசரி வயது 54. அவர்கள் 24 நேரமும் முதுகு வலிகள் அவதிப்பட்டனர். ஆனால் தினமும் வெறும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்து வந்ததால் முதுகு வலி குணமானது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

Walking Benefits For Back Pain In Tamil

Walking Benefits For Back Pain : இது குறித்து தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட வாக்பேக் என்ற சோதனையில் வழக்கமாக நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு முதுகு வலி ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளன. இது தவிர முழங்கால் மற்றும் கணுக்கள் வலிக்கும் பயனுள்ளதாக கண்டறிந்துள்ளன. 

இதையும் படிங்க:  இந்த ஒரு 'ரூல்ஸ்' கட்டாயம்.. அப்ப தான் 'வாக்கிங்' போறதோட முழுபலன் கிடைக்கும்!!  

Walking Benefits For Back Pain In Tamil

Walking Benefits For Back Pain : எப்போது நடக்க வேண்டும்?

நீங்கள் நடைபயிற்சியின் முழு பலனையும் தர விரும்பினால் தினமும் காலை அல்லது மாலை நடக்கலாம். காலை மற்றும் மாலை என இரண்டு வேளையிலும் நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதனால் உங்களது எடை கட்டுக்குள் வைக்கப்படும், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும், கொலஸ்ட்ரால் மற்றும் பிபி பிரச்சனை ஏற்படாது, இதயம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

எனவே நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தினமும் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் முடிந்த அளவிற்கு நடை பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Latest Videos

click me!