Nimbu Mirchi: வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய் கட்டுவது ஏன்? பின்னணியில் அறிவியல் காரணம் தெரியுமா?

Published : May 12, 2026, 07:33 PM IST

Nimbu Mirchi: வீடுகள் மற்றும் கடைகளின் வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாய் கோர்த்து தொங்கவிடுவதை நாம் பார்த்திருப்போம். இந்த பழங்கால நம்பிக்கை வெறும் மூடநம்பிக்கை மட்டுமல்ல, இதன் பின்னால் சில அறிவியல் காரணங்களும் உள்ளன. அது குறித்து பார்ப்போம்.

PREV
15
எலுமிச்சை தொங்கவிடுவதன் பின்னணியில் அறிவியல்

நமது நாட்டில் தமிழகம் உள்பட பல்வேறு மநிலங்களிலும் பல நூற்றாண்டுகளாக வீட்டு வாசலிலோ அல்லது கடை வாசலிலோ ஒரு எலுமிச்சை மற்றும் ஏழு மிளகாய்களைக் கோர்த்து தொங்கவிடும் வழக்கம் உள்ளது. இன்றும் பல இடங்களில் இதைப் பார்க்கலாம். சிலர் இதை ஒரு பாதுகாப்புக் கவசமாக நம்புகிறார்கள், வேறு சிலரோ இதை வெறும் மூடநம்பிக்கை என்கிறார்கள். ஆனால், இந்த வழக்கத்தின் பின்னணி என்னவென்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த 'நிம்பு மிர்ச்சி' வெறும் தந்திரம் மட்டுமல்ல, இதன் பின்னால் ஆன்மீக நம்பிக்கைகளும், பழங்கால அறிவியல் தர்க்கமும் அடங்கியுள்ளன.

25
கண் திருஷ்டி

நன்றாக நடந்துகொண்டிருந்த வியாபாரம், ஒருவரின் பொறாமைப் பார்வையால் சரிந்துவிட்டது என்று மக்கள் பேசுவதைக் கேட்டிருப்போம். இதைத்தான் 'கண் திருஷ்டி' என்கிறார்கள். வீடு அல்லது கடை வாசலில் எலுமிச்சை, மிளகாய் கட்டுவது இதுபோன்ற கண் திருஷ்டியிலிருந்து பாதுகாக்க உதவும் என நம்பப்படுகிறது. எலுமிச்சை, எதிர்மறை ஆற்றலை (Negative Energy) தனக்குள் ஈர்த்துக்கொள்ளும் என்றும், மிளகாய் தீய எண்ணங்களையும் பொறாமையையும் எரித்துவிடும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. இந்த கொத்து காய்ந்து கருப்பாக மாறும்போது, அது வீட்டுக்குள் வரவிருந்த அத்தனை கஷ்டங்களையும், கண் திருஷ்டியையும் தனக்குள் ஈர்த்துக்கொண்டதாக அர்த்தம்.

35
தீய சக்திகளை தடுத்து நிறுத்தும்
வீட்டின் பிரதான வாசலில் எலுமிச்சை, மிளகாய் கட்டுவதால், அந்த இடத்தின் சூழல் தூய்மையாக இருக்கும், வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. இது வீட்டுக்குள் எதிர்மறை ஆற்றல் வராமல் தடுத்து, தீய சக்திகளை வீட்டுக்கு வெளியேவே நிறுத்திவிடும். இதனால் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் தங்கும் என்பது ஐதீகம்.
45
மிளகாயின் கார நெடி பூச்சிகளை அண்டவிடாது

பழைய காலத்தில் பூச்சிகளை விரட்ட 'Repellent Spray' எதுவும் கிடையாது. அப்போது வீடுகள் மண் வீடுகளாக இருந்ததால், பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்தது. இவற்றை விரட்டவே எலுமிச்சை மற்றும் மிளகாய் பயன்படுத்தப்பட்டது. எலுமிச்சையின் வாசமும், மிளகாயின் கார நெடியும் பூச்சிகளை அண்டவிடாது. எனவே, இது ஒரு இயற்கையான பூச்சிவிரட்டியாக (Natural Repellent) செயல்பட்டது.

55
ஓவ்வொரு வாரமும் மாற்ற வேண்டும்
பாரம்பரிய வழக்கப்படி, இந்த எலுமிச்சை-மிளகாய் கொத்தை வாரத்திற்கு ஒருமுறை, குறிப்பாக சனிக்கிழமைகளில் மாற்ற வேண்டும். எதிர்மறை ஆற்றல்கள் இந்த கொத்தில் சிக்கிக்கொள்வதாக நம்பப்படுவதால், ஒவ்வொரு வாரமும் இதை மாற்றுவது அவசியம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories