
முக அழகை அதிகரிக்கும் உறுப்புகளில் உதடுகள் முக்கிய பங்காற்றுகின்றன. அழகு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தின் குறியீடுகளாகவும் அவை விளங்குகின்றன. உதடுகளின் நிறம் மாறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இவை உடலில் ஏற்படும் நோய்களை குறிக்கிறது. உதடுகளில் நிறமாற்றம் ஏதாவது நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம். உங்கள் உதடுகள் மாறும் பொழுது நிறத்தை பொறுத்து உங்களுக்கு என்ன நோய் உள்ளது என்பதை கண்டுபிடித்து விட முடியும். சில நேரங்களில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாதபோதும் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளபோதும் உதடுகளின் நிறம் மாறலாம்.
உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டும் என்பதே பலருக்கும் ஆசை. ஆனால் உதடுகள் அதீத சிவப்பாக மாறுவது என்பது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறிகள் ஆகும். உதடுகள் அடர் சிவப்பு நிறமாக மாறினால் கல்லீரலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என அர்த்தம். ஒவ்வாமை காரணமாகவும் உதடுகள் சிவப்பு நிறமாக மாற வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உதடுகளில் நிறம் அடர் சிவப்பு நிறமாக மாறலாம். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும் பொழுது உதடுகளின் நிறம் மாறும். குறிப்பாக வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால் உதடுகள் கருமையாகவும், வறண்டு போனது போலவும் இருக்கும். இரும்புச்சத்து குறைபாடு, ரத்த சோகை காரணமாகவும் உதடுகள் நிறம் வெளிரிப் போகலாம்.
அதிகமாக சிகரெட் பிடித்து வருபவர்களுக்கு உதடுகள் கருப்பாக மாற வாய்ப்பு உள்ளது அல்லது நீங்கள் பயன்படுத்தும் ஒப்பனைப் பொருட்களில் ஏதேனும் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தினால் உதடுகள் கருப்பாக மாறிவிடும். நீங்கள் புதிய பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னர் உதடுகளின் நிறத்தை சரி பார்க்க வேண்டும். அந்த பொருட்களைப் பயன்படுத்திய பின்னர் உதடுகளின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால் அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது. உடலின் நீரின் அளவு குறைவாக இருக்கும் பொழுது உதடுகளில் வறட்சி, வெடிப்புகள் உண்டாகலாம். இதனால் உதடுகளின் இயல்பான நிறம் மங்கி வெளிர் நிறத்தில் காணப்படும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உதடுகளன் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும்.
சிலருக்கு உதடுகள் வெண்மையாக அல்லது வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறி எண்ணெய் பசையுடன் காட்சியளிக்கும். இது உடலில் போதுமான அளவு ரத்தம் இல்லை என்பதை குறிக்கிறது. உடலில் ரத்தம் இல்லாத போது உதடுகள் வெளுத்துப் போகும். இது ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறிக்கிறது. திடீரென்று உதடுகள் நீல நிறமாக மாறினால் அது இதய நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம். மஞ்சள் நிறமாக மாறினால் கல்லீரலில் பிலிருபின் அளவு அதிகரித்து விட்டதாக அர்த்தம். இது மஞ்சள் காமாலை நோயைக் குறிக்கிறது. உதடுகள் பச்சை நிறமாக மாறினால் சளி அதிகமாக இருக்கிறது அல்லது நுரையீரல் தொற்று இருக்கிறது என்பதை குறிக்கிறது. ஊதா நிறமாக மாறும் பட்சத்தில் சுவாசப் பிரச்சனைகள் இருப்பதை குறிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் பொழுது உதடுகள் கருமை அல்லது இளஞ்சிவப்பு நிறமாக மாறலாம். எனவே உங்கள் உதடுகளை அப்போது கவனிக்க வேண்டியது அவசியம்.
சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர்கள் காரணமாக உதடுகள் கருப்பாக மாறலாம். அதிகப்படியான காபி குடிப்பது புகைப்பிடிப்பது ஆகியவையும் உதடுகளை கருப்பாக மாற்றும். சில உதட்டு சாயங்களில் உள்ள ரசாயனப் பொருட்கள் மற்றும் அலர்ஜி காரணமாகவும் உதடுகளின் நிறம் மாறலாம். எனவே உதடுகளின் நிறம் மாறுவதற்கான காரணங்கள் குறித்து நீங்கள் கவலைப்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொள்ள வேண்டியது.