Fridge Rack: பிரிட்ஜில் இந்த ரேக் இருந்தால் சமையலறையே மாறிடும்! இத்தனை பொருட்களை வைக்கலாமா?

Published : Oct 02, 2026, 12:32 PM IST

Magnetic Fridge Rack: பிரிட்ஜ் ரேக் மூலம் மசாலா டப்பாக்கள், எண்ணெய், சாஸ் பாட்டில்களை ஒழுங்காக வைக்கலாம். அதன் பயன்பாடுகள் என்ன? பலன்கள் மற்றும் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
17
பிரிட்ஜில் இந்த ரேக் இருந்தால் சமையலறையே மாறிடும்

சமையலறை சின்னதாக இருக்கிறதா? பொருட்களை எங்கே வைப்பது என்ற குழப்பமா? ஒவ்வொரு முறையும் தேவையான மசாலா டப்பா, எண்ணெய் பாட்டில், சாஸ் பாட்டில் என ஒவ்வொன்றையும் தேடித் தேடி எடுப்பதே ஒரு வேலையாகவே மாறிவிடுகிறதா? இதற்கு கைகொடுக்கும் ஒரு ஸ்மார்ட் தீர்வுதான் பிரிட்ஜ் ரேக் (Magnetic Fridge Rack).

சுவரில் துளையிட்டு பொருத்த வேண்டிய அவசியமில்லை. காந்தத்தின் உதவியுடன் ஃபிரிட்ஜின் முன்பகுதியில் பொருந்தும் வகையில் இந்த ரேக்குகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இனி மசாலா டப்பாக்கள் ஒரு அடுக்கில், எண்ணெய் மற்றும் சாஸ் பாட்டில்கள் மற்றொரு அடுக்கில் என தேவைக்கேற்ப பிரித்துவைத்தால், சமையல் செய்யும்போது பொருட்களைத் தேடி அலைய வேண்டிய அவசியமும் குறையும். சமையலறை மேடையில் இருக்கும் நெரிசலும் குறையலாம்.

இப்படி பிரிட்ஜில் இருக்கும் இடத்தையே புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால், சமையலறையை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக்கொள்ள முடியும்.

27
இந்த ரேக் எப்படி வேலை செய்கிறது

சுவரில் துளையிட வேண்டாம், டிரில், ஸ்க்ரூ என எந்த வேலையும் தேவையில்லை. இந்த Magnetic Fridge Rack-ன் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் வலுவான காந்தங்கள், பிரிட்ஜின் காந்தம் பிடிக்கும் உலோகப் பகுதியில் உறுதியாக ஒட்டிக்கொண்டு ரேக்கை நிலையாக வைத்திருக்கும்.

அதனால், தேவையான இடத்தில் ரேக்கை எளிதாக பொருத்தி பயன்படுத்தலாம். வேறு இடத்தில் தேவைப்படும்போது, அகற்றி வைத்துக்கொள்ள முடியும். இப்படி சுவருக்கு எந்த சேதமும் இல்லாமல், கிடைக்கும் இடத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்த உதவும் ஸ்டோரேஜ் தீர்வாக இது அமைகிறது.

37
சமையலறையில் இதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

மசாலா டப்பாக்களுக்கு ஸ்மார்ட் இடம்

மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா என தினமும் பயன்படுத்தும் மசாலா டப்பாக்கள் சமையலறையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறதா? இனி அவற்றை ஒரே இடத்தில் அழகாகவும், ஒழுங்காகவும் அடுக்கி வைக்கலாம்.

இந்தபிரிட்ஜ் ரேக்கில் சிறிய மசாலா டப்பாக்களை வரிசையாக வைத்துக்கொண்டால், சமையல் செய்யும்போது தேவையான மசாலாவை எளிதில் எடுத்துப் பயன்படுத்தலாம். மேடை மற்றும் அலமாரியில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் சிறிய டப்பாக்களையும் இப்படி ஒழுங்குபடுத்தி வைக்க முடியும்.

47
எண்ணெய், சாஸ் பாட்டில்களுக்கும் இடம்

சிறிய அளவிலான சமையல் எண்ணெய், ஆலிவ் ஆயில், சாஸ், வினிகர் போன்ற அடிக்கடி பயன்படுத்தும் பாட்டில்களை ஒரே இடத்தில் அடுக்கி வைத்தால், தேவைப்படும் நேரத்தில் உடனடியாக எடுத்துப் பயன்படுத்துவது எளிதாக இருக்கும்.

அதேநேரத்தில், அதிக எடை கொண்ட பாட்டில்களை இதில் வைக்கும் முன் ரேக்கின் அதிகபட்ச எடைத் திறனை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். காந்தத்தின் பிடிப்பு மற்றும் ரேக்கின் தாங்கும் திறனுக்கு ஏற்ற எடையிலான பொருட்களை மட்டுமே வைப்பது பாதுகாப்பானது.

57
கிச்சன் பேப்பர் ரோலுக்கும் தனி இடம்

சில ரேக் மாடல்களில் தனியாக கம்பி அல்லது ராட் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் கிச்சன் பேப்பர் ரோலை பொருத்தி, தேவையான நேரத்தில் எளிதாக இழுத்துப் பயன்படுத்தலாம்.

அதேபோல், சமையலறையில் பயன்படுத்தும் சிறிய துணிகளையும் இதில் தொங்கவைத்து வைத்துக்கொள்ளலாம். இதனால் பொருட்கள் ஆங்காங்கே கிடப்பதைத் தவிர்த்து, பயன்படுத்தும் இடத்திலேயே ஒழுங்காக வைத்துக்கொள்ள முடியும்.

67
சமையல் கருவிகளையும் தொங்கவிடலாம்

ஹூக் வசதியுடன் வரும் Magnetic Fridge Rack மாடல்களில், கத்தரிக்கோல், அளவுக் கரண்டி, லேடில், டாங்ஸ் என சிறிய சமையல் கருவிகளை எளிதாகத் தொங்கவிட்டு ஒழுங்காக வைத்துக்கொள்ளலாம்.தேவைப்படும் பொருளை உடனடியாக எடுத்துப் பயன்படுத்த முடியும்.

முக்கியமான பலன்கள்

  • சமையலறை மேடை இடம் மிச்சம்
  • சமையலறை அலமாரியில் பொருட்கள் குவிவதைத் தவிர்க்கலாம்
  • அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை எளிதில் எடுத்துப் பயன்படுத்தலாம்.
  • இடம் குறைவாக இருக்கும் சமையலறைகளில் இடத்தைப் பயன்படுத்த உதவும்.
  • டிரில், துளையிடும் வேலை இல்லை
  • தேவைக்கேற்ப இடத்தை மாற்றலாம்
  • மசாலா, சாஸ், எண்ணெய், வினிகர் என ஒவ்வொரு வகைப் பொருளையும் தனித்தனியாக ஒழுங்குபடுத்தலாம்.
  • தேடித் தேடி அலைய வேண்டாம்.
77
வாங்கும் முன் இந்த ஒரு விஷயத்தை மறக்காதீங்க

பிரிட்ஜ் ரேக் (Magnetic Fridge Rack) வாங்கப் போறீங்களா? முதலில் உங்கள் பிரிட்ஜில் காந்தம் பிடிக்கிறதா என்பதைச் சோதித்துப் பாருங்கள். எல்லா பிரிட்ஜ் மேற்பரப்புகளும் காந்தத்தை ஒரே அளவில் ஈர்க்கும் என்று கூற முடியாது. குறிப்பாக stainless-steel போன்ற வெளிப்புற பூச்சுகள் கொண்ட பிரிட்ஜ்களில் காந்த ஈர்ப்பு மாறுபடலாம்.

அதனால், ரேக் வாங்குவதற்கு முன்பு ரேக் பொருத்தத் திட்டமிடும் அதே இடத்தில் ஒரு காந்தத்தை வைத்து நன்றாகப் பிடிக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்ப்பது நல்லது. காந்தத்தின் பிடிப்பு போதுமானதாக இருந்தால் மட்டுமே அந்த இடத்தில் Magnetic Fridge Rack-ஐ பயன்படுத்துவது சிறந்தது.

ரேக்கின் அதிகபட்சச் சுமை தாங்கும் திறனை ( maximum load capacity) முதலில் சரிபார்க்க வேண்டும். சில மாடல்கள் 4 கிலோ வரை தாங்கும் எனக் குறிப்பிடப்பட்டாலும், அதிகபட்ச எடையை முழுமையாகப் பயன்படுத்தாமல் அதற்கும் குறைவான எடையில் பொருட்களை வைப்பது பாதுகாப்பானது.

ரேக்கில் அதிக எடையை ஏற்றாதீங்க

கனமான கண்ணாடி ஜாடிகள், பெரிய எண்ணெய் பாட்டில்கள் போன்றவற்றை அதிகமாக அடுக்குவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், பிரிட்ஜ் கதவைத் திறக்கும்போது ஏற்படும் அசைவு மற்றும் அதிர்வையும் கருத்தில் கொண்டு, ரேக்கில் எடை குறைவான பொருட்களை வைத்திருப்பது பாதுகாப்பானது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories