
எடை குறைப்புக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் நடைபயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும். சாதாரணமாக ஒரு நபர் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஒரு நாளைக்கு நடப்பது அவருக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை தடுப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காலை அல்லது மாலை எந்த வேளையில் நடைபயிற்சி செய்தாலும் அது உங்களுக்கு பலன்களை தரும். ஆனால் எந்த நேரத்தில் நடப்பது கொழுப்பைக் குறைத்து உடல் எடையை விரைவில் உதவுகிறது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
இதையும் படிங்க: பிரீயட்ஸ் நேரத்துல வாக்கிங் போலாமா? பல பெண்கள் அறியாத தகவல்!!
காலையில் வாக்கிங்:
காலையில் வாக்கிங் செல்வது அந்த நாளை உற்சாகமாக தொடங்க உதவுகிறது. காலை 6 மணி முதல் 8 மணிக்குள்ளாக நடை பயிற்சி செல்ல வேண்டும். இது நாள் முழுக்க நேர்மறை சிந்தனையுடன், சுறுசுறுப்பாக செயல்பட உதவும். காலையில் எழுந்ததும் நடப்பது உங்களுடைய வளர்ச்சிக்கு மாற்றத்தை மேம்படுத்த முக்கிய பங்காற்றுகிறது.
இதனால் உடலில் சேரும் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக வாக்கிங் சென்று விடுவதால் அன்றைய நாளில் உங்களுடைய உடற்செயல்பாடு எந்த தடையுமின்றி நிறைவேறி விடுகிறது. எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை நேர உடற்பயிற்சியை தேர்வு செய்யலாம்.
எதிர்பாராத மற்ற வேலைகளால் உடற்பயிற்சியை தள்ளிப் போடும் சூழல்கள் ஏதும் காலையில் இருக்காது. காலை நேரத்தில் நடைபயிற்சி செய்வதால் உங்களுடைய மனநலம் மேம்படுகிறது. மன அழுத்தத்தில் இருப்பவர்கள் காலையில் நடைபயிற்சி செல்வது நல்ல பலனை அளிக்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும். இதை சரியாக செய்வதால் தானாகவே எடை குறையும்.
மாலையில் வாக்கிங்:
காலையில் நடப்பது போலவே மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்வதும் குறிப்பிட்ட பலன்களை தருகின்றன. மாலை 5 முதல் 7 மணிக்குள்ளாக வாக்கிங் செல்ல வேண்டும். காலையில் மற்ற வேலைகள் இருப்பவர்கள் மாலையில் வாக்கிங் செல்லலாம். இது சோர்வை நீக்கி புத்துணர்வை தரும். இரவில் ஆழ்ந்த தூக்கம் வர நடைபயிற்சி உதவும், செரிமானத்தை மேம்படுத்தும்.
அதிகாலையில் எழுந்து நடக்க முடியாதவர்கள் மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். மாலை நேரத்தில் உடலில் மைய வெப்பநிலை சற்று அதிகமாக காணப்படும். இது உடற்செயல்பாடுகளில் நல்ல பலனை கொடுக்கும். ஆனால் நடைபயிற்சியை காட்டிலும் மற்ற உடற்பயிற்சிகளை மாலையில் செய்யும் போது எடை இழப்புக்கு உதவிகரமாக இருக்கும்.
காலை vs மாலை எது வாக்கிங் செல்ல சிறந்தது?
காலை அல்லது மாலை என இரண்டு நேரங்களிலும் நடைபயிற்சி மேற்கொள்வது உடலுக்கு நன்மைகளையே தரும். ஆனால் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் நடப்பது தான் சிறந்தது. நிபுணர்கள் காலை நேர வாக்கிங் எடை குறைப்பில் நல்ல பலன்களை தருவதாகக் கூறுகின்றனர்.
குறிப்பாக நிலைப்புத்தன்மையுடன் இருப்பதே எடை குறைப்பு பயணத்தில் முதன்மையாக கருதப்படுகிறது. அதாவது தொடர்சியற்ற செயல்பாடுகள் எடை குறைப்பை தாமதப்படுத்தும். தினசரி உடற்பயிற்சியே உடல் எடையை குறைக்க உதவுகிறது. அத்துடன் சரியான உணவு பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும்.
எந்த நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது என்பது தனிநபரின் வாழ்க்கையை முறைகளை பொறுத்தது. காலை நேரத்தில் வாக்கிங் சென்றால் உங்களுடைய வளர்சிதை மாற்றம் வேகமாக செயல்படும். ஆனால் மாலை நேரத்தில் அதே அளவுக்கு நன்மைகளை நீங்கள் பெறுவது கடினம் தான். நீங்கள் சரியான உணவுப் பழக்கத்துடன் காலை அல்லது மாலை ஏதேனும் ஒரு நேரத்தில் தொடர்ச்சியாக நடைபயிற்சி மேற்கொள்ளும் போது அதற்கான பலன்களை காண முடியும்.
இதையும் படிங்க: ஈஸியா '1' கிலோ எடை குறைக்கலாம்.. ஆனா அதுக்கு 'எத்தனை' காலடிகள் நடக்கனும் தெரியுமா?