ஒவ்வொருவரும் தங்கள் கொலஸ்ட்ரால் அளவை முறையாக கண்காணிப்பது அவசியம். கொலஸ்ட்ரால் இருக்கும்போது உடல் பாகங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் குறுக்கீடுகளால் கூச்சம் வரும். உயர் இரத்த கொலஸ்ட்ரால் அளவுகள் இருக்கும்போது இரத்தம் அடர்த்தியாக ஓடுகிறது.
புனே மணிப்பால் மருத்துவமனையை சேர்ந்த கார்டியாலஜி மருத்துவர் எர்மல் ஜெயின்,"கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் பல உடல் நலக் கோளாறுகள் வரும். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது, புகைபிடித்தல், மது அருந்துதல், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவை கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை வரும்"என்கிறார்.
அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் உங்கள் கை, கால் விரல்கள் அதிக வலியை உணரும். கைகள் மற்றும் கால்களின் இரத்தத் தமனிகளில் கொலஸ்ட்ரால் படிவதால் அவற்றைத் தொடும்போது வலி உண்டாகும். கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கான மற்றொரு அறிகுறி விரல்கள் மற்றும் கால்விரல்களில் கூச்ச உணர்வு தோன்றுவதாகும்.