குளிருக்கு முகத்தை மூடி தூங்குவீங்களா? அதனால் ஏற்படும் 'முக்கிய' பிரச்சனை

First Published | Nov 25, 2024, 9:54 AM IST

Sleeping Tips : போர்வையால் முகத்தை மூடி தூங்கும் போது என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Covering Face With Blanket While Sleeping In Tamil

Winter Sleeping tips - நம்மில் பெரும்பாலானோர் குளிர்காலத்தில் கடுங்குளிரில் இருந்து தப்பித்துக் கொள்ள உச்சி முதல் பாதம் வரை போர்வையால் மூடி தூங்குவோம். இப்படி தூங்குவது குளிர்ச்சியில் இருந்து நிவாரணம் அளித்தாலும், இந்த பழக்கம் ஆரோக்கியத்தின் பார்வையில் மிகவும் மோசமான தீங்கு விளைவிக்கும் தெரியுமா? போர்வையால் முகத்தை மூடியபடி தூங்குவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Covering Face With Blanket While Sleeping In Tamil

Sleeping tips for Winter - சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்:

குளிர்காலத்தில் போர்வையால் முகத்தை மூடியபடி தூங்கும் போது குளிர் காற்று போர்வைக்குள் வராது. அதுபோல போர்வைக்குள் இருக்கும் தூய்மையற்ற காற்றும் வெளியே செல்லாது. தூய்மையற்ற காற்றை சுவாசிப்பதால் சருமத்தின் நிறம் மங்கிவிடும். மேலும் சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். இது தவிர, முகத்தில் பருக்கள் மற்றும் சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

நுரையீரலில் பிரச்சனை விளைவிக்கும்:

போர்வையால் முகத்தை மூடியபடி தூங்கினால் நுரையீரலில் காற்று சரியாக பரிமாறப்படுவதில்லை. இதன் காரணமாக நுரையீரல் சுருங்க ஆரம்பிக்கும். இதனால் ஆஸ்துமா தலைவலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம் ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் தவறுதலாக கூட போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு தூங்கக் கூடாது.

Tap to resize

Covering Face With Blanket While Sleeping In Tamil

Winter Sleepting tips - மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கும்:

போர்வையல் முகத்தை மூடிக்கொண்டு தூங்குவதால் உடலுக்கு சரியான ஆக்சிஜன் கிடைக்காது. இது இதயத்தில் நேரடி விளைவை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், மாரடைப்புடன் மூச்சுத்திணறுடன் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். இது தவிர போர்வைகள் முகத்தை மூடியபடி தூங்கினால் தலைசுற்றல் அல்லது குமட்டல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ரத்த ஓட்டம் பாதிக்கும்:

போர்வையால் முகத்தை மூடிட்டு தூங்கும்போது போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளே வராது. இதன் காரணமாக உடல் உள்ளே இருக்கும் ஆக்சிஜன் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. படிப்படியாக போர்வைக்குள் இருக்கும் ஆக்சிஜன் அளவு குறைய ஆரம்பிக்கும். இது ரத்த ஓட்டத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக உடலில் ஒவ்வொரு பகுதியிலும் சரியான அளவு ரத்தம் ஓடாது.

Covering Face With Blanket While Sleeping In Tamil

Winter Sleeping tips - மூளை பாதிக்கப்படும்:

போர்வையால் முகத்தை மூடி தூங்கும் போது கார்பன்-டை-ஆக்சைடு செறிவு அதிகரிக்கும் மற்றும் ஆக்சிஜன் செறிவு குறையும். இதன் விளைவாக மூளை செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படும்.

தூக்கம் பாதிக்கப்படும்:

போர்வையால் உச்சி முதல் பாதம் வரை மூடி தூங்கும் போது உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். இதனால் வியர்வை வெளியேற தொடங்கும். இதன் காரணமாக உங்களது தூக்கம் முற்றிலும் பாதிக்கப்படும்.

Covering Face With Blanket While Sleeping In Tamil

Winter Sleeping tips - மூச்சு திணறல் ஏற்படும்:

போர்வையால் முகத்தை மூடி தூங்கும் போது ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு இடமாற்றத்திற்கு தடையை ஏற்படுத்தும். இதன் காரணமாக மூச்சுத் தெருவில் நிறுத்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

முடி உதிரும்:

போர்வையால் தலை முழுவதுமாக மூடி தூங்கும் போது முடியில் ஏற்படும் குறைவுகள் தலைமுடி வேர்களை வலுவிழக்க செய்யும். இதனால் தலைமுடி உதிர்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

Covering Face With Blanket While Sleeping In Tamil

Sleeping tips in Winter - தொண்டை வறட்சி ஏற்படும்:

போர்வையால் முகத்தை மூடியபடி தூங்கும் போது போர்வைக்குள் இருக்கும் காற்றை சுவாசிக்கும் போது தொண்டை பகுதியில் ஈரப்பதம் குறைந்து வறட்சி பிரச்சனையை ஏற்படுத்தும்.

உடல் சோர்வு ஏற்படும்:

போர்வையால் முகம் முழுவதும் மூடி தூங்கும் போது ஆக்சிஜன் குறைவாக இருப்பதால் தலைவலியுடன் உடல் சோர்வு பிரச்சனையும் ஏற்படும்.

Latest Videos

click me!