வெளியே வெயில் வாட்டினாலும், அலுவலக ஏசி குளிரால் அவதிப்படுகிறீர்களா? வேறு வழியின்றி குளிரிலேயே அமர்ந்திருப்பவர்களுக்கு ஏசி காற்றினால் உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்க இதோ சில எளிய டிப்ஸ். உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இவற்றை முயற்சி செய்து பாருங்கள்
ஒரே ஒரு கனமான ஸ்வெட்டர் அணிவதை விட, மெல்லிய உடைகளை அடுக்கடுக்காக (Layering) அணியுங்கள். இது உங்கள் உடலுக்கும் உடைக்கும் இடையில் வெப்பத்தை சேமித்து வைக்கும். குளிர் அதிகமாகும் போது மட்டும் ஒரு ஸ்கார்ஃப் அல்லது ஜாக்கெட் சேர்த்துக் கொள்வது ஈஸியாக இருக்கும்.
25
'ஐஸ் வாட்டர்' வேண்டாமே...
குளிரில் தாகம் எடுக்காது என்பதால் தண்ணீர் குடிப்பதை தவிர்க்காதீர்கள். ஆனால், ஜில்லென்ற தண்ணீருக்கு பதில், ஒரு பிளாஸ்கில் சுடுதண்ணீர் அல்லது மூலிகை டீ வைத்து அவ்வப்போது குடியுங்கள். இது உங்கள் உடல் வெப்பநிலையை உள்ளுக்குள்ளேயே சீராக வைத்திருக்கும்.
35
'சீட்'டை விட்டு கொஞ்சம் எட்டிப் பாருங்க!
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும்போது ரத்த ஓட்டம் குறைந்து உடல் இன்னும் சில்லென்றாகும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து 5 நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள். கைகளைத் தேய்த்து முகத்தில் ஒற்றிக் கொள்ளுங்கள். இந்த சின்ன மூவ்மென்ட் உங்கள் உடலை 'வார்ம்-அப்' செய்யும்.
ஏசி காற்று உங்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இதனால் தோல் வறட்சி, அரிப்பு மற்றும் சைனஸ் பிரச்சனைகள் வரலாம். கை, கால்களுக்கு நல்ல மாய்சுரைசர் மற்றும் உதடுகளுக்கு லிப் பாம் பயன்படுத்துங்கள். இது குளிரால் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கும் ஒரு கவசம்.
55
நேருக்கு நேர் மோத வேண்டாம்
ஏசி காற்று நேரடியாக உங்கள் தலை அல்லது கழுத்தில் படும்படி அமரவேண்டாம். இது 'ஸ்டிஃப் நெக்' (கழுத்து பிடிப்பு) அல்லது தலைவலியை உண்டாக்கும். உங்கள் சீட் அப்படி இருந்தால், விசிறியின் திசையை (Swing) மாற்றச் சொல்லுங்கள் அல்லது உங்கள் இருக்கையை லேசாக நகர்த்தி அமருங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.