Peanuts In Winter In Tamil
Peanuts In Winter : ஏழைகளின் பாதாம் போன்றது வேர்க்கடலை. இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. எல்லா வர்க்கத்தினராலும் வாங்கக் கூடிய உணவு பொருளில் வேர்க்கடலையும் ஒன்றாகும். குளிர்காலங்களில் பஜ்ஜி சொஜ்ஜி என சாப்பிடுவதை காட்டிலும் வேர்க்கடலை உண்பது பலமடங்கு நன்மைகளை தரும். குளிர்காலத்தில் சூடாக சாப்பிடவே அனைவரும் விரும்புவார்கள். காளான் உள்ளிட்ட தெரு உணவுகள், அசைவ உணவுகள் நாவை அடிமையாக்கும் பருவகாலம் தான் குளிர்காலம். ஆனால் இப்படி உண்பதால் உடல் எடை அதிகரிக்கும். இது உடலின் ஆரோக்கியத்திற்கு புறம்பான விஷயமாகும்.
Peanuts In Winter In Tamil
benefits of eating peanuts in winter : நம்முடைய உணவு முறை நமது ஆரோக்கியத்தை பாதிக்காமல் இருப்பது அவசியம். வேர்க்கடலையில் சிற்றுண்டி செய்வது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிலும் குளிர்காலங்களில் அடிக்கடி வேர்க்கடலை உண்பதால் குளிரை எதிர்த்து போராடும் ஆற்றல் கிடைக்கும். வேர்க்கடலை வெறும் சுவையை அல்ல குளிரைத் தாங்கும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த குளிர்காலத்தில் வேர்க்கடலை உண்பதால் கிடைக்கும் 6 நன்மைகள் என்னென்ன என்று இங்கு காணலாம்.
இதையும் படிங்க: எக்கச்சக்க சத்துகள் உள்ள வேர்க்கடலையை இந்த 7 பிரச்சனை இருக்கவங்களுக்கு ஆபத்து!!
Peanuts In Winter In Tamil
peanut is hot or cold for body: உடலின் ஆற்றல் அதிகமாகும்!
குளிர்காலத்தில் பொதுவாகவே மந்தமாக உணர்வோம். குளிர்ந்தச் சுற்றுச்சூழலால் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. சோர்வாக உணர்வீர்கள். இந்தப் போக்கை மாற்ற வேர்க்கடலை உதவும். உங்களுக்கு தேவையான ஆற்றலை தரும் நல்ல கொழுப்புகள், புரதம் ஆகியவை வேர்க்கடலையில் உள்ளன. ஒரு நாளில் ஒரு சிறிய கையளவு வேர்க்கடலை உண்பதால் அதிகபட்ச ஆற்றல் கிடைக்கும். குளிர்காலத்தில் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக செயல்பட வேர்க்கடலை உதவும்.
இதய ஆரோக்கியம்:
வேர்க்கடலையை குளிர்காலத்தில் அடிக்கடி உண்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். வேர்க்கடலையில் பொதுவாக மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் காணப்படுகின்றன. கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க வேர்க்கடலை உண்ணலாம். மற்ற தின்பண்டங்களை விட வேர்க்கடலை நல்ல பலன் தரும். இதனால் உங்களுடைய இதய நோய்க்கான அபாயம் குறையும். வேர்க்கடலையில் காண்ப்படும் ரெஸ்வெராட்ரோல் மாதிரியான ஆக்ஸிஜனேற்றங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன.
Peanuts In Winter In Tamil
peanut antioxidant: நோயெதிர்ப்பு சக்தி:
குளிர்காலம் வந்தாலே கூடவே சளி, காய்ச்சலும் வந்துவிடும். வேர்க்கடலையில் துத்தநாகம், வைட்டமின் ஈ போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவும். துத்தநாகம் என்ற சிங்க் தாது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியமானது. நோய்த்தொற்றுளில் தப்ப இது உதவும்.
செரிமானம் மேம்படும்:
வேர்க்கடலையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவிக்கும். இந்த நார்ச்சத்து மலச்சிக்கல் வராமல் தடுக்கும். குளிர்காலத்தில் மக்கள் தாகம் குறைவாக இருக்கும். இதனால் குறைவாகவே தண்ணீர் அருந்துவார்கள். இதனால் கூட மலச்சிக்கல் வரலாம். ஆனால் வேர்க்கடலை குடல் இயக்கத்தை மேம்படுத்தும். குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவுக்கு இது உதவும்.
இதையும் படிங்க: மதுபான கடைகளில் உப்பு வேர்க்கடலை சைடிஷாக கொடுக்க இப்படி ஒரு காரணமா?
Peanuts In Winter In Tamil
Vitamins in peanuts : ஊட்டச்சத்துக்கள்:
வேர்க்கடலையில் உள்ள வைட்டமின்கள் பி, நியாசின், ஃபோலேட் போன்றவை உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இவை நம்முடைய செல்லுலார் செயல்பாட்டிற்கு அவசியமானது. வேர்க்கடலையில் காணப்படும் மெக்னீசியம் தசை, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்தும். உங்களை உடல் ரீதியாக சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
எடை மேலாண்மை:
வேர்க்கடலையை கொஞ்சமாக உண்ணும் போது எடையை அதிகரிக்காது. இதில் உள்ள நல்ல கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து போன்றவை வயிறு நிரம்பிய உணர்வை தரும். இதனை உண்பதால் அதிகம் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் வேர்க்கடலையில் இருந்தாலும் அதனை அளவாக எடுத்து கொள்ள வேண்டும். சாலட்களில் வேர்க்கடலையை சேர்த்து அளவாக உண்ணலாம் அல்லது வறுத்த/அவித்த வேர்க்கடலையை 50 முதல் 100கிராமுக்கு உள்ளாக எடுத்து கொள்ளுங்கள். அளவோடு உண்பதால் நன்மைகள் பெருகும். ஏனென்றால் இதில் உள்ள அதிக கலோரிகள் எடையை கூட்டலாம்.