
இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஆரோக்கியமாக இருக்க பல விஷயங்களை செய்கின்றனர். அதாவது உணவு கட்டுப்பாடு முதல் வொர்க் அவுட் வரை சரியான உடல் அமைப்பை பெற கடுமையாக உழைக்கிறார்கள். இருப்பினும் இவை அனைத்தையும் தவிர இப்போது எல்லாம் உடல் எடையை குறைப்பதற்கு சில விதைகளில் நன்மைகளின் போக்கு மக்கள் மத்தியில் மிகவும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: Chia Seeds : உடல் எடை மளமளவென குறைய தினமும் இந்த விதையை தண்ணீரில் போட்டு குடிங்க.!!
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சியா விதை ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவுகின்றது. இதை பல வழிகளில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றாலும், அதை சாப்பிடுவதற்கு சரியான நேரம் மற்றும் சாப்பிடும் முறை தெரிந்தால் அதன் பலன்களை சீக்கிரமாகவே பெற முடியும். அந்த வகையில் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் சியா விதையை சாப்பிடுவதற்கான சரியான வழி மற்றும் நேரத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: சியா விதைகள் அதிகமா சாப்பிடுறீங்களா? கவனம்.. இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்..
சியா விதை நன்மைகள்:
சில விதைகளில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அதன் சில நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்:
- சியா விதையில் இருக்கும் நார்ச்சத்து உங்களது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதனால் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்.
- சியா விதையில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாடு, இதை ஆரோக்கியம் மற்றும் வீக்கத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.
- சியா விதையில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃபிரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது மற்றும் இளமையாக இருக்க உதவுகிறது.
- சியா விதை எலும்புகளை வலுப்படுத்த உதவும் தாதுக்களை கொண்டுள்ளது மற்றும் ரத்த சர்க்கரையை குறைக்கவும் உதவுகின்றது.
சியா விதைகளை சாப்பிடுவதற்கு சரியான வழி என்ன?
சியா விதைகளில் முழு பலனையும் பெற அதை நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பு குறைந்தது 30 நிமிடங்கள் தண்ணீர், ஜூஸ் அல்லது பாலில் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சியா விதைகளின் அளவு அதிகரிக்கும். இது செரிமானத்தை அதிகரிக்கும் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது.
சியா விதையை எவ்வளவு சாப்பிட வேண்டும்?
எதையும் அளவாக பயன்படுத்துவது தான் நல்லது. அதிகமாக பயன்படுத்தினால் எப்போதும் தீங்கு விளைவிக்கும். சியா விதைக்கும் இதே நிலைதான். இத்தகைய சூழ்நிலையில் செரிமான பிரச்சனை தவிர்க்க ஒருவர் தினமும் 1-2 ஸ்பூன் சியா விதைகளை சாப்பிடலாம். அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே சரியான முறையில் சரியான அளவில் சாப்பிடுவது தான் நன்மை பயக்கும்.
சியா விதைகளை சாப்பிட சரியான நேரம் எது?
சியா விதைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து மற்றும் நீர் நிறைந்துள்ளதால் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் வொர்க அவுட்டுக்கு முன் இதை சாப்பிட்டால் ஆற்றல் இருந்த உணர்வை ஏற்படுத்தும் மற்றும் உடற்பயிற்சியின் போது ஏற்படும் பசியை தடுக்கிறது, சோம்பலை நீக்குகிறது.
சியா விதையை எப்போது சாப்பிடக் கூடாது?
சியா விதையை தவறான நேரத்தில் சாப்பிட்டால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது தூங்குவதற்கு முன் அல்லது மதியம் சியா விதையை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உண்மையில் நார்ச்சத்து நிறைந்த சியா விதைகளை மதியம் அல்லது இரவில் சாப்பிடும் போது செரிமான பிரச்சனைகள் ஏற்படும். இதனால் தூக்கம் பாதிக்கப்படும்.