வெற லெவல் சாகசத்துக்கு கேரண்டி! த்ரில்லிங் பயண அனுபவம் தரும் இடங்கள்!

First Published | Dec 9, 2024, 11:58 PM IST

சாகசத்தை விரும்பும் பயணப் பிரியர்கள் செல்ல வேண்டிய இடங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. அவற்றில் மிகவும் அசாதாரணமானமான சில இடங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

Most challenging places to visit

பூமியின் மிகவும் சவாலான இடங்கள்:

நீங்கள் சாகசத்தை விரும்புகிறீர்களா? உங்கள் உடல் மற்றும் மன உறுதி சோதிக்கும் பயணத்துக்குத் தயாராக இருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. அவ்வகையில், அசாதாரணமானமான சவால் நிறைந்த சில இடங்களை இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

Antarctica

அண்டார்டிகா:

அண்டார்டிகா பூமியில் மிகவும் குளிரான, காற்று வீசும் கண்டமாகும். இங்கு நிலவும் குளிர் சாதாரண குளிர் பிரதேசத்தைப் போல் இருக்காது. அண்டார்டிகா குளிர்காலத்தில் -80 டிகிரி செல்சியஸ் வரை உறைநிலைக்குச் சென்றுவிடும். கோடை காலத்தில்கூட உறைபனியில் இருக்கும் இந்த இடத்தில் மனிதர்கள் வாழ்வது ஒரு மனிதரைக்கூட பார்ப்பது அரிது.

Tap to resize

Death Valley, USA

மரண பள்ளத்தாக்கு, அமெரிக்கா:

கலிபோர்னியாவில் உள்ள இந்த வறண்ட பாலைவனப் பள்ளத்தாக்கு உலகின் மிகவும் வெப்பான இடங்களில் ஒன்று. பூமியில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை 56.7 டிகிரி செல்சியஸ். இவ்வளவு வெப்பத்தில் தகித்த சாதனையைப் படைத்தது இந்தப் பாலைவனம்தான். இதுவரை பதிவான அதிகபட்ச தரை வெப்பநிலை 93.9 டிகிரி செல்சியஸ். இதுவும் 1972ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி இந்தப் பள்ளத்தாக்கில் உள்ள ஃபர்னஸ் க்ரீக்கில் பதிவாகியுள்ளது. இருந்தாலும் இந்த மரண பள்ளத்தாக்கு பல ஆச்சரியங்கள் நிறைந்தது.

Mount Everest, NepalTibet

எவரெஸ்ட் சிகரம், நேபாளம் / திபெத்:

இதுதான் உலகின் மிக உயரமான சிகரம்! இமாலய மலைத்தொடரில் இருக்கிறது. 8,848.86 மீட்டர் (29,031.7 அடி) உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரம் மலையேறுபவர்களின் கனவுத் தலமாக உள்ளது. இப்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் பலர் நேபாளத்துக்குச் செல்கிறார்கள். ஆனால் எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றத்தை விட மனிதர்களின் போக்குவரத்து மிகவும் சவாலானது.

Oymyakon, Russia

ஓமியாகான், ரஷ்யா:

பூமியில் மனிதர்கள் வசிக்கும் மிகவும் குளிரான இடம் இதுதான். இந்த சைபீரிய கிராமத்தில் குளிர்கால வெப்பநிலை -67.7 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக உள்ளது. இங்குள்ள உள்ளூர்வாசிகளின் வாழ்க்கை மனிதன் எவ்வளவு தூரம் குளிரை சகித்துக்கொண்டு வாழ முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம். இங்கே கடும் குளிரைத் தாங்கி வாழும் கலைமான்களை அதிகமாக வளர்க்கின்றனர்.

Amazon Rainforest, South America

அமேசான் மழைக்காடுகள், தென் அமெரிக்கா:

அமேசான் பூமியின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடு ஆகும். இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. இணையற்ற பல்லுயிர் வளத்தைக் கொண்ட அடர்வனமாக உள்ளது. அதிக ஈரப்பதமும் அடர்ந்த தாவரங்களும் நிறைந்தது மட்டுமல்ல, கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற ஆபத்துகளையும் கொண்டது. அந்த காட்டின் வழியாகத்தான் உலகின் நீண்ட ஆறுகளில் ஒன்றான அமேசான் நதி பாய்கிறது. ஜாகுவார் சிறுத்தைகள், அனகோண்டா பாம்புகள் போன்றவை இந்தக் காட்டில் அதிகமாக வசிக்கின்றன. பல பழங்குடியினங்கள் காட்டை விட்டு வெளியேறாமல் அங்கேயே பல காலமாக வாழ்ந்து வருகிறார்கள்.

Latest Videos

click me!