சில வீட்டு வைத்தியங்கள் மட்டுமே சிறப்பாக செயல்படும். அவை நிரூபிக்கப்பட்டும் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த சிறப்பு ஆயுர்வேத எண்ணெய். இது உங்களுக்கு மந்திரம் போல வேலை செய்யும்.
அனைவரும் நீண்ட கூந்தலை விரும்புகிறார்கள். உங்களுக்கு கூந்தல் நீளமாக இல்லாவிட்டாலும், அடர்த்தியான கூந்தலாவது வேண்டுமென்றால், இந்த எண்ணெய் மந்திரம் போல வேலை செய்யும். அதை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
27
முடி உதிர்வுக்கான காரணங்கள்
நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தல் யாருக்குத்தான் பிடிக்காது? அனைவரும் விரும்புவது அதைத்தான். ஆனால் மாசுபாடு, மோசமான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் மோசமான தூக்க சுழற்சி காரணமாக இது சாத்தியமில்லாமல் போகிறது.
37
பொதுவான பிரச்சனை
முடி உதிர்தல் இப்போதெல்லாம் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. எல்லோரும் இதைப் பற்றி பேசுவது சகஜம். எனவே முடி உதிராமல் இருக்க, பல்வேறு வகையான பொருட்களைப் பயன்படுத்துகிறோம், நிறைய பணத்தையும் செலவழிக்கிறோம். இவ்வளவு செய்தும் எதுவும் எந்தப் பலனையும் தருவதில்லை.
ஆனால் சில வீட்டு வைத்தியங்கள் மட்டுமே சிறப்பாக செயல்படும். அவை நிரூபிக்கப்பட்டும் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த சிறப்பு ஆயுர்வேத எண்ணெய். இது உங்களுக்கு மந்திரம் போல வேலை செய்யும். சமீபத்தில், ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த எண்ணெயைப் பற்றி பகிர்ந்துள்ளார், அதை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
57
என்ணெய் தயாரிக்கும் முறை
இந்த எண்ணெயைத் தயாரிக்க, முதலில் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெயை எடுத்து குறைந்த தீயில் சூடாக்கவும். பின்னர் இதில் 2 டேபிள் ஸ்பூன் கடுக்காய் பொடி மற்றும் 2 டீ ஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும். இப்போது இவை அனைத்தையும் 5 முதல் 7 நிமிடங்கள் குறைந்த தீயில் சூடாக்கவும்.
67
ரோஸ்மேரி இலை
பின்னர் தீயை அணைத்துவிட்டு அதில் ரோஸ்மேரி இலை அல்லது ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து 30 நிமிடங்கள் குளிர வைக்கவும். குளிர்ந்த பிறகு, வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்.
77
முடி வேகமாக வளரும்
இப்போது அதை எப்படி தலைமுடிக்குப் பயன்படுத்துவது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். முதலில் எண்ணெயை உங்கள் தலைக்கு மெதுவாகத் தடவவும். சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இப்போது அதை குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் அப்படியே விடவும். பின்னர் மிதமான ஷாம்பூவைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியைக் கழுவவும். இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யலாம்.