
எப்போதுமே முகத்தை பருக்கள் இல்லாமல் பளபளவென வைத்திருக்கவே பெண்கள் விரும்புவார்கள். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சருமப் பராமரிப்பைக் கடைபிடித்து வருகின்றனர். விசேஷ நாட்களில் தங்களை அழகாக காட்ட இளம் தலைமுறையினர் அதிகம் மெனக்கெடுகின்றனர். எவ்வளவு தான் கவனமாக இந்தாலும், சருமத்தை பத்திரமாக பார்த்துக் கொண்டாலும் சரியாக விசேஷமான நாளில் தான் முகத்தில் பருக்கள் எட்டிப் பார்க்கத் தொடங்கும். சிலருக்கு வெறும் பருவாக இல்லாமல் அவை வலியை கொடுக்கின்றன.
முக்கியமான நாளில் தான் முகத்தில் திருஷ்டி கழிப்பது போல் இந்த பருக்கள் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருக்கும். தற்போது பொங்கல் விழா நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலருக்கும் இந்த முகப்பரு பிரச்சனை இப்போது தலை தூக்கியிருக்கும். அதை எவ்வாறு தடுக்கலாம்? பொங்கல் அன்று நிலவு போல ஜொலிக்கும் முகத்தை பெறலாம் என இந்த பதிவில் காணலாம்.
இதையும் படிங்க: 'இந்த' ஐடியா மட்டும் தெரிஞ்சா விரைவில் பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்திடலாம்!
முகம் கழுவுதல்:
நீங்கள் சாதாரணமாகவே சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய சருமத்தை இளமையாகவும், சுருக்கங்களின்றியும் வைத்திருக்க முடியும். அதில் முதன்மையானது தினமும் குளிர்ந்த நீரில் முகம் கழுவுவது. காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் பிரிட்ஜில் இருக்கும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். இது உங்களுடைய முகத்தை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.
இதையும் படிங்க: Pongal Pulli Kollam Designs 2025 : பொங்கலோ.. பொங்கல்.. வித விதமான புள்ளி கோலங்கள் டிசைன்கள் இதோ!
முகப்பரு வந்தால் செய்யக் கூடாதது:
உங்களுக்கு முகப்பரு இருக்கும்போது சில விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் சில செயல்கள் முகப்பருவின் பாதிப்பை அதிகமாக்கிவிடும். இதனால் உங்களுக்கு கரும்புள்ளிகள், வடுக்கள் ஏற்பட்டுவிடும். பொதுவாக நீங்கள் எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டாலும், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்காவிட்டாலும், ஹார்மோன் சமநிலையின்மையும் முகப்பருக்கள் ஏற்பட காரணங்களாகும். உங்களுக்கு முகப்பரு இருப்பது பிடிக்கவில்லை என அதனை நகத்தால் பிய்த்துவிட வேண்டாம். அதை நாமே கைவைத்து கிள்ளினால் வடு வரும். அதற்கு பதிலாக ஐஸ்கட்டியை அதன் மீது வைத்து தேய்க்கலாம். சூட்டுக் கொப்புளமாக இருந்தால் அதுவே போய்விடும்.
முகப்பருவை நீக்கும் டிப்ஸ்!
- சுத்தமான காட்டன் துணியில் சிறிய துண்டு ஐஸ் கட்டியை வைத்து முகப்பருவின் மீது நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகப்பரு தன்னாலே அமுங்கும் வாய்ப்புள்ளது.
- தற்போது 'டீ ட்ரீ ஆயில்' மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த எண்ணெயினை பட்ஸ் மூலம் எடுத்து முகப்பருவின் மீது பூசுங்கள். அதை அப்படியே 20 நிமிடம் விட்டுவிடுங்கள். பின்னர் காட்டன் துணியால் துடைத்தால் உங்கள் முகப்பரு பாதிப்பு மெல்ல குறையும்.
- இந்த எண்ணெய் இல்லையென்றால் கவலை வேண்டாம். எலுமிச்சை பழச்சாறு நான்கு துளிகள், அதனுடன் தேன் விட்டு தடவினால் போதும்.
- உருளைக்கிழங்கு முகத்திற்கு ஏற்றது. சருமத்தை பளபளப்பாக மாற்றும். உருளைக்கிழங்கு சாறுடன் பட்டை தூள் சேர்த்தும் தடவலாம்.
- இந்த 4 விஷயங்களில் ஏதேனும் ஒன்றினை செய்யலாம். அதன் பின் கற்றாழை ஜெல், புதினா இலைகளின் சாறு ஆகிய இரண்டையும் கலந்து முகப்பரு மீது பூசிவிட்டு தூங்குங்கள். மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள். இதை செய்வதால் முகப்பரு மறையும். தொடர்ந்து செய்தால் இளமையான, முகப்பரு இல்லாத பளபளப்பான சருமம் கிடைக்கும்.