குழந்தையை தன்னம்பிக்கையாக வளர்க்கும் 5 விஷயங்கள்:
1. அவர்கள் வேலையை அவர்களே செய்யட்டும்:
உங்கள் குழந்தை தன்னம்பிக்கை உடையவர்களாக மாறுவதற்கு முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், அவர்கள் வேலையை அவர்களை செய்ய பழக்கப்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்களின் ஒவ்வொரு வேலையும் சரியாக செய்ய கற்றுக் கொள்வார்கள். மேலும் நீங்களும் அவர்கள் செய்யும் வேலையையும் கண்காணிக்க வேண்டும். உதாரணமாக வீட்டுப்பாடம் முடிப்பது, அவர்கள் காலணிகள் மற்றும் செருப்புகளை வீட்டில் சரியான இடத்தில் வைப்பது, உணவை அவர்களை சாப்பிடுவது போன்றவை அடங்கும். இவை அனைத்தும் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி, ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்வார்கள்.
2. சுய முடிவு எடுக்க பழக்கப்படுத்துங்கள்:
குழந்தைகளை வளர்க்கும் போது சுய முடிவுகளை எடுக்க அவர்களை பழக்கப்படுத்துவது மிகவும் அவசியம். மேலும் பெற்றோர்களாகிய நீங்களும் இதை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். அதாவது என்ன சாப்பிடலாம், என்ன படிக்கலாம் போன்றவை அடங்கும். முக்கியமாக அவர்கள் எடுக்கும் முடிவு நல்லதாக இருந்தால் அவர்களை பாராட்டுங்கள். ஒருவேளை தவறாக இருந்தால் அதை அன்பாக சுட்டிக்காட்டி திருத்தவும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் குழந்தைக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்..