Cleanest River: இந்தியாவின் மிக சுத்தமான நதி! ஏங்க இது தண்ணியா? கண்ணாடியா? எப்படி செல்வது?

Published : Oct 01, 2026, 08:17 PM IST

Cleanest River: மிகச் சுத்தமான நதி இந்தியாவில் உள்ளது. பளிங்கு போன்ற இந்நீரில் படகு சவாரி செய்வது காற்றில் மிதப்பது போன்ற உணர்வைத் தரும். இந்த நதி எங்கு உள்ளது? எப்படி செல்ல வேண்டும்? என விரிவாக பார்ப்போம்.

PREV
15
இந்தியாவின் மிக சுத்தமான நதி

இந்தியாவில் எக்கச்சக்கமான இயற்கை அதிசயங்கள் உள்ளன. அதில் ரொம்ப முக்கியமானது மேகாலயாவில் ஓடும் உம்ங்கோட் நதியாகும். இந்த நதியின் நீர் எந்த அளவுக்குச் சுத்தமாக இருக்குமென்றால், மேலிருந்து பார்த்தால் நதியின் அடிமட்டம் அப்படியே அப்பட்டமாகத் தெரியும். இதனாலேயே உம்ங்கோட் நதி நாட்டின் மிகச் சுத்தமான நதிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

25
இந்த நதி எங்கே உள்ளது?

இந்தியா - வங்கதேச எல்லையில் இருக்கிற டாவ்கி (Dawki) நகருக்கு அருகில் தான் இந்த நதி ஓடுகிறது. கண்ணாடி மாதிரி நீர் தெளிவாக இருக்கிறதால, படகில் போகும்போது காற்றில் மிதப்பது போன்றதொரு உணர்வு கிடைக்கும்.

மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் பகுதியில் ஓடுகிற இந்த நதியை, மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக மேகாலயா சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. வானம் மேகமூட்டம் இல்லாமல் தெளிவாக இருக்கிற நாட்களில், தண்ணீருக்கு அடியில் இருக்கிற கற்களைக் கூட எளிதாக எண்ணிவிடலாம். உள்ளூர் மக்கள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்கு படகு சவாரி செய்வது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

35
உம்ங்கோட் நதியின் சிறப்பம்சங்கள்

உம்ங்கோட் நதியை 'டாவ்கி நதி' என்றும் அழைப்பார்கள். எல்லைப் பகுதியான இந்த ஊர் வழியாகத் தான் நதி ஓடுகிறது. இங்கு படகில் செல்பவர்கள் எடுக்கிற புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் வைரலாகும்.

சுத்தமான நதி நமக்கு உணர்த்துவது என்ன?

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி, நமது நாட்டில் பல நதிகள் கழிவுகளால் மாசடைந்து கிடக்கின்றன. தொழிற்சாலை கழிவுகள், விவசாய ரசாயனங்கள் என நதிகள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன.

ஆனால், எந்தவிதமான மாசும் இல்லாமல், தண்ணீருக்கு அடியில் இருக்கிற உயிரினங்களை அப்படியே பார்க்கிற அளவுக்கு உம்ங்கோட் நதி சுத்தமாக உள்ளது. சுற்றியுள்ள பச்சைப்பசேல் மலைகளும் இந்த நதிக்குக் கூடுதல் அழகைத் தருகின்றன. நமது நாட்டின் நன்னீர் ஆதாரங்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த நதி நமக்கு உணர்த்துகிறது.

45
எந்த மாதத்தில் உம்ங்கோட் நதிக்குச் செல்லலாம்?

இக்கட்டுரையை படித்ததும் உங்களுக்கும் உம்ங்கோட் நதியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வந்திருக்கும். ஆனால், வருடம் முழுவதும் இந்த நதி இதே மாதிரி பளிங்கு போல் இருக்காது. பருவத்திற்கேற்ப திட்டமிடுவது மிகவும் அவசியமாகும். நீங்கள் உம்ங்கோட் செல்ல நினைத்தால், நவம்பர் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை செல்வது சிறந்த காலமாகும். அந்த நேரத்தில் தான் நீர் மிகச் சுத்தமாக இருக்கும், படகு சவாரியையும் நன்றாக அனுபவிக்க முடியும். மழைக்காலத்தில் நீரின் வரத்து அதிகரித்து, நதியின் தெளிவு குறைந்துவிடும்.

55
உம்ங்கோட் நதிக்கு எப்படி செல்வது?

மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தூரத்தில் உம்ங்கோட் நதி அமைந்துள்ளது. இது இந்தியா - வங்கதேச எல்லைக்கு மிக அருகில் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் விமானம் அல்லது ரயில் மூலமாக ஷில்லாங் அல்லது கவுகாத்திக்கு வந்து, அங்கிருந்து சாலை வழியாக டாவ்கியை அடைந்து கொள்ளலாம்.

டாவ்கி பாலம் பகுதியில் எப்பொழுதும் கூட்டம் அதிகமாக இருக்கும். உங்களுக்குக் கொஞ்சம் அமைதியான சூழல் வேண்டுமென்றால், டாவ்கியிலிருந்து 8 கிலோமீட்டர் தள்ளி இருக்கிற ஷ்னாங்ப்டெங் கிராமத்திற்குச் செல்லலாம். அங்கேயும் படகு சவாரி வசதி உள்ளது. கூட்ட நெரிசல் இல்லாமல் உம்ங்கோட் நதியின் அழகை ரசிக்க இது ஒரு சிறந்த இடமாகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories