Kitchen Tips : சாப்பாட்டு அரிசியில் வண்டு, புழு! உப்பை இப்படி யூஸ் பண்ணா ஒரு வண்டு வராது

Published : Nov 11, 2025, 02:45 PM IST

நாம் சாப்பிடும் அரிசியில் வண்டு, புழுக்கள் வருவதை தடுக்க மிக எளிய மற்றும் பயனுள்ள சில தீர்வுகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

PREV
16
How to Protect Rice from Insects

பொதுவாக அரிசி, பருப்பு, மாவில் சின்ன சின்ன வண்டுகள் புழுக்கள் வரும். அதுவும் குறிப்பாக மழை, குளிர் காலங்களில் வழக்கத்தை விட அதிகமாகவே வரும். இந்த பூச்சிகள், வண்டுகள் அவற்றின் சுவை மற்றும் வாசனையை முற்றிலும் மாற்றிவிடும். அரிசியில் இருக்கும் பூச்சிகளை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து எடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால், சில எளியமற்ற பயனுள்ள தீர்வுகளை பின்பற்றுவதன் மூலம் அரிசியில் வண்டுகள் பூச்சிகள் வருவதை தடுக்க முடியும். அது குறித்து இங்கு பார்க்கலாம்.

26
வெயிலில் உலர்த்தவும் :

பொதுவாக பூச்சிகள் ஈரப்பதமான சூழலில் மட்டுமே வாழும். எனவே, அரிசியில் இருக்கும் ஈரப்பதத்தை அகற்ற ஒரு சுத்தமான துணியில் அரிசியை பரப்பி, அதை சூரிய வெளிச்சத்தில் சுமார் 2-3 மணி நேரம் அப்படியே வைக்கவும். இப்படி செய்வது மூலம் அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராது.

36
பெருங்காயம் மற்றும் வினிகர் :

ஒரு கிண்ணத்தில் சிறிதளவு வெள்ளை வினிகர் ஊற்றி அதில் 1/4 ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து அந்த கிண்ணத்தை அரிசியை பரப்பி அதிலிருந்து வரும் வாசனை புழுக்கள் பூச்சிகளை விரட்டியடிக்கும். பிறகு அரிசியை காற்று புகாத ஒரு கண்டெய்னர் டப்பாவில் மாற்றவும்.

46
உப்பு பயன்பாடு :

அரிசியில் இருக்கும் ஈரப்பதத்தை அகற்ற அதில் சிறிதளவு கல் உப்பை துவலாம். இது தவிர, அரிசி இருக்கும் பாத்திரத்தின் மேற்புறம் அல்லது அடிப்பகுதியில் உப்பை போடவும். உப்பானது ஈரப்பதத்தை உறிஞ்சி அரிசியை உலர்ந்த நிலையில் வைத்து பூச்சிகள் வராமல் பார்த்துக் கொள்ளும்.

56
பிரியாணி இலை :

பிரியாணியில் இருந்து வரும் வாசனை வண்டு, பூச்சிகளுக்கு பிடிக்காது. எனவே அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று பிரியாணி இலைகளை போட்டு வைக்கவும்.

66
பூண்டு :

அரிசி இருக்கும் டப்பாவில் தோல் நீக்காத ஐந்து அல்லது ஆறு பூண்டு பற்களை போட்டு வைக்கவும். பூண்டிலிருந்து வரும் வாசனை வண்டு பூச்சிகளை விரட்டும். அவ்வப்போது பூண்டை மாற்றினால் வண்டு, பூச்சிகள் வராமல் அரிசி பாதுகாப்பாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories