குழந்தையை குளிப்பாட்டும்போது இந்த '4' விஷயத்தை செய்ய மறக்காதீங்க!!

First Published | Nov 25, 2024, 1:04 PM IST

Bathing New Born Baby During Winter : குளிர்காலத்தில் புதிதாக பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்வது ரொம்பவே நல்லது. அவை என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

Bathing New Born Baby During Winter In Tamil

Wintercare Tips For New Born Baby :தற்போது குளிர்காலம் என்பதால் புதிதாக பிறந்த குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு உடை குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதை அனைத்திலும் சிறிய கவனக் குறைவு ஏற்பட்டால் கூட குழந்தையின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

Bathing New Born Baby During Winter In Tamil

Wintercare Tips For New Born Baby : இத்தகைய சூழ்நிலையில் புதிதாக குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் ஏற்படாமல் இருக்க பலர் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குளிப்பாட்டுகிறார்கள். இன்னும் சிலரோ குளிரை பொருட்படுத்தாமல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தங்களது குழந்தையை குளிப்பாட்டுகிறார்கள்.

ஆனால் குளிர்காலத்தில் குழந்தையை குளிப்பாட்டும் போது சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அது என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  Parenting Tips : பிற குழந்தைக்கு ஏன் பசும்பால் கொடுக்க கூடாது தெரியுமா..?

Latest Videos


Bathing New Born Baby During Winter In Tamil

Wintercare Tips For New Born Baby  : புதிதாக பிறந்த குழந்தை குளிப்பாட்டும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை:

நீரின் தன்மை:

குளிர்காலத்தில் பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது நீரின் தன்மை மிகவும் முக்கியமானது. அதாவது புதிதாக பிறந்த குழந்தைகளை மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ந்த நீரில் குளிப்பாட்ட வேண்டாம். அதற்கு பதிலாக மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். அதுபோல, குழந்தைகளை சாப்பிடும் நேரத்தில் அல்லது தூங்கும் நேரத்தில் ஒருபோதும் குளிப்பாட்ட வேண்டாம். இப்படி செய்வது குழந்தைகளுக்கு எரிச்சலூட்டும்.

குழந்தையை சூடாக வைக்க இதை செய்:

குளிர்காலத்தில் குழந்தைகளே குளிப்பாட்டிய உடனே அவர்களது உடலை சூடாக வைக்க வேண்டும். இல்லையெனில் குழந்தைக்கு சளி, இருமல் அல்லது விறைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே நீங்கள் குழந்தையை குளிப்பாட்டிய உடனே ஒரு மென்மையான துண்டால் குழந்தையின் உடலை நன்கு துடைத்து, குளிருக்கு ஏற்றார் போல சூடான ஆடையை போட்டுவிடுங்கள். அதன் பிறகு சூரிய ஒளி சிறிது நேரம் வைக்கவும்.

Bathing New Born Baby During Winter In Tamil

Wintercare Tips For New Born Baby  : தேங்காய் எண்ணெய்:

குளிர்காலத்தில் குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்டும் போது சில சமயங்களில் குழந்தையின் உடலில் சொறி அல்லது தோல் மிகவும் வறண்டு போகும். இத்தகைய சூழ்நிலையில் தோல் பிரச்சினைகள் அனைத்தையும் தவிர்க்க, குழந்தையை குளிப்பாட்டும் நீரில் 2-3 துளிகள் தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும். இதனால் அவர்களது சருமம் வறண்டு போகாமல், ஈரப்பதத்தால் தோல் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருக்கும்.

எண்ணெய் மசாஜ்:

குளிர்காலத்தில் குழந்தையை குளிப்பாட்டுவதற்கு முன் குழந்தையின் உடல் முழுவதும் எண்ணெயால் மசாஜ் செய்ய வேண்டும். இது குழந்தையின் உடலில் வெப்பத்தை பராமரிக்கும் சூரிய ஒளிக்கு கீழ் குழந்தையை குழந்தைக்கு மசாஜ் செய்தால் ரொம்பவே நல்லது. ஒருவேளை சூரிய ஒளி இல்லை என்றால், நீங்கள் அறையில் வைத்து குழந்தைக்கு மசாஜ் செய்யலாம். இருந்த போதிலும் இந்த சமயத்தில் குழந்தையின் உடல் குளிர்ச்சியை உணராதவாறு துணியால் மூடி வைத்துக் கொள்ளுங்கள்.

Bathing New Born Baby During Winter In Tamil

Wintercare Tips For New Born Baby : மாய்ஸ்சரைசர்:

குழந்தையை குளிப்பாட்டிய பிறகு குழந்தையின் மீது மாய்ஸ்சரைசர் அல்லது தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். அதன் பிறகு தான் குழந்தைக்கு சூடான ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

எத்தனை முறை குளிப்பாட்டலாம்?

குளிர்காலத்தில் புதிதாக பிறந்த குழந்தையை தினமும் குளிப்பாட்ட வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமானால் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை குளிப்பாட்டலாம். வேண்டுமானால் தினமும் குளிப்பாட்டுவதற்கு பதிலாக ஒரு ஈரமான காட்டன் துணியால் குழந்தையின் உடலை நன்கு துடைக்கலாம்.

இதையும் படிங்க: Parenting Tips : பிறந்த குழந்தைக்கு அடிக்கடி விக்கல் வந்தா இப்படி ட்ரை பண்ணி பாருங்க நின்றுவிடும்!

click me!