சில உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் எந்த சூழ்நிலைகளும் பீர் குடிக்கவே கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள் இந்த பதிவில் யாரெல்லாம் பீர் குடிக்க கூடாது என்று பார்க்கலாம்.
பீர் உலகின் மிகவும் பிரபலமான மதுபானங்களில் ஒன்றாகும். சிலர் இதை புத்துணர்ச்சிக்காக குளிர்ச்சியாக அருந்துகின்றனர். இதில் ஆல்கஹால் அளவு குறைவாக இருந்தாலும், இதை அடிக்கடி குடிக்கும் பழக்கம் ஏற்பட்டால் உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் பீர் குடிப்பதால் கடுமையான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த பதிவில் யார் பீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.
25
செலியாக் நோய்
செலியாக் நோய் என்பது சிறு குடலைப் பாதிக்கும் ஒரு செரிமான நோயாகும். பீரில் குளூட்டன் அதிகமாக உள்ளது. எனவே, இந்த நோயாளிகள் பீர் குடித்தால் குடல் வீக்கம், வயிற்று எரிச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். செலியாக் நோய் உள்ளவர்கள் பீரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
35
எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள்
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பீர் ஒரு பெரிய தடையாகும். இதில் உள்ள அதிக கலோரிகளால், உடலில் கொழுப்பு சேர்கிறது. தொடர்ந்து பீர் குடிப்பவர்களுக்கு தொப்பை மற்றும் உடல் எடை அதிகரிக்கும். எனவே, உடல் எடையைக் குறைப்பவர்கள் பீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
நீரிழிவு நோயாளிகள் அல்லது ப்ரீடயாபடீஸ் நிலையில் உள்ளவர்கள் பீர் குடித்தால், இரத்த குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிக்கும். பீரில் உள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் காரணமாக இன்சுலின் எதிர்ப்பு அதிகரித்து, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது. எனவே, இவர்கள் பீரை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
55
நெஞ்செரிச்சல்
நெஞ்செரிச்சல் அல்லது அமில ரிஃப்ளக்ஸ் பிரச்சினை உள்ளவர்கள் பீர் குடித்தால் நிலைமை மோசமடையும். எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) உள்ளவர்களுக்கு, பீர் குடிப்பது வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை அதிகரிக்கும். எனவே, இவர்கள் மது அருந்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.