சீனாவில் குரங்கு அம்மையின் புதிய வகையான கிளேட் 1b கண்டறியப்பட்டுள்ளது. HMPV பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு பொது சுகாதாரப் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூற்றுப்படி, சமீபத்தில் சீனாவில் கிளேட் 1b துணை வகையின் தொற்றுநோய் பரவல் பதிவாகியுள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் இருந்து சீனாவுக்கு வந்த பயணி மூலம் இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, ஜெஜியாங், குவாங்டாங், பெய்ஜிங் மற்றும் டென்ஜின் போன்ற முக்கியப் பகுதிகளில் உள்ள அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். தொற்று பரவல் கண்காணிப்பு, ஆபத்து மதிப்பீடுகள் மற்றும் சிகிச்சை நெறிமுறைகள் இதில் அடங்கும்.