
Cauliflower Safety Tips : மழை மற்றும் குளிர்காலங்களில் பழங்கள் காய்கறிகள் உண்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். குறிப்பாக காலிஃபிளவர் பருவ காலங்களில் உண்பதற்கு ஏற்ற காய்கறி ஆகும். இதன் சுவை மட்டுமின்றி இதில் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்களும் காணப்படுகின்றன.
காலிஃப்ளவரில் உள்ள சத்துக்கள் இதய கோளாறுகள் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன. புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் அபாயத்தையும் இவை குறைக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. காலிஃப்ளவரை பொறித்து உண்ணாமல் அதனை குழம்பாக அல்லது கூட்டாக சமைத்து உண்ணும்போது கூடுதலான சத்துக்கள் கிடைக்கும். ஏனென்றால் காலிஃபிளவரில் அதிகமான கலோரிகள் காணப்படுவதில்லை என்பதால் உடல் எடையை இவை அதிகரிக்காது. ஆனால் பொறித்து கோபி மஞ்சூரியனாக உண்ணும் போது இவற்றின் பண்புகள் மாறுகின்றன.
Cauliflower Nutrition : காலிஃபிளவரின் சத்துக்கள்:
இதில் வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின்-கே ஆகிய சத்துக்களும் பல்வேறு தாதுக்களும் உள்ளன. காலிஃபிளவரில் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவையும் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். காலிஃபிளவரில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவுவதோடு, வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாவுக்கும் நன்மை செய்கின்றன. இது உடலின் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. 100 கிராம் காலிஃபிளவரில் 2 கிராம் வரையில் நார்ச்சத்து காணப்படுகிறது. இது ஒருவருக்கு தேவைப்படும் அன்றாட தேவையில் 7 சதவீதமாகும். இரத்த சர்க்கரை, கொழுப்பைக் குறைக்க நார்ச்சத்து மிகுந்த உணவுகள் பங்களிப்பதாக சொல்லப்படுகிறது.
காலிஃபிளவரில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம் உடலில் உள்ள செல்களின் சேதத்திற்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது. இதனால் பல நோய்களில் இருந்து தப்பலாம். ஆனால் சிலர் காலிஃபிளவரை அதிகமாகவும் அடிக்கடியும் சாப்பிடக்கூடாது. இதனால் அவர்களுக்கு அதனால் உடல்நல பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இங்கு காலிஃபிளவரின் நன்மைகளையும், அதன் பாதகங்களையும் காணலாம்.
Cauliflower Benefits : காலிஃபிளவர் 'கோலின்' நன்மைகள்:
கோலின் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தாகும். கோலின் காணப்படும் காய்கறிகளில காலிஃபிளவரும் ஒன்று. தோராயமாக 100 கிராம் காலிஃபிளவரில் 44மிகி கோலின் காணப்படுகிறது. நம் உடலில் உள்ள டிஎன்ஏவை ஒருங்கிணைத்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் கோலின் முக்கியத்துவம் வாய்ந்தது. மூளை செயல்பாட்டிற்கும், நரம்பு மண்டலத்திற்கும் கோலின் அத்தியாவசியமானது.
Who Shouldn't Eat Cauliflower? : யார் காலிஃபிளவர் சாப்பிடக்கூடாது?
தைராய்டு இருப்பவர்கள் முட்டைகோஸ், காலிஃபிளவர் உண்பது சில பக்க விளைவுகளை உண்டு பண்ணலாம். தைராய்டு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலிஃபிளவர் உண்பதால் T3, T4 ஹார்மோன்களின் அளவுகளை சமநிலையை குலைக்கும். நாள்தோறும் சாப்பிட்டால் வாயு தொல்லை, அசிடிட்டி பிரச்சனைகள் உண்டாகும். ஏற்கனவே பித்தப்பை அல்லது சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் காலிஃபிளவர் உண்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: இது தெரிந்தால் இனிமேல் நீங்கள் காலிஃபிளவர் இலைகளை தூக்கி வீச மாட்டீங்க!
How to eat cauliflower? : காலிஃபிளவரை எப்படி உண்ண வேண்டும்?
ஆயுர்வேத மருத்துவர்கள் காலிஃபிளவரை நன்றாக வேகவைத்த பின்னர் தான் உண்ண வேண்டும் என சொல்கின்றனர். தினமும் காலிஃபிளவர் உண்ணக் கூடாது. இன்று சாப்பிட்டால் சில நாட்களுக்கு பின்னரே மீண்டும் சாப்பிட வேண்டும். எப்போதும் அளவாக சாப்பிடவேண்டும். தைராய்டு உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் அதிகம் உண்பதை முற்றிலும் தவிர்க்கலாம். தேவைக்கு ஏற்ற்படி, எப்போதாவது உண்ணலாம். காலிஃபிளவரில் அதிகப்படியான கால்சியம் இருப்பதால் சிறுநீரக கற்கள் பிரச்சனை அதிகமாகும். அதனால் அளவோடு உண்பது அதிகமாகும்.
இதையும் படிங்க: அடிக்கடி காலிஃபிளவர் சாப்பிட்டால் ஆபத்தா? நிபுணர்கள் சொல்லும் உண்மை என்ன?